search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women struggle"

    • 2 நாளைக்கு ஒருமுறை 5, 6 குடங்கள் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிகிறது.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    மங்கலம்பேட்டை:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள எம்.அகரம் ஊராட்சியின் புதுக் காலனி மற்றும் பழைய காலனியில் சுமார் 160-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசித்து வருகின்றனார்.

    இங்கு குடிநீர் பற்றாக்குறை பிரச்சனை இருந்து வருவதாகவும், கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக 2 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே, அதுவும் ஒரே ஒரு வேளை மட்டும்தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும், 2 நாளைக்கு ஒருமுறை 5, 6 குடங்கள் மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிகிறது.

    இதனால் பாட்டில் மற்றும் கேன்களில் அடைத்து விற்கக்கூடிய குடிநீரை காசு கொடுத்து வாங்கி அக்கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் எம். அகரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் எதிரே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தின் முன் கீழே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும், மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணபதி, ரவிச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லாஹ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திருஞானம் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • பல ஆண்டுகளாக இங்கு சாலை எதுவும் அமைக்கப்படாதால் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர்.
    • மலை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் டோலி கட்டி ஊர்வலமாக சென்று தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம் அர்லா ஊராட்சியில் மலை கிராமங்கள் உள்ளன.

    இங்குள்ள நீலபெண்டா, பெட கருவு, கொத்தலோ சிங்கி, பத்தலோ சிங்கி ஆர்ல பிட்ரிக் கெட்டா, குர்ரலா பைலு கட்டாபலேம் உள்ளிட்ட கிராமங்களில் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    பல ஆண்டுகளாக இங்கு சாலை எதுவும் அமைக்கப்படாதால் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர். கர்ப்பிணிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் தற்போது பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காக மலை கிராம மக்களுக்கு வாக்குச்சாவடி வசதி ஏற்படுத்தவில்லை.

    அவர்கள் 15 கிலோமீட்டர் நடந்து சென்று வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

    இதற்கு மலை கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மலை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் டோலி கட்டி ஊர்வலமாக சென்று தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

    15 கிலோமீட்டர் நடந்து சென்று ஓட்டு போட முடியாது. எங்கள் மலை கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். 

    • டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தினர்.
    • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை பழைய பஸ் நிலையம் அருகே பள்ளிகள், மருத்துவ மனை உள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக் கான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் இங்கு வந்து செல்கின்றனர். இதன் அருகே அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

    டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள் அங்குள்ள பொது இடங்களில் மது குடிப்பதும், சில நேரங்களில் போதையில் தகராறில் ஈடுபடுவதும் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் அந்தப்பகுதிக்கு பெண்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி 31-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் ஜெயகவிதா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கைது செய்தவர்களை விடுக்கவும் கோரிக்கை வைத்தனர்
    • போலீசார் கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்தவர்களை விடுக்கவும் கோரிக்கை வைத்தனர்.

    திருவண்ணாமலை ஒன்றியம் உள்ள தேவனந்தல் ஊராட்சியில் புனல்காடு அருகில் உள்ள மலையை ஒட்டிய 5 ஏக்கர் இடத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதற்கு அருகில் உள்ள புனல்காடு, கலர்கொட்டாய், ஆடையூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் ஆதரவாக செயல்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி அந்த குப்பை கிடக்கில் குப்பை கொட்ட சென்ற லாரி டிரைவர் சிலர் தாக்கியதாகவும், பேச்சுவார்த்தைக்கு சென்ற திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதேவ்ஆனந்தை போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், புதியதாக அமைக்கப்பட்டு வரும் குப்பை கிடங்கை சுற்றி அளவீடு நடப்பட்ட கற்களை சிலர் உடைத்தாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கொடுத்த புகாரின் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அதன் பேரில் போலீசார் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 14 பேரும் தலைமறைவாக உள்ளனர்.

    அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். அதை தொடர்ந்து நேற்று மாலையில் குப்பை கிடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்குப்பதிவு செய்து உள்ள 20 பேரின் குடும்பத்தினரும் என சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் போர்ட்டிகோவில் அமர்ந்து பெண்கள் ஒன்றிணைந்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து அவர்கள் தரையில் படுத்து கொண்டு கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், புனல்காடு மலை அடிவாரத்தில் குப்பை கிடங்கு அமைக்க கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது.

    பின்னர் அவர்களில் சிலரை போலீசார் கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் கலெக்டர் முருகேஷை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    மனுவை பெற்று கொண்ட அவர் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • வீடுகளை அகற்ற சென்றதால் ஆத்திரம்
    • 2 நாட் கள் கால அவகாசம் கொடுத்து அதிகாரிகள் திரும்பி சென்றனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த பந்தராபள்ளி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 1976-ம் ஆண்டு ஆதிதி ளது. ராவிடர் நலத்துறை சார்பில் சுமார் 48 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கி உள்ள னர். அதில் அவர்கள் வீடு கட்டி. உள்ளனர்.

