search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman Arrest"

    • கர்ப்பிணி வீட்டிற்க்கு சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு பெண் செல்வதை கண்டவர்கள்.
    • மீண்டும் கருக்கலைப்பு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா பாப்பாரப்பட்டி அருகே கிட்டனஅள்ளியில் கர்ப்பிணி பெண்ககளின் வயிற்றில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வதாக மாவட்ட கலெக்டர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அவரது உத்தரவின் பேரில் இணை இயக்குநர் சாந்தி, தலைமையில் மருத்துவர் பாலசுப்ரமணியம், மருந்தாளுநர் முத்துசாமி உள்ளிட்ட குழுவினர் கிட்டன அள்ளி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அப்பகுதியில் உள்ள கர்ப்பிணி வீட்டிற்க்கு சந்தேகத்திற்குரிய வகையில் ஒரு பெண் செல்வதை கண்டவர்கள், சிறிது நேரம் காத்திருந்து திடீரென வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தனர்.

    விசாரித்தில் கர்ப்பிணிக்கு 8 வருடத்திற்க்கு முன்னர் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளதும், தற்போது வயிற்றில் உள்ள குழந்தையும் பெண் குழந்தை என தெரிந்ததால் கருக்கலைப்பு செய்ய முயன்றது தெரிய வந்தது.

    அதனை தொடர்ந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் பனமரத்துபட்டியை அடுத்த குள்ளப்பநாயக்கனூரை சேர்ந்த சித்ராதேவி (42) என்பவரை பிடித்து பாப்பாரப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். சித்ராதேவியை கைது செய்த போலீசார் மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் மீண்டும் கருக்கலைப்பு சம்பவம் நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்துகின்றனர்.
    • போலீசார் 2 பெண்களிடம் இருந்து ரூ. 1.15 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

    பக்தர்கள் அனைவரும் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்துகின்றனர்.

    பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணத்தை முருகன் கோவில் தேவர் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவத வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை இணை ஆணையர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

    இதில் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட கலந்து கொண்டு மலைக்கோவில் தேவர் மண்டபத்தில் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பெண் ஊழியர்கள் 2 பேர், பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் 1.15 லட்சத்தை திருடியது கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டது. கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் போலீசார் 2 பெண்களிடம் இருந்து ரூ. 1.15 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    திருத்தணி கோவில் உண்டியல் காணிக்கை பணத்தை அங்கு பணி செய்யும் 2 பெண் ஊழியர்களே திருடிய சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது, அதில் 12 பெட்டிகளில் 576 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
    • புதுச்சேரியில் இருந்து தியாகதுருகத்திற்கு மது பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார், நேற்று நள்ளிரவு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த காரில் இருந்த பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது, அதில் 12 பெட்டிகளில் 576 மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவர், தியாகதுருகத்தை சேர்ந்த கோவிந்தன் மனைவி விஜயா (43) என்பதும், புதுச்சேரியில் இருந்து தியாகதுருகத்திற்கு மது பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து விஜயாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • சம்பவம் பற்றி தெரிய வந்ததும் பவானி போலீசார் விரைந்து சென்று கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர்.
    • போலீசார் மீனா தேவியை கைது செய்து நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரம் 5-வது வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (26). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் பூபதி. இவரது மனைவி மீனா தேவி(27). இவர்கள் பவானி மீனாட்சி கல்யாண மண்டபம் வீதியில் வசித்து வருகின்றனர்.

    கார்த்திக்-மீனா தேவி ஆகியோர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்தனர். அப்போதே அவர்களுக்கு இடையே பழக்கம் இருந்தது. இந்நிலையில் மீனா தேவிக்கு பூபதியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கார்த்திக் அடிக்கடி பூபதியின் வீட்டிற்கு சென்று வந்தார். அப்போது கார்த்திக்கும் மீனா தேவிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. உறவினர் என்பதால் கார்த்திக் வந்து சென்றதை அவரது கணவர் கண்டு கொள்ளவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி கார்த்திக்-மீனாதேவி கள்ள தொடர்பை தொடர்ந்தனர்.

    இந்நிலையில் கார்த்திக்குக்கும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இது பற்றி தெரிய வந்ததும் மீனா தேவி அதிர்ச்சி அடைந்தார். அவர் கார்த்திக்கை தொடர்பு கொண்டு வீட்டிற்கு அழைத்தார்.

