என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "train test run"
- கடந்த 17-ந்தேதி ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
- புதிய பாலத்தை சரக்கு ரெயில் கடந்து சென்றது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் சுமார் 2 கி.மீ. தூரம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மையப் பகுதியில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான திறந்து மூடும் தூக்குப்பாலம் உள்ளது.
இந்த நிலையில், புதிய பாம்பன் பாலத்தில் கடந்த 17-ந்தேதி ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. மண்டபம் முதல் ராமேஸ்வரம் வரை 14 பெட்டிகளுடன் சரக்கு ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது 90 கி.மீ. வேகத்தில் புதிய பாலத்தை சரக்கு ரெயில் கடந்து சென்றது.
இந்த நிலையில், புதிய பாம்பன் பாலத்தில் நடைபெற்று வரும் பணிகளை தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.எம்.சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த புதிய பாலத்தில் வரும் நவம்பர் மாதத்திற்குள், மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
#WATCH | Tamil Nadu: Southern Railway General Manager RN Singh inspected the new railway bridge constructed at Pampan, in Rameswaram. pic.twitter.com/Q7gUi49zQD
— ANI (@ANI) October 22, 2024
- ரெயிலால் விமானத்துக்கு நிகரான வேகத்தில் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.
- புல்லட் ரெயில் மூலம் பெய்ஜிங்கிலிருந்து-ஷாங்காய்க்கு 4.18 மணி நேரத்தில் செல்ல முடியும்.
பெய்ஜிங்:
சீன அரசு அதிவேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்லூப் ரெயிலை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு டத்தோங் நகரில், இதற்கு என்று 2 கி.மீ தொலைவுக்கு வழித்தடத்தை உருவாக்கியது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் அதிவேக ரெயில் சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
இந்த அதிவேக ரெயில் மாக்லேவ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல் படக் கூடியது. இந்த ரெயிலின் சக்கரம் தண்டவாளத்துடன் உராய்வு கொள்ளாது. இதனால், இந்த ரெயிலால் விமானத்துக்கு நிகரான வேகத்தில் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.
தற்போது 2 கி.மீ வழித் தடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இந்த ரெயில் எதிர்பார்த்த வேகத்தை அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஷாங்சி மாகாண அரசு மற்றும் சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில கழகம் இணைந்து அதிவேக ரெயில் திட்டத்தை மேற் கொண்டு வருகிறது.
அதிவேக ரெயில் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் சீனத் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் இடையே உள்ள 1,200 கி.மீ தூரத்தை 90 நிமிடங்களில் கடக்க முடியும். தற்போது சீனாவில் பயன்பாட்டில் இருக்கும், மணிக்கு 350 கி.மீ வேகத்தில் செல்லும் புல்லட் ரெயில் மூலம் பெய்ஜிங்கிலிருந்து-ஷாங்காய்க்கு 4.18 மணி நேரத்தில் செல்ல முடியும்.
- மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்டு வரும் ரெயிலை, போடி வரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- ரெயிலை இயக்குவதற்கு முன் செய்யப்பட வேண்டிய சிக்னல் செக்கிங், என்ஜின் சோதனை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
மதுரை:
மதுரை-போடி இடையேயான 90.4 கிலோமீட்டர் தூர மீட்டர் கேஜ் ரெயில் பாதையை, அகல ரெயில் பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக இந்த வழித்தடத்தில் கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
அகல ரெயில்பாதை அமைக்கும் பணி முதலில் தொய்வாக நடந்து வந்தது. பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டது. மதுரை-போடி இடையிலான மீட்டர் கேஜ் ரெயில் பாதை அகற்றப்பட்டு, அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது.
இந்த பணி 12 ஆண்டுகள் நடந்து வந்த நிலையில், மதுரை-தேனி இடையிலான அகல ரெயில் பாதை பணி முற்றிலும் முடிவடைந்தது. இதையடுத்து மதுரை-தேனி இடையே அமைக்கப்பட்ட அகல ரெயில் பாதையில் கடந்த ஆண்டு மே மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இதையடுத்து தேனியில் இருந்து போடி வரையிலான அகல ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்தை தொடங்குவதற்காக, அந்த வழித்தடத்தில் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. 15 கிலோமீட்டர் தொலைவிலான அந்த வழித்தடத்திலும் அகல ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு முற்றிலும் முடிந்தது.