    பின்னர் 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 48 பேருக்கு கொடுத்த பட்டாக்களின் சர்வே எண்களிலேயே இரண்டாவது முறையாக சிலருக்கு பட்டா இடம் கொடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் அங்கு கட்டப்பட்டுள்ள சில வீடுகளை இடிக்க நிர்வாகம் சார்பில் நேற்று பொக்லைன் எந்திரத்துடன் சென்றுள்ளனர்.

    இதனால் திருப்பத்தூர் சப்- கலெக்டர், ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் நல அலுவ லர் ஜெயக்குமார் மற்றும் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் உள்ளிட்ட வருவாய்த் துறை அதிகாரிகளை முற்றுகை யிட்டு வாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.

    மேலும் ஒரே இடத் திற்கு இரண்டு முறை பட்டா வழங்கியது உங்களுடைய தவறு. இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    கோர்ட்டு உத்தரவு வந்த பிறகு இடித்துக் கொள்ளுங்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். ஆனால் அதிகாரிகள் வீடு களை இடிக்க முற்பட்டதால் பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி அமர்ந்தும், எந்திரத்தின் முன்பும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் பொதுமக்களுக் கும், நாட்டறம்பள்ளி போலீ சாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    இதன் காரணமாக அசம்பாவிதத்தை தடுக்கும் வண்ணம் மாவட்ட குற்றப்பிரிவுதுணை போலீஸ் சூப்பிரண்டு நிலவழகன் தலைமையில் 100- க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்ப ட்டனர். பொது மக்களுக்கு ஆதரவாக அதிகா ரிகளிடம், வழக்கறிஞர் கேட் டுக்கொண்டதன் காரண மாக மேலும் 2 நாட் கள் கால அவகாசம் கொடுத்து அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • தார்ச்சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி
    • பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை

    வந்தவாசி:

    வந்தவாசி- விளாங்காடு சாலையில் உள்ள ஆரியாத்தூரிலிருந்து கோயில்குப்பம் கிராமத்துக்குச் செல்லும் சுமார் ஒன்றரை கி.மீ. தூர தார்ச்சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

    மழையின் காரணமாக சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்த தார்ச் சாலை போடப்பட்டது. போட்ட சில மாதங்களிலேயே இந்த சாலை சேதமடைய தொடங்கியது. காலப்போக்கில் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கே பயனற்ற நிலையில் சேதமடைந்து விட்டது.

    மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக ஆகிவிடுவதால், பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பைக்குகளில் செல்வோர் சேற்றில் சிக்கி விழுந்து காயமடையும் நிலை ஏற்படுகிறது.

    இதுகுறித்து ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே புதிய சாலை அமைக்கக் கோரி சேற்றில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • மணல் குவாரி அமைக்க வலியுறுத்தல்
    • மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதி கேட்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் குடும்பங்களை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதற்கு மாட்டுவண்டி தொழிலாளர் நல சங்க மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். ரேகா, சாம்பலா, சீதா, தமிழ்ச்செல்வி மற்றும் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் மணல் குவாரி அமைக்க வேண்டும். காட்பாடி அரும்பருத்தி அரசு மணல் குவாரியில் மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதி அட்டையை வழங்க வேண்டும்.

    ஏழை மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்துக்கு மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    • குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் சூழ்ந்ததால் ஆத்திரம்
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சமரசம்

    ஆரணி :

    திருவண்ணா மலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டினமங்கலம் ஊராட்சி க்குட்பட்ட பழையகாலனி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    தற்போது குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் மற்றும்கால்வாய் சூழ்ந்து கொண்டதால் குடியிருப்பு வாசிகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஊராட்சி மன்றத்திலும் மற்றும் ஆரணி ஓன்றிய அலுவலகத்திலும் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ராட்டின மங்கலம் பெண்கள் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நுழைந்த பெண்கள் சேர்மன் அறையின் முன்பு தரையில் அமர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரசம் செய்து 2 தினங்களில் கழிவு நீர் கால்வாய் சரி செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.

    இச்சம்பவம் அப்ப குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நடிகர் விமல் நடித்த இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படத்தில் ஆபாச காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் படத்தை தடை விதிக்க வேண்டும் என மதுரையில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மதுரை:

    அண்மை காலமாக பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் காட்சிகளும், வசனங்களும் இடம் பெறும் வகையில் திரைப் படங்கள் வெளி யாகின. இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண் கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நடிகர் விமல் நடித்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்ற திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தில் ஆபாச காட்சிகளும், பெண்களை கேலி செய்யும் வகையில் வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஆபாச போஸ் டர்கள் நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள் ளன.

    மதுரையில் காளவாச லில் உள்ள சண்முகா சினி காம்ப்ளக்சில் இந்தப் படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று காலை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டனர். அவர்கள் தியேட்டருக்குள் சென்று அங்கிருந்த போஸ் டர்களை கிழித்தனர்.