    அதன்படி நேற்று மதியம் கார்த்திக் மீனா தேவி வீட்டிற்கு வந்தார். அப்போது மீனாதேவி என்னுடன் உள்ள தொடர்பை துண்டித்து விட்டு எப்படி நீ வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டு உள்ளார். மேலும் இது தொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மீனா தேவி தனது வீட்டில் கொதித்து கொண்டு இருந்த பாமாயில் எண்ணையை கார்த்திக் மீது ஊற்றினார். இதில் அவரது கழுத்து, முகம், இடது கை தோள்பட்டையில் தீ காயம் ஏற்பட்டது. இதனால் வலி தாங்கமுடியாமல் கார்த்திக் அலறி துடித்தார்.

    பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கொதிக்கும் எண்ணையை ஊற்றியதில் கார்திக்குக்கு 15 சதவீத தீக்காயம் ஏற்பட்டது.

    சம்பவம் பற்றி தெரிய வந்ததும் பவானி போலீசார் விரைந்து சென்று கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நடந்த விவரங்களை தெரிவித்தார்.

    இதையடுத்து தலைமறைவான மீனாதேவியை போலீசார் தேடினர். அப்போது அவர் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பவானி, கருங்கல்பாளையம் போலீசார் விரைந்து சென்று மீனா தேவியை கைது செய்தனர். பின்னர் பவானி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார் அதில் அவர் கூறி இருப்பதாவது:

    நானும் கார்த்திக்கும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒன்றாக படித்தோம் அப்போதே எங்களுக்குள் பழக்கம் இருந்தது. இந்நிலையில் அவரது உறவினரான பூபதியை திருமணம் செய்த பின்பும் எங்களுக்குள் தொடர்பு இருந்தது. இதனால் நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி பழகி வந்தோம். இந்த நிலையில் திடீரென அவர் என்னுடன் உள்ள தொடர்பை துண்டித்து விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

    இதையடுத்து அவரை வீட்டிற்கு அழைத்து இது தொடர்பாக பேசினேன். அப்போது அவருக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் வீட்டில் சமையல் அறையில் கொதித்துக் கொண்டு இருந்த பாமாயில் எண்ணையை எடுத்து அவர் மீது கொட்டினேன் என்று கூறினார்.

    இதை யடுத்து போலீசார் மீனா தேவியை கைது செய்து நீதிபதி வீட்டில் ஆஜர்ப டுத்தி கோவை சிறையில் அடைத்தனர். 

    • திருட்டு நடந்த ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது இளம்பெண் ஒருவர் மேற்கண்ட 5 திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
    • திருடிய பணத்தின் மூலம் மணிமேகலை ரூ. 50 ஆயிரம் மதிப்பில் தங்க செயின் மற்றும் வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கியுள்ளார்.

    மதுரை:

    மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்தவர் கோபால் (வயது 70). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணத்தை டெபாசிட் செய்ய சென்றார். அப்போது அங்கிருந்த 24 வயதுடைய பெண் கோபாலுக்கு உதவி செய்வதாக கூறியுள்ளார்.

    இதனை நம்பிய அவர் தான் கொண்டு வந்திருந்த ரூ. 15 ஆயிரத்தை அந்த பெண்ணிடம் கொடுத்து குறிப்பிட்ட வங்கி எண்ணிற்கு டெபாசிட் செய்யுமாறு கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அந்த பெண் கோபாலிடம் பணத்தை டெபாசிட் செய்துவிட்டதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

    இந்த நிலையில் வீட்டுக்கு சென்ற கோபாலுக்கு பணம் டெபாசிட் செய்தது தொடர்பான குறுஞ்செய்தி எதுவும் வரவில்லை. இதனால் கோபால் உடனே குறிப்பிட்ட வங்கிக்கு சென்று விசாரித்தபோது, பணம் டெபாசிட் செய்யவில்லை என தெரியவந்தது.

    இளம்பெண் முதியவரை ஏமாற்றி ரூ. 15 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், உதவி கமிஷனர்கள் சுரேஷ்குமார் (தல்லாகுளம்), சூரக்குமார் (அண்ணா நகர்) அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமிராக்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது இளம்பெண் முதியவரின் பணத்தை திருடியது தெரியவந்தது.

    இதேபோல் தல்லாகுளம் கண்மாய் மேலத்தெருவைச் சேர்ந்த சுந்தர் (41) என்பவரும் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்கச் சென்றபோது அவரிடம் இளம்பெண் ஒருவர் நைசாக பேசி ரூ. 19 ஆயிரத்து 500-ஐ திருடியுள்ளார்.