இதனால் மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்டு வரும் ரெயிலை, போடி வரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரெயிலை இயக்குவதற்கு முன் செய்யப்பட வேண்டிய சிக்னல் செக்கிங், என்ஜின் சோதனை ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
தென்மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையிலான குழுவினரும் தேனி-போடி இடையேயான அகல ரெயில் பாதையில் கடந்த ஜனவரி மாதம் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து பிப்ரவரி மாதம் மதுரை-போடி இடையே அகல ரெயில் பாதையில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மதுரை-போடி இடையே பயணிகள் ரெயில் மட்டுமின்றி, சென்னை சென்ட்ரலில் இருந்து காட்பாடி வழியாக மதுரைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் போடி வரை செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ரெயில்கள் இயக்கப்படும் நேரமும் ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அறிவித்தபடி பிப்ரவரி மாதம் மதுரை-போடி இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில், நாளை (15-ந்தேதி) முதல் போடி வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் சென்னை-மதுரை இடையே வாரம் மூன்று முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் போடி வரை நீட்டிக்கப்படும் என்றும், இந்த ரெயில் சேவையும் நாளை முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. சென்னையில் இருந்து நாளை புறப்படும் எக்ஸ்பிரசில் நாளை மறுநாள் மதுரைக்கு வந்து தேனி செல்கிறது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில், மதுரை-போடி இடையேயான அகல ரெயில் பாதையில் இன்று அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதிவேக சோதனை ஓட்ட ரெயில், மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 10 மணி அளவில் புறப்பட்டது.
110 கிலோமீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. மதியம் 11.15 மணியளவில் போடி ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு, மதியம் மதுரைக்கு வந்தடைந்தது.
அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதால் மதுரை-போடி இடையேயான வழித்தடத்தில் ரெயில் வந்து செல்லும் நேரங்களில் தண்டவாள பகுதியில் மக்கள் யாரும் செல்லக்கூடாது என்று ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்ட ரெயில் போடி வரை இயக்கப்படுவதால், தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு நாளை நிறைவேற உள்ளது.
- 160 பயணிகளுடன் இயக்கி வெற்றி.
- சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்றன.
ஊட்டி,
நீலகிரி மலை ரயிலில் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் புகை மற்றும் கரித்துகள்களில் இருந்து வெளியேறும் நெருப்புத் துகள்களால் தீ விபத்துகள் நேரிடாமல் தடுக்கும் வகையிலும், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாகவும் குன்னூா் ெரயில்வே பணிமனையில் தலைமை மெக்கானிக் மாணிக்கம் தலைமையிலான குழு, டீசலை எரிபொருளாக கொண்டு நீராவி மூலம் இயங்கும் 2-வது என்ஜினை குன்னூரில் வடிவமைத்திருந்தது.
அந்த என்ஜின் முதல்முறையாக 160 பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூா் ெரயில் நிலையம் வரை இயக்கப்பட்டது. ஆசியாவின் மிக நீண்ட பல் சக்கரத் தண்டவாள அமைப்புடனும், யுனெஸ்கோ அமைப்பு சாா்பில் உலகப் பாரம்பரிய அந்தஸ்துடனும் நூற்றாண்டுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது நீலகிரி மலை ரயில்.
ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் சுவிட்சா்லாந்தில் வடிவமைக்கப்பட்டு நீலகிரி மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட இந்த மலை ெரயில் என்ஜின்கள், மேட்டுப்பாளையம் முதல் குன்னூா் வரை நீராவி மூலம் மட்டுமே வரை இயக்கப்பட்டு வந்தது. நிலக்கரியை எரிபொருளாக கொண்டு பல ஆண்டுகளாக மலை ெரயிலை இயக்கி வந்தனா். நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் அதிலிருந்து வெளியேறும் புகையின் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாலும், கரித்துக ள்களில் இருந்து வெளியேறும் நெருப்புத் துகள்கள் வனப் பகுதிகளில் தீ விபத்துகளை ஏற்படுத்தும் சூழல் உள்ளதாலும், பா்னஸ் ஆயிலை எரிபொ ருளாக கொண்டு இயங்கும் வகையில் என்ஜினில் மாற்றம் செய்யப் பட்டது.
பின்னா் காற்று மாசைக் குறைக்கும் முயற்சியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் டீசலை எரிபொ ருளாக கொண்டு நீராவி மூலம் இயங்கும் வகையில் முதல் மலை ெரயில் என்ஜின் திருச்சி பொன்மலை ெரயில்வே பணிம னையில் வடிவமை க்கப்பட்டது.
இது வெற்றி பெற்றதைத் தொடா்ந்து இரண்டா வதாக டீசலை எரிபொ ருளாக கொண்டு நீராவி மூலம் இயங்கும் என்ஜின் தயாரிக்கப் பட்டு சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்