என் மலர்
நீங்கள் தேடியது "vehicles"
- 422 வாகனங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- அரசின் விதிமுறை களுக்கு உட்பட்டு வருகிற 24-ந்தேதி இந்த வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் உரிமம் கோரப்படாத 422 வாகனங்களில் 415 மோட்டார் சைக்கிள்களும், 7 நான்கு சக்கர வாகனங்களும் போலீ சாரால் கைப்பற்றப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசின் விதிமுறை களுக்கு உட்பட்டு வருகிற 24-ந்தேதி இந்த வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப் படுகிறது. ஏலத்தில் கலந்து கொள்வோர் முன்பணமாக ரூ.5 ஆயிரம் நெல்லை மாவட்ட ஆயுதப்படை வாகன பிரிவு அலுவலகத்தில் வருகிற 23-ந்தேதிக்குள் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனத்தை வாங்குவோர் முன்னதாகவே அதனை பார்வையிட்டு செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு ரூ1.40 கோடியில் வாங்கப்பட்ட ஹைடெக் மண் அகற்றும் வாகனங்கள் மேயர் தொடங்கி வைத்தார்.
- பாதாள சாக்கடைகளில் அடிக்கடி அடைப்பு கள் ஏற்படுவதை உடனடியாக சரிசெய்வதற்கு வாங்கப்பட்டுள்ளது.
மதுரை
மதுரை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிதிட்ட பணியின் கீழ் சாலைகள் அமைத்தல், மழைநீர் வடிகால்கள், பாதா ளச்சாக் கடை பணிகள், தெருவிளக்குகள் பராமரித்தல், தூய்மை பணிகள், கால்வாய்கள் தூர்வாருதல், மழைநீர் சேகரிப்பு கட்ட மைப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடைகளில் அடிக்கடி அடைப்பு கள் ஏற்படுவதை உடனடியாக சரிசெய்வதற்கு மாநகராட்சியில் கழிவுநீர் உறிஞ்சு வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது பாதாள சாக்கடை யில் ஏற்படும் மணல்களை மட்டும் பிரித்து உடனுக்குடன் எடுத்து அகற்றுவதற்கு 15 சி.எப்.சி. திட்டத்தின் கீழ் ரூ1.40கோடி மதிப்பீட்டில் 12 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு உள்ளது. அந்த வாகனங் களை மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் பயன்பாட்டிற்கு கொடி யசைத்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
இந்த புதிய வாகனத்தின் மூலம் மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடைகளில் ஏற்படும் மணல் அடைப்புகள் உடனுக்குடன் விரைந்து சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர்கள், நகர பொறியாளர் அரசு, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஷ்வரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- காலை 10:30 மணிக்கு தாராபுரம் போலீஸ் நிலைய வளாகத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்படுகிறது.
- டோக்கன் பெற்றுள்ளவர்கள் மட்டும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
தாராபுரம் :
தாராபுரம் தாலுகாவுக்குட்பட்ட தாராபுரம், மூலனூர், அலங்கியம் குண்டடம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது :- வழக்குகள் தொடர்பாக மொத்தம் 86 இருசக்கர வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரப்படாததால் அவைகள் தாராபுரம் வட்ட நிர்வாக நடுவர் மற்றும் தாசில்தாரால் வருகிற 5-ந் தேதி காலை 10:30 மணிக்கு தாராபுரம் போலீஸ் நிலைய வளாகத்தில் பொது இடத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்படுகிறது. ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்குச் சென்று அந்த வாகனங்களை பார்வையிடலாம்.
தாராபுரம் போலீஸ் நிலையத்தில் 6, அலங்கியம் போலீஸ் நிலையத்தில் 26, குண்டடம் போலீஸ் நிலையத்தில் 20, மூலனூர் போலீஸ் நிலையத்தில் 34 என இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் எடுப்பவர்கள் 5-ந் தேதி காலை 10 மணிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் ரூ.5 ஆயிரம் முன்வைப்புத் தொகை செலுத்தி டோக்கன் பெற்றுள்ளவர்கள் மட்டும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம். பின்னர் மீதி தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அடித்தளம், தரைத்தளம், முதல் தளம் என மூன்று பிரிவுகள் உள்ளது.