    பின்னர் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தியேட்டர் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு காலை நேர காட்சி ரத்து செய்யப் பட்டது. #tamilnews
    பாலியல் தொல்லை புகாரில் கைது செய்யப்பட்ட விடுதி காப்பாளருக்கு ஆதரவாக கைகளை பிளேடால் அறுத்துக் கொண்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருப்பதி:

    திருப்பதியில் சரோஜினிதேவி சாலையில் அரசு பெண்கள் விடுதி உள்ளது. விடுதி காப்பாளராக நந்தகோபால் பணியாற்றி வந்தார். இங்கு ஏராளமான பெண்கள் தங்கி உள்ளனர்.

    அதில் கடப்பாவை சேர்ந்த பெண் ஒருவர் தங்கியிருந்தார். அந்தப் பெண், விடுதியில் இருந்து திடீரென வெளியேறி தன்னுடைய சொந்த ஊரான கடப்பாவுக்கு சென்றார். அங்கு சென்ற அவர், அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. அம்சாத்பாஷாவிடம் சென்று தனக்கு திருப்பதி விடுதியில் பாலியல் கொடுமை நடந்ததாக தெரிவித்தார்.

    அதற்கு கண்டனம் தெரிவித்த கடப்பா எம்.எல்.ஏ. அம்சாத்பாஷா, திருப்பதி அரசு பெண்கள் விடுதி காப்பாளர் நந்தகோபாலை உடனடியாக கைது செய்ய வேண்டும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும், இல்லையெனில் மக்கள் நற்பணி மன்றங்களை ஒன்று திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும், என எச்சரிக்கை விடுத்தார்.

    அரசு மகளிர் விடுதி அருகே பாலியால் தொல்லை கொடுத்த விடுதி வார்டன் நந்தகோபாலை கைது செய்ய வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரது உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி நந்தகோபாலை கைது செய்தனர்.

    இந்தநிலையில் திருப்பதி அரசு பெண்கள் விடுதியில் தங்கியுள்ள பெண்கள், விடுதி காப்பாளர் நந்தகோபால் நல்லவர். அவர் 10 அனாதை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அவர் எங்களுக்கு நல்ல ஒரு தந்தையை போன்றவர். அவர் மீது வீண் பழி சுமத்திய கடப்பா பெண் ஒரு லெஸ்பியன் (ஓரினச் சேர்க்கையாளர்), விடுதி காப்பாளர் நந்தகோபாலை கைது செய்யக்கூடாது என்றும், அவருக்கு ஆதரவாகவும் செயல்பட்டு தங்களின் கைகளை பிளேடால் அறுத்துக் கொண்டு விடுதியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த புகார் மீது மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும் என விடுதி பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. #tamilnews
    தொடர்ந்து பெய்து வரும் மழையால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் குட்டைபோல் தேங்கி உள்ளதால் பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் முன்பு பெண்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 12-வது வார்டுக்குட்பட்ட பாப்பாடி தர்கா, கோரிமேடு 6-வது தெரு, 7-வது தெரு பகுதியில் கழிவுநீருடன் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் குட்டை போல் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் முன்பு ‘திடீர்’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தங்களது கோரிக்கை குறித்து நகராட்சி கமி‌ஷனரிடம் மனு அளித்தனர்.

    இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “கழிவுநீரை அகற்ற நிரந்தர தீர்வு காண வேண்டும். இதுபற்றி பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்.

    குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் தக்கலை அருகே பணியை தடுத்து நிறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தக்கலை:

    குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது. தற்போது தக்கலை அருகே சேவியர்புரத்தில் சாலை அமைக்கும்பணி தொடங்கி உள்ளது.

    இப்பகுதியைச் சுற்றி மாங்கரம், மடத்து விளை, நெடுவிளை, நெஞ்சந்தி விளை, அண்ணாநகர் காலனி, திருவள்ளுவர் காலனி, புதூர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு சாலைகள் அனைத்தும் 4 வழிச்சாலை அமையும் பகுதியை ஒட்டியே உள்ளது.

    4 வழிச்சாலை பணிகள் தொடங்கினால் இக்கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு சாலைகள் துண்டிக்கப்படும். இதனால் கிராமங்களில் வாழும் மக்கள் நகர்ப்புறத்திற்கு வர பல கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் நிலை ஏற்படும்.

    மேலும் இக்கிராமங்களுக்கு வந்து செல்லும் மினி பஸ்களும் நிறுத்தப்படும். இதனால் கிராம மக்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுவார்கள். எனவே இக்கிராமங்களில் 4 வழிச்சாலை அமையும் முன்பு இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

    இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்று பிற்பகல் சேவியர்புரம் பகுதியில் கிராமமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். பிற்பகல் தொடங்கிய இப்போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.

    இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என கிராமமக்கள் அறிவித்தனர்.

    மேலும் போராட்டக்காரர்களுக்காக கஞ்சி காய்ச்சும் பணியும் தொடங்கியது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மாற்றுபாதை ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பிறகே 4 வழிச்சாலை பணிகள் தொடரும் என்றும் கூறினர்.

    இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews
    ×