    கரும்பாலை சோனையர்கோவில் தெருவைச் சேர்ந்த நாகலட்சுமி என்பவரிடமும் மர்மநபர் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ. 10 ஆயிரத்து 500-ஐ திருடியுள்ளார்.

    மதுரை கருப்பாயூரணி பாரதிபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ஜெனட் மேரி (63). அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 17-ந் தேதி குருவிக்காரன் சாலையில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த இளம்பெண் ஜெனட் மேரிக்கு உதவுவது போல் அவரது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ. 69 ஆயிரத்தை திருடியுள்ளார்.

    சிவகங்கை மாவட்டம் கீழக்கோவிலைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி போஸ் என்பவரும் தனது ஏ.டி.எம். கார்டு மூலம் 16 ஆயிரத்து 300 ரூபாயை மர்ம நபரிடம் பறி கொடுத்தார். 5 பேரிடமும் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்தை இளம்பெண் திருடியுள்ளார்.

    மேற்கண்ட 5 ஏ.டி.எம். பணம் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். திருட்டு நடந்த ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது இளம்பெண் ஒருவர் மேற்கண்ட 5 திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    இதை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், தேனி மாவட்டம் கொண்டமாணிக்கம்பட்டி மன்னர் நாயக்கர் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் மனைவி மணிமேகலை (24) என்பவர் முதியவர்களை குறிவைத்து ஏ.டி.எம். மையத்தில் பணம் திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். திருடிய பணத்தின் மூலம் மணிமேகலை ரூ. 50 ஆயிரம் மதிப்பில் தங்க செயின் மற்றும் வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கியுள்ளார். அதனையும் போலீசார் பறிமுதல் செய்து கைதான பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் 38 கிலோ குட்காவை பதுக்கி வைத்து விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    கோவை பி.என்.புதூர் அடுத்த கட்டபொம்மன்தெரு பகுதியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை நடைபெறுவதாக ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்புமணி மற்றும் மகேந்திரன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். 

    அதில் அதே பகுதியைச் சேர்ந்த முருகேஷ் என்பவரது மனைவி லட்சுமி (வயது 46) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 38 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    காவேரிப்பட்டணம் அருகே மூதாட்டி கொலையில் திடீர் திருப்பமாக மளிகை கடைக்கார பெண் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள சுருளிஅள்ளியை சேர்ந்தவர் மங்கம்மாள் (வயது 75). இவரது கணவர் ராணுவத்தில் பணிபுரிந்து இறந்து விட்டார். இவருடைய ஒரு மகனும் இறந்துவிட்டார். இவருக்கு 2 பேத்திகள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி மங்கம்மாள் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் மர்ம நபர்கள் தாக்கி இருந்தனர். இந்த கொலை தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் மூதாட்டி கொலை தொடர்பாக உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த மாது (45) என்ற பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது மூதாட்டி கொலையில் திடீர் திருப்பமாக மாது மங்கம்மாளை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அதன் விவரம் வருமாறு:-

    நான், மளிகை கடையில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய மங்கம்மாளிடம் எனது கணவருக்கு தெரியாமல் பணம் கடன் வாங்கினேன். அவர் கொடுத்த பணத்தை அடிக்கடி திரும்ப கேட்டு வந்தார். அப்போது பணத்தை கொடுக்காவிட்டால் உனது கணவரிடம் பணம் வாங்கியதை கூறி விடுவேன் என்றார். இதனால் கடன் வாங்கியது வெளியே தெரிந்தால் அசிங்கமாகி விடும் என கருதினேன்.

    இந்தநிலையில் கடந்த 30-ந் இரவு நான் மூதாட்டி வீட்டிற்கு சென்று அவரை கட்டையால் தாக்கி கொன்றேன். பின்னர் டி.வி. சத்தத்தை அதிகமாக வைத்து விட்டு அங்கிருந்து வந்து விட்டேன். 1-ந் தேதி அக்கம் பக்கத்தினர் மங்கம்மாள் வீட்டில் இருந்து டி.வி. சத்தம் அதிகமாக வந்ததால் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்த போது மங்கம்மாள் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை பிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து மாதுவை போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
    வேலைபார்த்த வீட்டில் நகை திருடிய வேலைக்கார பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    விருகம்பாக்கம் நாராயண முதலி தெருவைச் சேர்ந்தவர் பிரியதர்சினி. கடந்த ஆண்டு இவரது வீட்டில் 14பவுன் நகை திருடு போனது. இதேபோல மேல்தளத்தில் வாடகைக்கு இருந்தவர் வீட்டிலும் 6 பவுன் நகை மாயமானது.