- 4 சக்கர வாகனங்கள் 30 எண்ணிக்கையில் நிறுத்தும் அளவுக்கு இட வசதி உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அதன்படி தஞ்சாவூர் காந்திஜி சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.15 கோடி மதிப்பில் காந்திஜி வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று வணிக வளாக கட்டுமான பணிகளை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகள் முடிந்த விவரங்களை கேட்டு அறிந்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
காந்திஜி வணிக வளாகம் மேம்படுத்துதல் கட்டுமான பணி பெருமளவில் முடிந்து விட்டது. விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.இதில் அடித்தளம், தரைத்தளம், முதல் தளம் என மூன்று பிரிவுகள் உள்ளது.
மொத்த பரப்பளவு 51992 சதுர அடி ஆகும். அடித்தளத்தில் 4 சக்கர வாகனங்கள் 30 எண்ணிக்கையில் நிறுத்தும் அளவுக்கு இட வசதி உள்ளது.
தரை மற்றும் முதல் தளங்களில் கடைகள் வரவுள்ளன. நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட விரைவிலே இந்த கட்டுமான பணிகள் முடிந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, கவுன்சிலர் மேத்தா, செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- தாலுகா அலுவலக வளாகத்துக்குள் கிளைச்சிறை, நீதிமன்றம், பொது சேவை மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.
- பொதுமக்கள் செல்வதற்கு கூட போதிய இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை கச்சேரி வீதியில் அமைந்துள்ள தாலுகா அலுவலக வளாகத்துக்குள் கிளைச்சிறை,நீதிமன்றம்,பொது சேவை மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.இந்தநிலையில் பல்வேறு சேவைகளை பெறுவதற்காக இங்கு வருபவர்கள் மட்டுமல்லாமல், வீதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாதவர்கள் கூட தாலுகா அலுவலக வளாகத்துக்குள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திச் செல்கின்றனர்.இதனால் இங்கு வரும் பொதுமக்கள் செல்வதற்கு கூட போதிய இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுதவிர தாசில்தார்,நீதிபதிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளின் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.அத்துடன் கிளைச்சிறைக்கு அருகில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சிறை வளாகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
எனவே தாலுகா அலுவலகத்துக்கு எதிரில் வாகனங்களை நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- இயக்க இயலாத வாகனங்களுக்கு கழிவுச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
- 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் கழிக்கப்பட்டு, புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு வருகின்றன.
உடுமலை :
மாநில அரசுத்துறை களில் அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்கள் தமிழக மோட்டார் வாகன பரா மரிப்புத்துறையால் பராமரிக்கப்படுகிறது.தவிர, பழுது நீக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள மாவட்டம் தோறும் தானியங்கி பணிமனைகளும், மண்டல துணை இயக்கங்களும் செயல்படுத்தப்பட்டு வரு கின்றன.
அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில், அரசுத்துறை வாகனங்களின் ஆயுள் கண்காணிக்கப்பட்டு இயக்க இயலாத வாகனங்களுக்கு கழிவுச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அவ்வகையில் உடு மலையில் மருத்துவம், வேளாண்மை, சுகாதார த்துறை, வருவாய் என பல்வேறு துறைகளின் உயரதிகாரிகளுக்கான வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக புதிய வாகனங்கள் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து உடுமலை யைச்சேர்ந்த அரசு வாகன ஓட்டுனர்கள் கூறிய தாவது:- மத்திய அரசின் காலாவதி வாகனச்சட்டப்படி, 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் கழிக்கப்பட்டு, புதிய வாகனங்கள் வாங்கப்ப ட்டு வருகின்றன.அதன்படி தமிழக அரசுத்துறைகளில் இயக்கப்படும் காலாவதி யான வாகனங்களுக்கு கழிவு சான்றளித்து பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.இந்த விபரம், மத்திய அரசின் https://parivahan.gov.in/parivahan/ என்ற இணையதளத்தில் உள்ளது.
இருப்பினும் அரசுத்துறைகளில் பழைய வாகனங்களே இயக்கப்ப டுகிறது.பரா மரிப்புச்செலவு அதிகரிப்பதால் அதற்கு மாற்றாக புதிய வாகனங்கள் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறி னர்.
- இந்த பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- காவலரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் எழுந்துள்ளது.
கோத்தகிரி,
கோத்தகிரி டானிங்டன் எம்ஜிஆர் சிலை சதுக்கம் பகுதியில் உள்ள சாலைகள் கோத்தகிரி நகரின் முக்கிய பகுதியாக உள்ளது.
கோத்தகிரியின் முக்கிய சுற்றுலா தலமான கொடநாடு காட்சி முனையை பார்ப்பதற்காக சமவெளிப்பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமான வாகனங்களில் வருகின்றனர்.
