என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Varieties of Rice"
- வேளாங்கண்ணி பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவாகும்.
- முட்டை வறுவல் செய்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
ஹை பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம பார்க்க இருப்பது கட்டு சோறு செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம். இந்த கட்டு சோறு நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவாகும். இப்பொழுது உள்ள குளிருக்கு நாவிற்கு இதமாக இந்த கட்டு சோறு மற்றும் அதற்கு ஏற்ற முட்டை வறுவல் செய்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் இதனை வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். சரி வாங்க இந்த கட்டு சோறு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 1½ டேபிள் ஸ்பூன்
அரிசி – ஒரு கப்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை – இரண்டு கொத்து
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு – 10 பல்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
பொடித்த சீரகம் – அரை டீஸ்பூன்
பொடித்த மிளகு – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் பால் – ஒரு கப்
புளிக்கரைத்த நீர் – கால் கப்
தண்ணீர் – 1¾ கப்
செய்முறை
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு செய்து பொரியவிடவும். கடுகு, கடலை பருப்பு புரிந்துக்கொண்டு இருக்கும் போதே அதனுடன் காய்ந்த மிளகாயை சிவக்க வதக்கவும். கடலை பருப்பு ஓரளவு சிவந்து வந்த பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை பொடிதாக மற்றும் நீளமாக நறுக்கியதை அவற்றில் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கிக்கொண்டு இருக்கும் போதே அதனுடன் 10 பல் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதனுடன் கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டும் வதங்கி வந்ததும் மஞ்சள் தூள், தனி மிளகாய் தூள், பொடித்த சீரகம் மற்றும் மிளகு பொடி சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மசாலாவை 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அரிசி வேகவைப்பதற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும், ஒரு கப் அரிசிக்கு ஒரு கப் தேங்காய் பால் மற்றும் கால் கப் அளவிற்கு கரைத்த புளித்தண்ணீருடன் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஊற்றவும். தண்ணீர் நன்கு கொதி வைத்ததும் ஏற்கனவே ஊறவைத்துள்ள அரிசியை வடிகட்டி அரிசியை சேர்க்கவும்.
அரிசியை சேர்த்த பிறகு தேவையான அளவு உப்பு செய்து நன்றாக ஒரு முறை கிளறிவிட்டதும் குக்கரை மூடி ஐந்து விசில் விட்டு வேகவைக்கவும். ஐந்து விசில் வந்தபிறகு அடுப்பை அணைத்து குக்கரில் உள்ள பிரஷர் அடங்கும் வரை காத்திருங்கள். குக்கரில் பிரஷர் அடைங்கிய பிறகு திறந்து பார்க்கவும். சாதம் நன்றாக வெந்திருக்கும் நல்ல வாசனையாக கட்டு சோறு தயாராகிருக்கும்.
- பராம்பரிய இயற்கை சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
- பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாகப்பட்டினம்:
திருக்குவளையில் தேசிய அளவிலான 17-வது நெல் திருவிழா நடைபெற்றது.
கிரியேட் நமது நெல்லை காப்போம் மற்றும் சேவாலயா ஏரொட்டி வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம் நிறுவனம் இணைந்து நடத்திய நெல் திருவிழாவில் பராம்பரிய இயற்கை சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் மாப்பிள்ளை சம்பா, தங்கச்சம்பா, சீரக சம்பா, தூயமல்லி போன்ற பாரம்பரிய நெல் விதைகள் 100 விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கிரியேட் -நமது நெல்லை காப்போம் திட்ட இயக்குனர் சுரேஷ் கண்ணா, சேவாலயா தொண்டு நிறு வன தலைவர் முருகப்பெருமாள், திருக்குறளை ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன், நமது நெல்லை காப்போம் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பாரம்பரிய நெல் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது.
