என் மலர்
நீங்கள் தேடியது "woman dead"
- தனது கணவரை மிரட்டுவதற்காக சசி பிரபா தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப்போவதாக தெரிவித்தார்.
- எதிர்பாராதவிதமாக அவரது உடலில் தீ பற்றிக் கொண்டது. பலத்த காயங்களுடன் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் லுத்ரன் மிஷன் கோவில் தெருவைச் சேர்ந்த சரண்ராஜ் மனைவி சசி பிரபா (வயது 29). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். கூலி வேலை பார்த்து வந்த சரண்ராஜ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் சம்பவத்தன்று தனது கணவரை மிரட்டுவதற்காக சசி பிரபா தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்கப்போவதாக தெரிவித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடலில் தீ பற்றிக் கொண்டது. பலத்த காயங்களுடன் சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த சசி பிரபா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தாய் லெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாரியின் கால் பாகங்களை புலியானது தின்று விட்டு உடலை அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டது வனத்துறை விசாரணையில் தெரியவந்தது.
- புலி தாக்கி பெண் இறந்த சம்பவம் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியை சேர்ந்தவர் மாரி(வயது63). நேற்று வழக்கம் போல வெளியில் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.
அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தினர், வனப்பகுதிகளில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. மாரி மாயமானதால் உறவினர்கள் சோகம் அடைந்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் அடர்ந்த வனத்திற்கு சென்றார். அப்போது, அங்கு பெண் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியான அவர் உடனடியாக ஊருக்குள் ஓடி வந்து தகவல் தெரிவித்தார். மேலும் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் வனத்துறையினரும், பொதுமக்களும் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டனர்.
அப்போது அது மாயமான மாரி என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து அறிய வனத்துறையினர் அவரது உடலை ஆய்வு செய்தனர். அப்போது அவரது உடலில் புலி தாக்கியதற்கான காயங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
வனத்திற்குள் சென்ற மாரியை புதர் மறைவில் மறைந்திருந்த புலி தாக்கி கொன்றுள்ளது.
பின்னர் அவரது உடலை இழுத்து சென்று, மாரியின் கால் பாகங்களை புலியானது தின்று விட்டு உடலை அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டது வனத்துறை விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் புலியின் நடமாட்டம் இருக்கிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர்.
புலி தாக்கி பெண் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தனியார் பஞ்சாலைக்கு சொந்தமான பேருந்து திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதியது.
- விபத்து நடந்து பெண் பக்தர் இறந்து கிடந்தும் போலீசார் நீண்ட நேரமாகியும் வரவில்லை என்று கூறி ஆத்திரமடைந்த மற்ற பக்தர்கள் தேசியநெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறை:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனிக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
இதில் ஒரு குழுவினர் இன்று காலை திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த ஆசாத் ரோடு அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பின்னால் வந்த தனியார் பஞ்சாலைக்கு சொந்தமான பேருந்து திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதியது. இதில் கும்பகோணம் துக்காம்பாளையம் பகுதியை சேர்ந்த உமாராணி (வயது 60) தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் மாதேஸ்வரி (65), சிவகாமி (55), மூக்காயி (65) உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை உடன் வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை மற்றும் திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்து நடந்து பெண் பக்தர் இறந்து கிடந்தும் போலீசார் நீண்ட நேரமாகியும் வரவில்லை என்று கூறி ஆத்திரமடைந்த மற்ற பக்தர்கள் தேசியநெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் ஆத்திரம் அடைந்து விபத்தை ஏற்படுத்திய தனியார் ஆலையின் பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கினர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தைக்கு பின் பக்தர்கள் மறியலை கைவிட்டனர்.
