என் மலர்
நீங்கள் தேடியது "tobacco"
- பசுவந்தனை அருகே உள்ள புங்கவர் நத்தம் கிராமத்தில் போலீசார் மளிகை கடைகளில் சோதனை நடத்தினர்
- தடை செய்யப்பட்டிருந்த புகையிலை பாக்கெட் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது
புதியம்புத்தூர்:
பசுவந்தனை அருகே உள்ள புங்கவர் நத்தம் கிராமத்தில் பசுவந்தனை போலீசார் மளிகை கடைகளில் புகையிலை விற்கப்படுகிறதா என்று சோதனை நடத்தினர்.
அப்போது தடை செய்யப்பட்டிருந்த புகையிலை பாக்கெட் விற்பனை செய்த காமராஜ் (வயது42), சேர்மராஜ் (50) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செங்கிப்பட்டி அருகில் உள்ள முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலை அருகே கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
- இதன் மதிப்பு சுமார் 1,80,000 ருபாய் ஆகும். இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வல்லம்:
தஞ்சை -திருச்சி சாலையில் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி கொண்டு வந்து கொண்டிருப்பதாக செங்கிப்பட்டி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமோகன் மேற்பார்வையில், செங்கிப்பட்டி இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்இன்ஸ்பெக்டர் ரெத்தினசாமி மற்றும் போலீசார் தஞ்சை -திருச்சி சாலையில் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்தினர்.
இந்நிலையில் செங்கிப்பட்டி அருகில் உள்ள முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலை அருகே கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து போலீஸாரை பார்த்ததும் காரில் இருந்த இரண்டு பேர் காரை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து காரை போலீஸார் சோதனை மேற்கொண்ட போது அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
கார் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 170 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் மதிப்பு சுமார் 1,80,000 ருபாய் ஆகும். இது குறித்து செங்கிப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் தப்பி ஓடிய இருவரையும் போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- புகையிலை பொருட்கள் விற்ற பெட்டி கடைக்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பெட்டிகடை உரிமையாளர் பாண்டியராஜனை(33) போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது அருப்புக்கோட்டை- மதுரை ரோடு ராமலிங்கா நகரில் உள்ள பெட்டி கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 808 புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெட்டிகடை உரிமையாளர் பாண்டியராஜனை(33) போலீசார் கைது செய்தனர்.
புகையிலை பாக்கெட்டுகளை சப்ளை செய்த சீனி என்பவரை தேடி வருகின்றனர். இதேபோல் பாலவனத்தம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது தெற்கு பட்டியை சேர்ந்த ஆனந்தகுமார் (32) என்பவர் புகையிலை பொருட்களை கடத்தியதாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.34 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- போலீசார் உப்பளிப்பாளையத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்று சோதனையில் ஈடுப்பட்டனர்.
- குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் குவியல் குவியலாக 500 கிலோ சிக்கின.
அவினாசி :
அவினாசி அருகேயுள்ள உப்பளிப்பாளையத்தில் மதியழகன் (வயது38) என்பவர் மளிகை கடத்தி வருகிறார். இவர் கடையில் வைத்து குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக புகையிலை தடுப்பு தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தனிப்பிரிவு டி.எஸ்.பி நரசிம்மன் தலைமையிலான போலீசார் உப்பளிப்பாளையத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்று சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் குவியல் குவியலாக 500 கிலோ சிக்கின. அதனை பறிமுதல் செய்த போலீசார் மதியழகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மேச்சேரியில் இருந்து சாத்தப்பாடி செல்லும் வழியில், சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனை செய்தார்.
- ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவன் தேவ் (வயசு 24) என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகிறார். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேச்சேரி இன்ஸ்பெக்டர் சண்முகம் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது மேச்சேரியில் இருந்து சாத்தப்பாடி செல்லும் வழியில், சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனை செய்தார்.
அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து அந்த வண்டியின் ஓட்டுநர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவன் தேவ் (வயசு 24) என்பவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகிறார். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
- களக்காடு அருகே உள்ள கோவிலம்மாள்புரத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக களக்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் கோவிலம்மாள்புரம், தெற்கு தெருவை சேர்ந்த சுடலைக்கண்ணு (வயது30) என்பவரின் கடையை சோதனை செய்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள கோவிலம்மாள்புரத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக களக்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் கோவிலம்மாள்புரம், தெற்கு தெருவை சேர்ந்த சுடலைக்கண்ணு (வயது30) என்பவரின் கடையை சோதனை செய்தனர்.
அப்போது, கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுடலைகண்ணுவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 900 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களையும் போலீசார்பறிமுதல் செய்தனர்.
- ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.3.84 லட்சம் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
- இந்த சம்பவம் குறித்து கேணிக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் புலிக்காரத் தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 57). இவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்துள்ளது.
இதையடுத்து தினமும் பாரிவள்ளல் பள்ளி அருகே பான் மசாலா விற்பனை செய்வரிடம் வாங்கி உபயோகித்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் புகையிலை போட்டதும் திடீரென சண்முகத்திற்கு மயக்கம் ஏற்பட்டு வயிறு வலி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று புகையிலை விற்பனை செய்தவரிடம் விசாரணை நடத்தினர்.
