என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Varushabhishekam"
- வருஷாபிசேகத்தை முன்னிட்டு ராக்கால அபிஷேகம் நடைபெறாது.
- இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருஷாபிசேகம் இன்று நடைபெற்றது.
இதை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 8 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசம் விமான தளத்திற்கு எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள் ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது.
மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாராதனையும், தொடர்ந்து சுவாமி குமர விடங்க பெருமான் தேவசேனா அம்பாள் தனித்தனி மயில் வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. வருஷா பிசேகத்தை முன்னிட்டு ராக்கால அபிஷேகம் நடைபெறாது. இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- அருணாசல ஈஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேகம் நடந்தது.
- ரிஷப வாகனத்தில் அம்பாள், சுவாமி சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் பழையபாளையம், புதுப்பாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூக பொதுநல பண்டிற்கு பாத்தியப்பட்ட செல்வ விநாயகர் கோவிலில் உள்ள அருணாச்சல ஈஸ்வரர் உண்ணாமலை அம்பாள் சாது அருணாச்சல சுவாமி ஆவணி மூலம் மற்றும் வருடாபிஷேக திருவிழா நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. கும்ப பூஜை, அபிஷேக பூஜை, அலங்கார தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மாலையில் திருக்கல்யாணம் நடந்தது. ரிஷப வாகனத்தில் அம்பாள், சுவாமி சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.
சப்பர வீதி உலாவை காவல் துணை கண்காணிப்பாளர் பிரீத்தி தொடங்கி வைத்தார். வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சார்லஸ் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பொதுநலப் பண்டு நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- இக்கோவிலில் 10-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
- ஏகாதச ருத்ர ஜப ஹோம அபிஷேக ஆராதனை நடந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கடுவெளி கிராமத்தில் மங்களாம்பிகா சமேத ஆகாசபுரீஸ்வரர் தண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 10-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நேற்று காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மாலையில் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.
இன்று காலை கணபதி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மூல மந்திர , காயத்திரி மந்திர ஹோமங்கள், பூர்ணாஹூதி, மங்களாம்பிகை சமேத ஆகாசபுரீஸ்வரருக்கு ஏகாதச ருத்ர ஜப ஹோம அபிஷேக ஆராதனை நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை திருக்கல்யாணம் உற்சவம் , சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது.
- ஆத்தூர் வடக்கு ரதவீதி நல்ல பிள்ளையார் கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.
- பின்னர் கோவில் விமானத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது.
ஆத்தூர்:
ஆத்தூர் வடக்கு ரதவீதி நல்ல பிள்ளையார் கோவி லில் வருஷாபிஷேகம் நடை பெற்றது. விழாவையொட்டி காலை 7 மணிக்கு நடை திறக்கப்பட்டு மஹா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. பின்னர் கோவில் விமானத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து நல்லபிள்ளை யார் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடை பெற்றது. தொடர்ந்து பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடு களை ஆத்தூர் வடக்கு ரதவீதி நல்லபிள்ளையார் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- சாத்தான்குளம் புளியடி தேவிஸ்ரீ மாரியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா 2 நாள்கள் நடைபெற்றது.
- அம்மாள் அலங்கார சப்ப ரத்தில் எழுந்தருளி பிரகார வீதி உலா வந்தார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் புளியடி தேவிஸ்ரீ மாரியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா 2 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை கணபதி ஹோமம், மாலை முதல்கால யாக வேள்வி பூஜை, 2-ம் நாள் தர்மபெருமாள் யாக வேள்வி வருஷாபிஷேகம், தொடர்ந்து புளியடி தேவிஸ்ரீமாரியம்மன் சிறப்பு அபிஷேகம், கோபுர கலசம், தேவி ஸ்ரீமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து அம்மாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. அம்மாள் அலங்கார சப்ப ரத்தில் எழுந்தருளி பிரகார வீதி உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்