பின்னர் இறந்தவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து மற்றும் சாலை மறியலால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- காட்பாடி ரெயில் நிலையத்தில் இன்று காலை நடந்த அடுத்தடுத்த சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
- காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சென்று ரெயிலுக்கு அடியில் சிக்கி கிடந்த காஞ்சனா உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேலூர்:
வேலூர் சைதாப்பேட்டை பழைய காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி காஞ்சனா (வயது 45) கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் இறந்து விட்டார். இதனை தொடர்ந்து காஞ்சனா அவரது மகன் ஆனந்தன் (25) என்பவருடன் வாழ்ந்து வந்தார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருச்சிக்கு சென்ற ஆனந்தன் பைக் விபத்தில் இறந்துவிட்டார். இதனால் காஞ்சனா தனிமையில் வசித்து வந்தார். கணவரும் இல்லை, மேலும் மகன் இறந்த துக்கத்தை அவரால் தாங்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த காஞ்சனா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
இன்று காலையில் அவர் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்றார். 2-வது பிளாட்பாரத்தில் ரெயில்வே போலீஸ் நிலையத்தை கடந்து சென்றார். காலை 7.40 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை வழியாக டெல்லி செல்லும் நியூ டின் சிகியா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்ற அந்த ரெயில் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டது. அப்போது காஞ்சனா ஓடி சென்று ரெயில் முன்பு தண்டவாளத்தின் நடுவில் நின்றார்.
அவர் என்ஜின் டிரைவரை நோக்கி கைகளை அசைத்தபடி நின்று கொண்டே இருந்தார். இதனை கண்ட டிரைவர்கள் ரெயில் பிரேக் போட்டனர். மேலும் அலாரம் எழுப்பினர்.
ஆனாலும் ரெயில் காஞ்சனா மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த காஞ்சனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாாக இறந்தார்.
இதனை நேரில் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சென்று ரெயிலுக்கு அடியில் சிக்கி கிடந்த காஞ்சனா உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.
காஞ்சனா உடலை மீட்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தபோதே 1-வது பிளாட்பாரத்தில் ரெயிலுக்காக காத்திருந்த வட மாநில பயணி ஒருவர் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார். இதனைக் கண்டு அவரது குடும்பத்தினர் அலறி கூச்சலிட்டனர்.
சத்தம் கேட்டு ரெயில்வே போலீசார் அங்கு சென்றனர். விசாரணையில் இறந்தவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் கிருபா (வயது 54) என்பது தெரியவந்தது. அவர் குடும்பத்துடன் வேலூருக்கு சுற்றுலா வந்துள்ளார்.
ரெயிலுக்காக காத்திருந்த நேரத்தில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது தெரியவந்தது. அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
காட்பாடி ரெயில் நிலையத்தில் இன்று காலை நடந்த அடுத்தடுத்த இந்த சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
- காட்டுப் பன்றிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
- அரசிடம் அனுமதி பெறாமல் மின்வேலி அமைத்த விவசாயி சுப்புராயனை போலீசார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல் அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்புராயன். இவரது நிலத்தில் மணிலா பயிரிட்டுள்ளார். மணிலா பயிரை காட்டு பன்றிகள்அழித்து சேதப்படுத்துவதால், அதனை தடுக்க மின்வேலி அமைத்திருந்தார்.
இந்த நிலத்தில் மணிலா அறுவடை பணிக்காக பக்கத்து கிராமமான மணம் தவழ்ந்தபுத்தூர் காலணி சேர்ந்த சேட்டு என்பவரது மனைவி தனலட்சுமி (வயது 65) இன்று காலை சென்றார்.
அப்போது காட்டுப் பன்றிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மின்சாரம் தாக்கி உயிர் இழந்த தனலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அரசிடம் அனுமதி பெறாமல் மின்வேலி அமைத்த விவசாயி சுப்புராயனை போலீசார் தேடி வருகின்றனர்.
- நீண்டநேரம் ஆகியும் உஷாராணி வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது கிணற்றுக்குள் அவர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அன்பழகன் நகரை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி உஷாராணி (வயது55).
இவர் நேற்று மாலை வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றின் மேல் பகுதியை சுத்தம் செய்தார். அப்போது திடீரென உஷாராணி தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.
தண்ணீரில் மூழ்கிய அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். நீண்டநேரம் ஆகியும் அவர் வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது கிணற்றுக்குள் உஷாராணி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கும் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் கயிறுகட்டி உஷாராணியின் உடலை மீட்டனர். பின்னர் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- அனிதா போட்டிருந்த துப்பட்டா எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் சிக்கி கொண்டது.