அவரது தகவலின் பேரில் ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த கணேஷ் புகையிலை 396 கிலோ, கூல் லிப் புகையிலை 35 கிலோ, விமல் புகையிலை 61 கிலோ ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3,84,004. இது தொடர்பாக ராமநாதபுரம் பாசிப்பட்டரை தெருவை சேர்ந்த ஆதில் அமீன் (40), வைகை நகரைச் சேர்ந்த பாசித் ராஜா, தெற்கு தெரு நிஷார் அகமத் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஆதில் அமீனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
- லீஸ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் கண்ணன், விஜயகுமார் ஆகியோர் ரெயில்களில் சோதனை மேற்கொண்டனர்.
- பையை போலீசார் பிரித்து பார்த்ததில் அதில் 10 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
திருப்பூர் :
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் கண்ணன், விஜயகுமார் மற்றும் போலீசார் சவுந்தராஜன், சையது முகமது ஆகியோர் ரெயில்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 1-வது பிளாட்பா ரத்தில் வந்து நின்ற ரெயிலின் பொதுப்பெட்டியில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது. அந்த பையை போலீசார் பிரித்து பார்த்ததில் அதில் 10 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. ஆனால் புகையிலை பொருளை யார் கடத்தி வந்தனர்? என்பது தெரியவில்லை. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அந்தோணி செல்வம் என்பவரை போலீசார் தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரித்தனர்.
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சுரண்டை:
சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி தலைமையிலான போலீசார் நேற்று அச்சங்குன்றம் சாலையில் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
புகையிலை
அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த சுரண்டை அருகே உள்ள மரியதாய்புரம் வடக்கு தெருவை சேர்ந்த அந்தோணி செல்வம்(வயது 46) என்பவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் மொபட்டில் இருந்த மூட்டையை பிரித்து பார்த்தனர்.
அப்போது அதில் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது. அவரை சோதனை செய்ததில் புகையிலை விற்ற பணம் ரூ.23 ஆயிரம் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவற்றையும், மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.
கைது
தொடர்ந்து அந்தோணி செல்வம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அச்சங்குன்றம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சந்திரசேகர்(38) என்பவருக்கு சொந்தமான குடோனில் புகையிலையை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 153 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.75 ஆயிரம் என்று கூறப்படுகிறது. மேலும் சந்திரசேகரையும் போலீசார் கைது செய்தனர்.
- புகையிலை பொருட்கள் விற்பவர்களை கண்டறிய தேடுதல் வேட்டை நடத்தினர்.
- கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பதாக கோத்தகிரி போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது இதனை தொடர்ந்து கோத்தகிரி உதவி காவல் ஆய்வாளர் சேகர் தலைமையிலான போலீசார் புகையிலை பொருட்கள் விற்பவர்களை கண்டறிய தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கோத்தகிரி கப்பட்டி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையிலும் பாண்டியன்பர்க் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலும் புகையிலை பொருட்கள் விற்பதை கண்டறிந்து அங்கு சென்ற போலீசார் அந்த கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அதனை விற்பனை செய்ததாக கப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில் மற்றும் கோத்தகிரி கார்செலி பகுதியை சேர்ந்த ரமேஷ் தாவுத் என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
- மதுரையில் காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் சிக்கினர்.
- புகை யிலை பொருட்களை வாக னத்தில் கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மதுரை
மதுரை மாநகரில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீ சார் சுப்பிரமணியபுரம் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அங்கு டாட்டா சுமோ வாகனம் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகத்தின் பேரில், அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, 240 கிராம் மதிப்புடைய 70 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
போலீசார் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் மதுரையை சேர்ந்த ராஜேஷ் (32), காசி விஸ்வநாதன் (31) என்பது தெரியவந்தது. காசிநாதன் மீது புகையிலை பொருட்கள் கடத்தியதாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை வாக னத்தில் கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பாராளுமன்றம், சட்டசபை போல கிராமசபையும் மிக முக்கிய அமைப்பாகும்
கோவை,
குடியரசு தின விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள 228 பஞ்சாயத்துகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. பெரும்பாலான ஊராட்சிகளில் கஞ்சா, புகையிலை தங்கள் கிராமங்களில் விற்க அனுமதியில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
கிணத்துக்கடவு ஒன்றியம் அரசம்பாளையம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் சமீரன் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் கிராம மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துதல், பயனாளிகளை தேர்ந்தெடுத்தல் உள்ளிட்ட முடிவுகளை கிராமசபை கூடி தான் முடிவெடுக்கிறது. பாராளுமன்றம், சட்டசபை போல கிராமசபையும் மிக முக்கிய அமைப்பாகும் என்றார். கூட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவோம் மற்றும் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
சூலூரை அடுத்த செலக்கரச்சல் கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா மற்றும் புகையிலை பொருள் விற்க அனுமதிப்பதில்லை என்றும், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இவற்றை பயன்படுத்துவதில்லை என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கோவை சின்னதடாகம் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகள் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து மூடப்பட்டு உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
இந்தநிலையில் நஞ்சுண்டாபுரம், சின்னதடாகம், 24 வீரபாண்டி போன்ற செங்கல் தொழில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபை கூட்டங்களில் செங்கல் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் சார்பில் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து ஒற்றைய சாளரமுறையில் செங்கல் தொழிலை அனுமதிக்க வேண்டும் என வலயுறுத்தப்பட்டது.
அரிசிபாளையம் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் போதை பொருள் இல்லாத பகுதியாக மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.