search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Three death"

    விருதுநகர் அருகே அணையில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி சகோதரர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். #DrowningDeath
    விருதுநகர்:

    விருதுநகர் பழைய அருப்புக்கோட்டை சாலையில் உள்ள செந்திவிநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். பருப்பு மில் தொழிலாளி.

    இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது மகன்கள் ஹரிகரன் (வயது 14), ஆதிசே‌ஷன் (10) இருவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9 மற்றும் 5-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    விருதுநகரில் தற்போது பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக கலைச்செல்வியின் தம்பி சோலைமுருகன் (40) மதுரையில் இருந்து வந்திருந்தார்.

    அவர் இன்று காலை மருமகன்கள் 2 பேரையும் அழைத்துக்கொண்டு விருதுநகர் குல்லூர்சந்தை அணைக்கு சென்றார். அங்கு சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அதனை பார்த்ததும் சோலைமுருகன் உள்பட 3 பேரும் குளிக்க ஆசைப்பட்டனர்.

    அதன்படி சோலை முருகன், ஹரிகரன், ஆதிசே‌ஷன் அகியோர் தண்ணீரில் இறங்கி குளித்தனர். அப்போது ஆழமான இடத்திற்கு சென்றதால் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.

    அவர்களை அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் சோலை முருகன் உள்பட 3 பேரும் நீரில் மூச்சு திணறி இறந்தனர். அவர்களது உடலையே மீட்க முடிந்தது. பலியான சோலைமுருகன், மதுரையில் பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். சூழக்கரை போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.  #DrowningDeath



    மராட்டியத்தில் தண்டவாள பராமரிப்பு பணியின்போது ரெயில் மோதி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானார்கள். #Maharashtra #TrainAccident #TejasExpress
    மும்பை:

    மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள ஜிட்டே ரெயில் நிலைய பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அந்த நேரத்தில் கோவாவில் இருந்து மும்பை நோக்கி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, பணியில் இருந்த 3 தொழிலாளர்கள் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தனர்.

    இதில், ரெயில் கண் இமைக்கும் நேரத்தில் தொழிலாளர்கள் மீது மின்னல் வேகத்தில் மோதிச்சென்றது. இதில், தூக்கி வீசப்பட்டு தொழிலாளர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 
    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Denguefever
    மதுரை:

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நாள்தோறும் ஏராளமானோர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிலர் பலியாகி வருகின்றனர்.

    அலங்காநல்லூர் கம்மாபட்டியைச் சேர்ந்த வர் ராஜபாண்டி மகன் கணேஷ் பாண்டி (வயது8). உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அவருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 12 மணிக்கு கணேஷ்பாண்டி பரிதாபமாக இறந்தான்.

    வில்லாபுரம் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் துரைச்சாமி. இவரது மகன் சரவணன் (39) தொழிலாளி. பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட இவர் நள்ளிரவு 1 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.

    இதே போல் கமுதியைச் சேர்ந்த மூக்கம்மாள் (57) வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்தும் பல னின்றி அதிகாலை 3 மணிக்கு இறந்தார்.

    இந்த நிலையில் மேலும் 116 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 98 பேர் வைரஸ் காய்ச்சலாலும், 15 பேர் டெங்கு காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Denguefever
    திருச்சி அருகே நள்ளிரவில் கார் கவிழ்ந்த விபத்தில் கணவன், மனைவி உள்பட 3 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Caraccident
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த துறைமங்கலம் அருகே உள்ள மணியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 65). இவரது மனைவி சின்னம்மாள் (58). இவர்களது மகன் கண்ணன்.

    மதுரையில் ஜவுளி தொழில் செய்து வரும் இவர் அங்கேயே மனைவியுடன் வசித்து வருகிறார். அவ்வப்போது மதுரைக்கு அவரது பெற்றோர் சென்று மகனை சந்தித்துவிட்டு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் கண்ணன் தனது மைத்துனரான முசிறி அய்யம்பாளையம் குடித்தெருவை சேர்ந்த ஜெயராமனிடம், பெற்றோரை மதுரைக்கு காரில் அழைத்து வருமாறு கூறினார்.

    அதன்படி நேற்று இரவு சுமார் 10 மணியளவில் ஜெயராமன், வெள்ளையன், சின்னம்மாள் ஆகிய 3 பேரும் ஒரு காரில் மணியம்பட்டியில் இருந்து மதுரைக்கு புறப்பட்டனர். காரை ஜெயராமன் ஓட்டினார்.

    அவர்கள் திருச்சியை தாண்டி தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். துவரங்குறிச்சியை அடுத்த யாகபுரம் என்ற இடத்தில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் அங்குள்ள பாலத்தின் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    பல முறை உருண்ட அந்த காருக்குள் இருந்த 3 பேரும் அலறினர். இதைபார்த்த அந்த வழியாக சென்று வாகன ஓட்டிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்தவர்களை போராடி மீட்டனர்.

    இந்த கோர விபத்தில் காருக்குள் இருந்த 3 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள். பின்னர் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகனை பார்க்க சென்ற போது விபத்தில் சிக்கி தம்பதி பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  #Caraccident
    ×