என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "wine bottles seized"
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயதேவி, பரந்தாமன் மற்றும் போலீசார் இன்று அதிகாலை பி.ஆண்டிகுப்பம் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது ஏழுமலை (வயது55) என்பவர் தனது வீட்டின் அருகே மது விற்று கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். ஏழுமலையிடம் இருந்த 10 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
அதுபோல் மாளிகைப்பட்டில் பத்மநாபன் மனைவி ரேகா (26) என்பவர் மது விற்று கொண்டிருந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வத்தலக்குண்டு:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மதியம் 12 மணிக்குதான் திறக்க வேண்டும். ஆனால் வத்தலக்குண்டு பகுதியில் டாஸ்மாக் கடை பார்களில் பணியாற்றும் ஊழியர்கள் மது பாட்டில்களை மொத்தமாக கொள்முதல் செய்து குடிமகன்களுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி சேவைகளை வழங்கி வருகின்றனர்.
கூடுதல் விலைக்கு விற்ற போதும் மதுவுக்கு அடிமையான தொழிலாளர்கள் காலை முதலே டாஸ்மாக் கடைகளில் விழுந்து கிடக்கின்றனர். மேலும் குடிபோதையில் பஸ்நிலையம் மற்றும் நகர் பகுதியில் ஆங்காங்கே அரை நிர்வாண கோலத்தில் படுத்து விடுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
எனவே சட்ட விரோதமாக மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசார் வத்தலக்குண்டு நகர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் டாஸ்மாக் கடை பார்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 180 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் மது பதுக்கிய சகோதரர்கள் உள்பட 4 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அனுமதியின்றி மது விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
புதுவையில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் வழியாக வெளிமாவட்டங்களுக்கு மதுபாட்டில்கள் கார் மற்றும் வேன்களில் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனைசாவடி அமைக்கப்பட்டு போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு உள்பட்ட அணிச்சக்குப்பம் மதுவிலக்கு சோதனை சாவடியில் இன்று அதிகாலை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ஏட்டு வெங்கடேசன், போலீஸ்காரர் சசிக்குமார் ஆகியோர் வாகன சோதனை செய்தனர்.
அப்போது புதுவையில் இருந்து ஒரு கார் வேகமாக வந்தது. போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். காரின் உள்ளே அட்டைபெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அதனைபிரித்து பார்த்தபோது 768 மது பாட்டில்கள் இருந்தன. காரில் இருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது அவர் புதுவை முத்தியால்பேட்டையை சேர்ந்த சபாபதி(வயது 35 என்பது தெரியவந்தது. இவர் மதுபாட்டில்களை புதுவையில் இருந்து சென்னைக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சபாபதியை போலீசார் கைது செய்தனர்.
மேலும் காரையும், மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். #Tamilnews
கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டு அன்பரசன், போலீஸ்காரர் கார்த்திகேயன்மற்றும் போலீசார் ஆலாத்தூர் கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிவேகமாக ஒரு மோட்டார் சைக்கிளும், அதை பின்தொடர்ந்து மினி லாரியும் வேகமாக வந்து கொண்டிருந்தது. அவற்றை போலீசார் வழிமறித்தனர். ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் போலீசாரை பார்த்ததும் இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து மினிலாரியை போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரத்து 40 மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மினிலாரியில் வந்தவர்கள் சங்கராபுரம் அருகே உள்ள மூரார் பாளையத்தை சேர்ந்த கமருதீன் (வயது 26) மற்றும் புதுவை நைனார் மண்டபத்தை சேர்ந்த வேலு (49) என்பதும் அவர்கள் புதுவையில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்கள் கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கமருதீன், வேலு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஓட்டி வந்த மினி லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய அருசு என்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். #Tamilnews
கும்பகோணம் அருகே வேப்பத்தூரை அடுத்த மணஞ்சேரி கிராமத்தில் உள்ள ஒருவீட்டில் வெளிமாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கும்பகோணம் தாலுக்கா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் போலீசார் மணஞ்சேரி கிராமத்துக்கு சென்று குறிப்பிட்ட ஒரு வீட்டில் திடீரென அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர்.
அப்போது அந்த வீட்டில் 400 மதுப்பாட்டில்களும் , 300 பீர் பாட்டில்களும் இருந்தது தெரியவந்தது. புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுப்பாட்டில்களை அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 700 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் வீட்டில் இருந்த அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன்(வயது 28). அகராத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த சுரேஷ் (27). ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி பெரியவன் என்கிற முருகனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். #Tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்