அவ்வாறு வரும் வாகனங்கள் அனைத்தும் டானிங்டன் எம்ஜிஆர் சதுக்கம் பகுதிக்கு வந்து, அதன் பின்னரே பிரிந்து செல்ல வேண்டும்.
இதனால் இந்த பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டமும் வாகன நெரிசலும் காணப்படும். இதுபோக உள்ளூர் மக்கள் பணி முடிந்து பஸ்சுக்காக காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக அளவில் திரண்டு நிற்பார்கள்.
இப்படி எப்போதும் பரபரப்பாகவும், வாக னங்கள் சென்று கொண்டி ருக்கும் இந்த சாலையின் அருகே டீக்கடை, மளிகை கடை, உணவகங்களும் உள்ளன.
இந்த கடைகளுக்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களையே சாலை யிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர்.
மேலும் இப்பகுதியில் தேநீர் அருந்த வரும் உள்ளூர் வாசிகள் தங்களின் நான்குசக்கர வாகனங்களை மணிக்கணக்கில் சாலையில் நிறுத்திவிட்டு வாகனத்தி னுள் அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டு இருப் பர்.
இதனால் இந்த பகுதியில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சில சமயம் பஸ் நிறுத்த இடமில்லாமல் சாலையின் நடுவிலேயே நிற்பதால் பின்னால் வரும் வாக னங்கள் ஒலி எழுப் பிக்கொண்டே இருக்கும். அப்போது பெண்கள் குழந்தைகள் பஸ்சில் ஏறுவதற்கு முன்பாகவே பஸ் நகர்ந்து விடும்.
அந்த சமயங்களில் அவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அவல நிலையும் காணப்படுகிறது. இதுகுறித்து பல முறை சமூக ஆர்வலர்கள் கோத்த கிரி போக்குவரத்து போலீ சாருக்கு தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. எனவே இனியாவது சம்மந்தப்பட்ட போக்கு வரத்து போலீசார் இந்த பகுதியில் நிரந்தரமாக ஒரு காவலரை பணியில் ஈடுப டுத்த வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் எழுந்துள்ளது.
- ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு சென்று அந்த வாகனங்களை பார்வையிடலாம்.
- மே 17-ந் தேதி காலை 10 மணிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் ரூ.5 ஆயிரம் முன் வைப்புத் தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.
காங்கயம்:
காங்கயம் போலீஸ் நிலையம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
காங்கயம் காவல் உட்கோட்டத்திற்குப்பட்ட காங்கயம் மற்றும் வெள்ளகோவில் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வழக்குகள் தொடர்பாக மொத்தம் 79 இருசக்கர வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரப்படாததால் அவை காங்கயம் வட்ட நிர்வாக நடுவர் மற்றும் தாசில்தாரால் வருகிற மே 17-ந் தேதி காலை 11 மணிக்கு காங்கயம் போலீஸ் நிலைய வளாகத்தில் பொது இடத்தில் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்படுகிறது.
ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு சென்று அந்த வாகனங்களை பார்வையிடலாம். காங்கயம் போலீஸ் நிலையத்தில் 62 வாகனங்களும், வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் 17 வாகனங்களும் என மொத்தம் 79 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன. ஏலம் எடுப்பவர்கள் அடுத்த மாதம் மே 17-ந் தேதி காலை 10 மணிக்குள் ஆதார் அடையாள அட்டையுடன் ரூ.5 ஆயிரம் முன் வைப்புத் தொகை செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
- தனியார் கல்லூரி பஸ் உட்பட 5 வாகனங்களுக்கு தகுதி சான்று புதுப்பிக்காமலும், வாகன வரி செலுத்தாமலும், பொதுசாலையில் இயக்கப் பட்டது கண்டறியப்பட்டு அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் மற்றும் கபிலர்மலை பகுதிகளில் நாமக்கல் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முருகன், உமா மகேஸ்வரி மற்றும் பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் தனியார் கல்லூரி பஸ் உட்பட 5 வாகனங்களுக்கு தகுதி சான்று புதுப்பிக்காமலும், வாகன வரி செலுத்தாமலும், பொதுசாலையில் இயக்கப் பட்டது கண்டறியப்பட்டு அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வரும் வாகனங்களை, பலர் வாடகை வாகனங்களாக இயக்குவதாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் அளிக்கப்பட்ட புகார் மனு அடிப்படையிலும் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப் பட்டது.
இதே போல் திடீர் ஆய்வு நடத்தி வரி ஏய்ப்பு செய்யும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடத்தொடங்கியது.
- வாகன ஓட்டிகள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.