- அனிதாவை சிகிச்சைக்காக தருமபுரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் சவுளூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி அனிதா (வயது35). கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து தொப்பூரில் உள்ள கெங்களாபுரம் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தனர்.
கடை முன்பு மின்சாரத்தால் இயங்கக்கூடிய கரும்பு சாறு பிழியும் எந்திரம் உள்ளது. அதில் கரும்பு ஜூஸ் போட்டு விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை அனிதா வழக்கம்போல் கடையில் கரும்பு சாறு பிழியும் எந்திரம் முன்பு நின்று கரும்பு சாறு பிழித்து கொண்டிருந்தார். அவர் தனது கழுத்தை சுற்றி துப்பாட்டா போட்டிருந்தார்.
அப்போது அனிதா போட்டிருந்த துப்பட்டா எதிர்பாராதவிதமாக அந்த எந்திரத்தில் சிக்கி கொண்டது. இதில் அவரது கழுத்தை இறுக்கியதால் மூச்சு விட முடியாமல் திணறினார்.
உடனே அவரது கணவர் பிரபு ஓடிவந்து எந்திரத்தின் மின்சாரத்தை துண்டித்தார். பின்னர் அனிதாவை சிகிச்சைக்காக தருமபுரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பிரபு தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- மேற்கு மாம்பலம் திருவள்ளுவர் சாலையை சேர்ந்த ஆனந்தன் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
- பிறந்தநாள் அன்று அதிகாலையில் மேற்கொண்ட பைக் டாக்சி பயணம் சேவிகாவின் உயிரை குடித்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை:
சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தை சேர்ந்தவர் சேவிகா. 34 வயதான இவர் அழகு கலை நிபுணர் ஆவார். தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்களுக்கு மேக்கப் போடும் பணியை சேவிகா செய்து வந்தார்.
சேவிகாவுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். இந்த நிலையில் நேற்று பணிக்கு சென்ற அவர் வேலை முடிந்து மாம்பலம் தலையாரி தெருவில் உள்ள தோழியின் வீட்டில் போய் தங்கினார். இன்று காலை 4 மணி அளவில் சேவிகா தனது பிறந்தநாளையொட்டி வியாசர்பாடியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் வாழ்த்து பெற ஆசை ஆசையாக புறப்பட்டார்.
மேற்கு மாம்பலத்தில் இருந்து சேவிகா பைக் டாக்சியை பதிவு செய்து அதில் பயணித்தார். தேனாம்பேட்டை வழியாக வியாசர்பாடி நோக்கி பைக் டாக்சி சென்றது.
மேற்கு மாம்பலம் திருவள்ளுவர் சாலையை சேர்ந்த ஆனந்தன் என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். பின்னால் சேவிகா அமர்ந்து பயணம் செய்தார். அண்ணாசாலையில் உள்ள காமராஜர் அரங்கம் அருகில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சேவிகா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
பிறந்தநாள் அன்று அதிகாலையில் மேற்கொண்ட பைக் டாக்சி பயணம் சேவிகாவின் உயிரை குடித்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததால் விபத்தில் சிக்கி கீழே விழுந்தபோது சேவிகாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது.
இதில்தான் அவர் உயிரிழந்துள்ளார். சேவிகாவின் உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை பார்த்து உறவினர்களும், தோழிகளும் கதறி அழுதனர். ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சேவிகாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
லாரி மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற வாலிபர் ஆனந்தன் சிராய்ப்பு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சேவிகாவின் உயிரை பறித்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுவிட்டது. அந்த லாரியை போலீசார் தேடி வருகிறார்கள். டிப்பர் லாரி யாருக்கு சொந்தமானது? அதனை ஓட்டி வந்த டிரைவர் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- வேனில் பயணம் செய்தவர்கள் காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பினர்.