    இதுகுறித்து வடபழனி உதவி கமி‌ஷனர் ஆரோக்ய பிரகாசம் உத்தரவின் பேரில் விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கோமதி விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த இரண்டு வீட்டிலும் வீட்டு வேலை பார்த்த சாலிகிராமம் ஏகாம்பரம் தெருவைச் சேர்ந்த ஐஸ்வர்யாவை நகை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது கடந்த 10 மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யா விருகம்பாக்கம் பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.அவரிடமிருந்து 11 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கத்தை பவுடராக்கி கடத்திய பெண்ணை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiAirport #GoldSeized
    ஆலந்தூர்:

    சார்ஜாவில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது.

    அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    அப்போது ஒரு பெண் பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அப்போது அவர் தங்கத்தை பவுடராக்கி பாக்கெட்டுகளாக உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.

    இதையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த எடை 1 கிலோ 200 கிராம் ஆகும்.

    இதே போல இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் உடலில் மறைத்து தங்க கட்டி கடத்தி வந்த சென்னை மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 5 வாலிபர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 1 கிலோ 600 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தங்கத்தின் மதிப்பு ரூ.92 லட்சம் ஆகும். இது தொடர்பாக தங்கம் கடத்தி வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். #ChennaiAirport #GoldSeized
    ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    ரத்தினபுரியை சேர்ந்தவர் ராமாத்தாள்(வயது 60). இவர் நேற்று டவுன் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது தனது 5 பவுன் செயினை ஒரு மணிபர்சில் வைத்திருந்தார். பஸ், அரசு ஆஸ்பத்திரி பகுதியில் வந்த போது ஒரு பெண் ராமாத்தாளிடம் இருந்த மணிபர்சை திருடிக்கொண்டு பஸ்சில் இருந்து நைசாக இறங்க முயன்றார். இதைக்கண்ட ராமாத்தாள் சத்தம் போடவே பயணிகள் அந்த பெண்ணை மடக்கிப் பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

    விசாரணையில் அவர் காரமடையை சேர்ந்த சிவக்குமார் என்பவரது மனைவி அனிதா தேவி(33) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 5 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தாரமங்கலத்தில் ஓடும் பஸ்சில் போலீஸ்காரர் மனைவியிடம் பெண் பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள எலவடை பகுதியை சேர்ந்தவர் நாகலிங்கம்.

    இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா (வயது 25).

    இவர் நேற்று உறவினர் திருமணத்திற்காக சேலம் சென்று விட்டு மீண்டும் பஸ்சில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தாரமங்கலம் பஸ் நிலையத்தில் பயணிகள் இறங்குவதற்காக பஸ் நின்ற போது சித்ரா அருகில் உட்கார்ந்திருந்த பெண் அவசர, அவசரமாக படிக்கட்டு வழியாக கீழே இறங்கினார்.

    அப்போது சந்தேகம் அடைந்த சித்ரா தனது கைப்பையை திறந்து பார்த்த போது, அதில் இருந்த பணம் திருட்டு போயிருந்தது. இந்த பணத்தை அவர் திருடிக் கொண்டு பஸ்சில் இருந்து இறங்கியது தெரியவந்தது.

    இதனால் சித்ரா சத்தம் போடவோ பஸ் நிலையத்தில் இருந்த பொதுமக்கள், பணத்தை திருடிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை பிடித்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதனைதொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த பெண் சுமதி(50) என்பதும், ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த சேட்டு என்பவருடைய மனைவி என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து சுமதியை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
    சென்னையில் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் பணியாற்றிய போலி பெண் டாக்டரை போலீசார் கைது செய்தனர். #FakeDoctor
    சென்னை:

    வேலூரைச் சேர்ந்தவர் ரேச்சல் ஜெனிபர். இவர் சென்னையில் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் அவரது சான்றிதழ்களை ஆய்வு செய்த போது அவை போலியானது என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்தார்.

    ரேச்சல் ஜெனிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் ரூ.35 ஆயிரம் சம்பளம் வாங்குவதும், போலி சான்றிதழ் பெற தினேஷ், விஜயலட்சுமி ஆகிய 2 பேர் உதவி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    போலி சான்றிதழுடன் டாக்டர் வேலையில் சேர்ந்த ரேச்சல் ஜெனிபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர். #FakeDoctor
    ×