திருப்பூர் :
திருப்பூரின் முக்கிய சாலையாக குமரன் சாலை உள்ளது. திருப்பூர் பழைய பஸ் நிலையம், காங்கயம் ரோடு, தாராபுரம் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல இந்த வழியாகத்தான் வாகனங்கள் செல்ல வேண்டும். இதனால் திருப்பூர் அந்த சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து பரபரப்பாக காணப்படும்.
தாறுமாறாக ஓடிய லாரி : இந்தநிலையில் இன்று மதியம் 12-45 மணியளவில் விறகுகளை ஏற்றிக்கொண்டு பழைய பஸ் நிலையம் நோக்கி லாரி ஒன்று வந்தது. திருப்பூர் குமரன் சாலை வழியாக வரும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடத்தொடங்கியது. அப்போது முன்னால் சென்ற வாகன ஓட்டிகள் மீது மோதியது. இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர். டிரைவர் லாரியை நிறுத்த முயன்றும் முடியவில்லை.
இதனால் டிரைவர் லாரியை சாலையோரமாக திருப்பிய போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், 5க்கும் மேற்பட்ட கார்கள் மீது மோதியது. பின்னர் அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் மோதியதுடன் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மீதும் மோதியது.
ஒருவர் பலி : இதில் ஒருவர் லாரியின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். மேலும் இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து காரணமாக திருப்பூர் குமரன் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து லாரி டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிரேக் பிடிக்காததன் காரணமாக டிரைவர் லாரியை தாறுமாறாக ஓட்டியதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகனங்கள் சேதம் :லாரி மோதியதில் குமரன் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 மோட்டார் சைக்கிள்கள், 10க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன. சேதமடைந்த மோட்டார் சைக்கிள்கள் சாலையில் சிதறி கிடந்தன. அதனை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தையும் சீர் செய்தனர்.
சம்பவ இடத்திற்கு மேயர் தினேஷ்குமார், செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆகியோர் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்தனர்.
திருப்பூர் குமரன் சாலையில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலும் நிறைந்து காணப்படுகிறது. எனவே இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடலுார் மாவட்டத்தில் மதுபான கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட மொத்தம் 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கடலூர் புதுநகர் போலீஸ் நிலைய வளாகத்தில் மதுவிலக்கு போலீசார் மற்றும் மதுவிலக்கு துறையினர் மூலம் ஏலம் விடப்பட்டது.
கடலூர்:
கடலுார் மாவட்டத்தில் உள்ள தாலுக்கா போலீஸ் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவில் இருந்து மதுவிலக்கு சம்மந்தமாக பதிவு செய்யபட்ட வழக்கில், மதுபான கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட நான்கு சக்கர வாகனங்கள்8, மூன்றுச்சக்கர வாகங்கள் 4, மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள்38 என மொத்தம் 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 50 வாகனங்களையும் அரசுக்கு ஆதாயம் வரும் பொருட்டு கடலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி இன்று (4 ந்தேதி) காலையில் கடலூர் புதுநகர் போலீஸ் நிலைய வளாகத்தில் மதுவிலக்கு போலீசார் மற்றும் மதுவிலக்கு துறையினர் மூலம் ஏலம் விடப்பட்டது. ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர். பின்னர் தங்களுக்கு தேவையான வாகனங்களை ஏலம் மூலமாக எடுத்தனர். தொடர்ந்து ஏலம் நடைபெற்று வருகிறது.
- வாகன ஆய்வாளர் மீனாகுமாரி மேட்டூரில் பல்வேறு இடங்க ளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
- தகுதிச் சான்றிதழ் பெறாமலும், இன்சூரன்ஸ் இல்லாமலும் இயக்கப்பட்ட 7 சரக்கு வாகனங்களை கண்டறிந்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்தார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டார போக்கு வரத்து அலுவலர் பாஸ்க ரன் உத்தரவின்பேரில், மேட்டூர் மோட்டார் வாகன ஆய்வாளர் மீனாகுமாரி மேட்டூரில் பல்வேறு இடங்க ளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, வாகனத்திற்கு உரிய வரி செலுத்தாமலும், தகுதிச் சான்றிதழ் பெறாமலும், இன்சூரன்ஸ் இல்லாமலும் இயக்கப்பட்ட 7 சரக்கு வாகனங்களை கண்டறிந்து அந்த வாகனங்களை பறிமுதல் செய்தார்.உரிய ஆவணமின்றி இயக்கப்பட்ட
7 சரக்கு வாகனங்கள் பறிமுதல்