search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thali chain flush"

    • விருத்தாசலத்தில் நடந்து சென்ற வங்கி பெண் ஊழியரிடம் தாலி செயினை மர்ம நபர் அறுத்து கொண்டு தப்பி ஓடி சென்றார்.
    • அதிர்ச்சி அடைந்த ஜோதி அவரை துரத்தி பிடிக்க முயன்றார்.

    கடலூர்:

    விருத்தாசலம் கல்லூரி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார், இவரது மனைவி ஜோதி(40). இவர் ஜங்ஷன் ரோட்டில் உள்ள தனியார் வங்கியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் பணி முடிந்து நடந்து வீடு திரும்புகையில், கல்லூரி நகரில் உள்ள விளையாட்டு அரங்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர் ஜோதியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயினை அறுத்து கொண்டு தப்பி ஓடி சென்றார்.

    அதிர்ச்சி அடைந்த ஜோதி அவரை துரத்தி பிடிக்க முயன்றார். ஆனால் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி மாயமாக மறைந்தார். இது குறித்து ஜோதி அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • பைக்கில் சென்ற பெண்ணின் தாலிச் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    • இரு சக்கர வாகனத்தில் சென்ற கொண்டிருந்தார்

    திருச்சி:

    திருச்சி பீமநகர் புதிய ராஜா காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரிக்கா. இவர் நேற்று காலை பறவைகள் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து சந்திரிகா கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    குடும்ப பிரச்சினையில் மனைவியை தாக்கி மாங்கல்யத்தை பறித்த கணவரின் செயல் சமயன்குடி காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் சமயன் குடிகாட்டை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 50). விவசாயி. இவரது மனைவி வளர்மதி பழனிவேல் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை பிரிந்து சென்று வேறு ஒரு பெண்ணுடன் வசித்து வருகிறார். வளர்மதியும், அவரது மகனும் தனியாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் பழனிவேல் நேற்று வளர்மதியுடன் தகராறு செய்து அவரது கழுத்தை நெரித்து அவர் அணிந்திருந்த மாங்கல்யத்தை பறித்ததுடன், அவர் வளர்த்து வந்த 2 ஆடுகளையும் இழுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி வளர்மதி ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் சமயன்குடி காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×