search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The youth"

    • கபிலர்மலை அருகே இருக்கூர், வலசுப்பாளை யம் பிரிவு சாலையில் உள்ள ஒரு கிணற்றில் கடந்த 13-ந் தேதி வாலிபர் பிணம் கிடப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சுமார் 25 அடி ஆழமுள்ள கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே இருக்கூர், வலசுப்பாளை யம் பிரிவு சாலையில் உள்ள ஒரு கிணற்றில் கடந்த 13-ந் தேதி வாலிபர் பிணம் கிடப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளை யத்தில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரி வித்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் உதவியுடன், சுமார் 25 அடி ஆழமுள்ள கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை போலீசார் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கிணற்றில் இறந்து கிடந்த வாலிபர், வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் கருதினர். இதையடுத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில், பீகார் மாநிலம், கிழக்கு சம்ரான், புபனர் பகுதியை சேர்ந்த கிசுன் மஜ்கி என்பவரது மகன் வீரேந்திர மஜ்சி (வயது 25) என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொண்டி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் ரகளை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இவர் ராமநாதபுரம் தொண்டி அருகே உள்ள திருவெற்றியூர் புதுப்பையூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள திருவெற்றியூர் புதுப்பையூரை சேர்ந்தவர் இளையராஜா. இந்து மக்கள் நல இயக்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவராக உள்ளார். இவரது மனைவி சசிகலா (27). சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவி வீட்டில் தூங்கினர். மாமனார்- மாமியார் திண்ணையில் உறங்கினர்.

    நள்ளிரவில் அதே ஊரைச் சேர்ந்த வல்மீகம் மகன் விக்னேசுவரன் இளையராஜா வீட்டு கதவை உடைத்து சசிகலாவிடம் ரகளை செய்தார். சசிகலா உள்பட வீட்டில் உள்ளவர்கள் கூச்சலிடவே விக்னேசுவரன் வீட்டின் பின்புறமாக ஓடி தப்பி விட்டார்.

    இதுகுறித்து சசிகலா தொண்டி போலீசில் புகார் செய்தார். முன் விரோதம் காரணமாக விக்னேசுவரன் இளையராஜா வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக தெரிகிறது. இந்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்பாஸ்கர் விக்னேசுவரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். நீதிபதி அவரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    • வீட்டில் யாரும் இல்லாத போது தனியாக இருந்த வசந்தியிடம் பிரகாஷ் எலக்ட்ரீசியன் பொருட்கள் தேவைப்படுகிறது எனக்கூறி வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு அழைத்து சென்றார்.
    • பின்னர் மயக்கம் தெளிந்த வசந்தி கூச்சலிட பிரகாஷ் அருகில் இருந்த இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கி தங்க நகைகளுடன் தப்பி ஓட்டம் பிடித்தார்.

    பவானி, செப். 13-

    பவானி அருகே உள்ள மாமரத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது மனைவி வசந்தி (39). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    பில்டிங் காண்ட்ரா க்டரான வெங்கடேஷ் தனது கட்டிடங்களின் எலக்ட்ரீசியன் வேலை செய்ய மனைவி வசந்தியின் தங்கை மகனான சேலம் மாவட்டம் கொங்க ணாபுரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (25) என்பவரை வீட்டில் தங்க வைத்து வேலைக்கு வைத்து இருந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தனியாக இருந்த வசந்தியிடம் பிரகாஷ் எலக்ட்ரீசியன் பொருட்கள் தேவைப்படுகிறது எனக்கூறி வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு அழைத்து சென்றார்.

    அப்போது திடீரென பிரகாஷ் அருகில் இருந்த வயரை எடுத்து கழுத்தை நெரித்து வசந்தியை மயக்கம் அடைய செய்தார். இந்நிலை யில் அவர் அணிந்திருந்த தாலி மற்றும் தங்க நகைகளை பிரகாஷ் திருடி சென்றார்.

    பின்னர் மயக்கம் தெளிந்த வசந்தி கூச்சலிட பிரகாஷ் அருகில் இருந்த இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கி தங்க நகைகளுடன் தப்பி ஓட்டம் பிடித்தார்.

    இதனையடுத்து வெளியே சென்று வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் தனது மனைவி ரத்த வெள்ளத்தில் வீட்டில் கிடந்ததை தொடர்ந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சித்தோடு போலீசாரிடம் புகார் அளித்தார்.

    சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்குப்பதிவு செய்து இச்ச சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். தலைமறைவாக இருந்த பிரகாஷை சித்தோடு போலீசார் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பிரகாஷ் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பல லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. அந்த கடனை அடைக்க சித்தி திருமணம் நிகழச்சிக்கு சென்று வந்த போது வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வயரால் கழுத்தை நெரித்து மயக்க மடைய செய்து உள்ளார்.

    மயக்கம் தெளிந்த வசந்தி கூச்சல் இட்டதால் பின்னர் இரும்பு கம்பியால் தாக்கி சித்தியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி மற்றும் தங்க நகைகள் 19 பவுனை திருடி தப்பி ஓட்டம் பிடித்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து சித்தோடு போலீசார் பிரகாசை கைது செய்து கோபி மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

    ×