search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple cows"

    • மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் கோவில் நிர்வாகத்தால் மாடுகளை பராமரிக்க முடியவில்லை
    • இலவசமாக மாடுகளை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், சிர்சில்லா மாவட்டம், வெமுலவாடாவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக பசு மற்றும் எருதுக்களை தானமாக வழங்கி வருகின்றனர்.

    தானமாக பெறும் மாடுகளை வளர்ப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் கோசாலை அமைக்கப்பட்டது. முதலில் 300 மாடுகளை பராமரிக்கும் அளவு கொட்டகை அமைத்தனர்.

    பக்தர்கள் கோவிலுக்கு தானமாக வழங்கும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இதனால் தற்போது 2500-க்கும் மேற்பட்ட பசு மற்றும் மாடுகள் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் கோவில் நிர்வாகத்தால் மாடுகளை பராமரிக்க முடியவில்லை.

    தற்போது உள்ள கோசாலையில் 450 முதல் 500 மாடுகள் வரை மட்டுமே பராமரிக்க வசதிகள் உள்ளது.

    எனவே மீதமுள்ள மாடுகளை, ஏழை விவசாயிகள் மற்றும் இந்து அமைப்புகளுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

    அதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் வழங்கி வருகின்றனர். இலவசமாக மாடுகளை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    இதற்காக கலெக்டர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கோவில் செயல் அலுவலர், உதவி கோட்ட அலுவலர், வேளாண்மை அலுவலர், நகராட்சி ஆணையர், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

    அவர்களின் பரிந்துரையின் பேரில் மாடுகளை இலவசமாக வழங்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    • திருப்புவனம் பகுதியில் கோவில் மாடுகள் சாலைகளில் திரிகின்றன.
    • வாகனங்களை சேதப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மிக பெரிய பேரூராட்சி ஆகும். திருப்புவனத்தில் பஸ் நிலையம் இல்லாததால் மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் பஸ்கள், மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் இருந்து வரும் பஸ்கள் திருப்புவனம் மடப்புரம் மற்றும் சுற்றி உள்ள பல கிராமங்களுக்கு திருப்புவனம் வழியேதான் செல்கிறது. இதனால் காலைமுதல் இரவு வரை திருப்புவனம் சாலையில் போக்குவரத்து நெரிசல் இருக்கும். திருப்புவனம் பகுதியில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி விடப்பட்ட ஏராளமான காளைமாடுகள் தற்போது சாலை பகுதியிலும், பொதுமக்கள் கூடும் பஸ்நிறுத்தம், பேரூராட்சி, போலீஸ் நிலையம், மத்தியகூட்டுறவு வங்கி, சார்பதிவாளர் அலுவலம் ஆகிய இடங்க ளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக வலம்வருகிறது.

    சில சமயங்களில் மாடுகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு சாலைஓரங்களில் நிறுத்தி வைக்கபட்டுள்ள இருசக்கர வாகனங்களை சேதபடுத்திவரும் நிலையும் அடிக்கடி நடந்து வருகிறது.

    பஸ் நிறுத்தத்தில் நிற்கும் வெளியூர் பயணிகள் மாடுகள் திடீரென்று ஓடும் போது பொதுமக்கள் காயம் அடைந்துள்ளனர். சிலமாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வரும் போது கூட்டமாக வரும் மாடுகள் முட்டி சாலையில் விழுந்து ஒருவர் இறந்து போனார்.

    மாடுகளை ஆட்களை வைத்து பிடிக்க ஏற்பாடுகள் செய்து மாடுபிடிக்க முயல்பவர்களை காளைமாடுகள் முட்டவருவதால் பிடிக்க முடியாமலும் பேரூராட்சி நிர்வாகத்தினர் தினறிவருகின்றனர்.

    எனவே திருப்புவனம் பகுதியில் சுற்றி திரியும்கோவில் மாடுகளை கோசாலையில் அடைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×