கொடைக்கானல்:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுற்றுலா வந்தனர். மதுரை-ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு கொடைக்கானல் வந்தனர். அங்கு சுற்றுலா இடங்களை கண்டு ரசித்த பின்னர் பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி பழனி மலைச்சாலை வழியாக வேன் சென்று கொண்டிருந்தது. 5-வது கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வேனில் பயணம் செய்தவர்கள் காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பினர். இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி 21 பேரையும் மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தஞ்சாவூரை சேர்ந்த மாரியம்மாள் (வயது45) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஓங்கூர் டோல்கேட் அருகே வரும் போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவரில் மோதியது.
- விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (19) கல்லூரி மாணவர்.
இவர் திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் புதூர் கிராமத்தில் தனது உறவினர் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி முடித்துவிட்டு தனது தாய் அனுசியாவுடன் சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திண்டிவனம் அடுத்த ஓங்கூர் டோல்கேட் அருகே வரும் போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் அனுசியா தவறி விழுந்து பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மகன் கண் முன் பலியானார். மாணவர் சூர்யா படுகாயங்களுடன் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்தை போலீசார் சரி செய்தனர். மகன் கண் எதிரே தாய் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பாலவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடையில் டிராக்டர் வேகமாக ஏறி இறங்கியது.
- விபத்து குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்தியபாமா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கரடிபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன். மாம்பழ வியாபாரி. இவரது மனைவி நிர்மலா (வயது 33). கேசவன் திருவள்ளூர் அருகே திருப்பாச்சூரில் உள்ள மாந்தோப்பை குத்தகைக்கு எடுத்து உள்ளார். நேற்று மாலை அவர் அங்கிருந்து மாம்பழங்களை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு சென்றார். டிராக்டரை கேசவன் ஓட்டினார். அவரது மனைவி நிர்மலா அருகில் அமர்ந்து இருந்தார்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ. நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடையில் டிராக்டர் வேகமாக ஏறி இறங்கியது.
இதில் நிலை தடுமாறிய நிர்மலா டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிர்மலா இறந்தார்.
இது குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்தியபாமா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- எதிர்பாராதவிதமாக காருக்கு முன்னால் சென்ற டெம்போ சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி கொண்டது.
- சாலை மோசமாக இருந்ததால் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் வழியிலேயே நோயாளி இறந்து விட்டார்.
குனியமுத்தூர்:
கோவை மாநகராட்சி 87-வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் சக்தி நகரை சேர்ந்தவர் பாப்பாத்தி என்ற நாகம்மாள்(வயது70). ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்.
இவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து நாகம்மாள், தனது மகன் ராஜபாண்டியனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த நாகம்மாளுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரது மகன் ராஜபாண்டி தாயை காரில் அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார். கார் சக்தி நகர் பகுதியில் சென்ற போது முன்னால் ஒரு டெம்போ சென்றது.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், சக்தி நகர் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் சாலையில் பள்ளங்கள் இருப்பது எதுவுமே தெரியவில்லை.
அப்போது எதிர்பாராதவிதமாக காருக்கு முன்னால் சென்ற டெம்போ சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கி கொண்டது. எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
பின்னால் காரில் நாகம்மாள் நெஞ்சுவலியால் துடித்து கொண்டிருந்தார். டெம்போ சென்றால் தான் அந்த இடத்தை விட்டு நகர முடியும் என்ற நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் ராஜபாண்டி தவித்தார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டத்திற்கு பிறகு பொக்லைன் எந்திரம் உதவியுடன் டெம்போ மீட்கப்பட்டது. அதன்பின்னரே ராஜபாண்டி தனது தாயை அழைத்து கொண்டு வேக, வேகமாக ஆஸ்பத்திரிக்கு விரைந்தார். ஆனால் நாகம்மாள் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் காரிலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதனை அறிந்த ராஜபாண்டி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலையானது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை பெய்து விட்டால் இதில் நடந்து செல்வதே சிரமமாக இருக்கும். இது தொடர்பாக எவ்வளவோ முறை புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க கோரியும் மாநகராட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது சாலை மோசமாக இருந்ததால் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் வழியிலேயே நோயாளி இறந்து விட்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இனிமேலாவது இந்த சாலையை முறையாக சீரமைத்து தருவதற்கு மாநகராட்சி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மோசமான சாலையால் சரியான நேரத்திற்கு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் மின்வாரிய பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.