- விவசாயிகள் இந்த ஆண்டு இயற்கை விவசாயம் செய்வதாக உறுதியேற்றுக் கொண்டனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூரில் விதைகளே பேராயுதம் இயற்கை விவசாயிகள் சங்கம் சார்பில் 3 ஆம் ஆண்டு நெல் திருவிழா நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் ஆறுமுகம், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பாலன் அனைவரையும் வரவேற்றார்.
இயற்கை விவசாயம் மற்றும் சூழலியல் என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் பாண்டித்துரை உரையாற்றினார்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இயற்கை விவசாயிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அழிந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து விவசாயிகளை சென்றடையும் நோக்கில் பாரம்பரிய நெல் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தலா 2 கிலோ பாரம்பரிய நெல் வகைகள் வழங்கப்பட்டது .
விவசாயிகளும் இந்த ஆண்டு இயற்கை விவசாயம் செய்வதாக உறுதியேற்றுக் கொண்டனர். வேளாண் இயந்திரங்கள் மற்றும் மரபு சார்ந்த வேளாண் கண்காட்சியும் நடைபெற்றது.
முடிவில் பொருளாளர் ஜான்பால் நன்றி கூறினார்.
முன்னதாக கோட்டூர் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய மாட்டு வண்டி ஊர்வலத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஓட்டி வந்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
- சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் 8ம் ஆண்டு நெல் திருவிழா வரும் 14ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஒரு நாள் நிகழ்ச்சியாக நடைபெற இருக்கிறது.
- நமது மரபு நெல் ரகங்களை பயிரிடும் விவசாயிகளுக்காக சம்பா பட்டத்திற்கு தேவையான பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரகசம்பா, கிச்சலி சம்பா, காட்டுயாணம் மோன்ற 10 விதமான நெல் ரகங்கள் ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் 8ம் ஆண்டு நெல் திருவிழா வரும் 14 ஆம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஒரு நாள் நிகழ்ச்சியாக நடைபெற இருக்கிறது.
இது குறித்து நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளர் இரா.சுதாகர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
நமது மரபு நெல் ரகங்களை பயிரிடும் விவசாயிகளுக்காக சம்பா பட்டத்திற்கு தேவையான பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரகசம்பா, கிச்சலி சம்பா, காட்டுயாணம் மோன்ற 10 விதமான நெல் ரகங்கள் ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
தொடர்ந்து நடத்தப்படும் இவ்விழா இந்தாண்டு சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஊழியன்காரன் தோப்பு சபாநாயக முதலியார் இந்து மேல்நிலை பள்ளியில் நடக்க இருக்கிறது.
விவசாயிகளுக்கு மரபு நெல் ரக விதைகள் வழங்கி விழாவை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தொடங்கி வைக்கிறார்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக துணைவேந்தர் கதிரேசன் சிறந்த முறையில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கியும் சிறப்பிக்க உள்ளனர்.
மேலும் இயற்கை வேளாண்வ ல்லுனர்கள் சித்த மருத்துவர் தஞ்சை சித்தர் தமிழர் வேளாண்மை குறித்தும், ஞானபிரகாசம் தற்சார்பு பற்றியும், பாலகிருட்டிணன் இயற்கை உணவு குறித்தும் பேச உள்ளனர்.
சிவகாசி மாறன் பங்குபெறும் கருத்தரங்கம், இந்தியாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட மரபு நெல் ரகங்கள் கண்காட்சி, நஞ்சில்லா உணவு, பலா பழ ஆல்வா, பலா பழ ஐஸ் கிரீம், துணி பை, சித்தமருத்துவம், ஆகியவையும் காட்சிப் படுத்தப்படுகிறது.
இயற்கை விவசாயத்திற்கு தேவையான அனைத்து ஆலோசனை வழிமுறைகளையும் வழங்க உள்ளனர். நாட்டு காய்கறி விதைகள் விற்பனையும் நடைபெறும். விழாவில் பங்கேற்பவர்களுக்கு மதியம் பாரம்பரிய அரிசியில் செய்யப்பட்ட உணவுகள் வழங்கvப்படும் என கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்