search icon
என் மலர்tooltip icon

    தைவான்

    • தைவானை சீனா தனது அங்கமாக கருதி ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது.
    • தைவானை சீனா தனது அங்கமாக கருதி ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது.

    தைபே

    சீனாவும், தைவானும் 1949-ம் ஆண்டு பிரிந்து விட்டன. ஆனாலும் தைவானை சீனா தனது அங்கமாக கருதி ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது. தைவானோ தான் ஒரு சுதந்திர நாடு என்று நினைக்கிறது.

    தைவானை அச்சுறுத்தி தன்னுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று சீனா துடிக்கிறது. இதற்கான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டும் வருகிறது. இதனால் அந்த பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

    இந்த நிலையில் தைவான் அருகே தனது போர் விமானங்களையும், குண்டு வீசும் விமானங்களையும் சீனா நேற்று முன்தினம் பறக்க விட்டுள்ளதாக தைவான் குற்றம் சாட்டுகிறது.

    இந்த வகையில் நேற்று முன்தினம் சீனாவின் 10 விமானங்கள், தைவான் ஜலசந்தியில் உள்ள இடைநிலைக்கோட்டின் அருகே (சீனாவை பிரிப்பது) பறந்ததாக தைவான் ராணுவ அமைச்சகம் சொல்கிறது. இந்த 10 விமானங்களில் 6 விமானங்கள் ஷென்யாங் ஜே-11 ரகம், 4 விமானங்கள் ஜே-16 ரகம் என தைவான் மேலும் கூறுகிறது. இதன் காரணமாக அங்கே புதிய பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.

    தைவானுக்கு தென்மேற்கில் 4 செங்டு ஜே-10 ரக போர் விமானங்களும், ஒரு ஒய்-8 நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானமும், 3 எச்-6 குண்டு வீசும் விமானங்களும் நேற்று முன்தினம் காணப்பட்டதாகவும் தைவான் ராணுவம் கூறுகிறது.

    • 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தனர்.
    • 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்தது.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் சுற்றில் ஏ பிரிவில் இன்று கடைசிகட்ட லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. அதில் கீலாங் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்க தொடங்கிய முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, நெதர்லாந்துடன் மோதியது.

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பதும் நிசாங்கா 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க வீரரான குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் 79 ரன்கள் (5 சிக்சர்கள், 5 பவண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார்.

    தனஞ்செயா டி சில்வா ரன் எதுவும் எடுக்கவில்லை. தொடர்ந்து களமிறங்கிய சரித் அசலங்கா 31 ரன்களும் பனுகா ராஜபக்ச 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்தது.

    இந்நிலையில், நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

    • 7-வது ஓவரில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த அந்த அணிக்கு காஷிஃப் தாவூத், விர்தியா அரவிந்த் சற்று ஆறுதல் அளித்தது.
    • ஐக்கிய அரபு அமீரக அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி திரில் வெற்றி பெற்றது.

    8-வது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. தகுதிச் சுற்றுப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய முஹம்மது வசீம், சிராக் சுரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வசீம் அதிகபட்சமான 41 ரன்களையும், சுரி 12 ரன்களையும் குவித்தார்.

    7-வது ஓவரில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த அந்த அணிக்கு காஷிஃப் தாவூத், விர்தியா அரவிந்த் சற்று ஆறுதல் அளித்தது.

    குறிப்பாக 18-வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை சேர்ந்திருந்த ஐக்கிய அரபு அமீரகம், 19-வது ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே சேர்ந்ததது.

    இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டுமே சேர்த்தது. நெதர்லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பாஸ் தி லீடே 3 விக்கெட்டுகளையும், ஃபிரட் க்ளாஸன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இதைதொடர்ந்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அவரை தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் மேக்ஸ் 23 ரன்களில் ஆட்டமிழக்க நெதர்லாந்து அணி 41 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது. பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து வீரர்கள் பாஸ் தி லீடே (14 ரன்கள்) கோலின் அக்கர்மன் (17 ரன்கள்) டாம் கூப்பர் (8 ரன்கள்) அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.

    இதனால் அந்த அணி 13.3 ஓவர்களில் 76 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் கேப்டன் எட்வர்ட்ஸ்- டிம் பிரிங்கிள் இணைந்து அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு செல்ல, பிரிங்கிள் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அப்போது நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 9 பந்துகளுக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. பின்னர் வான் பீக் களமிறங்கினார். அனல் பறந்த போட்டியின் இறுதி ஓவரில் நெதர்லாந்து அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட 1 பந்து மீதம் இருக்கையில் நெதர்லாந்து அணி 112 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.

    இதன் மூலம் ஐக்கிய அரபு அமீரக அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நெதர்லாந்து அணி திரில் வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 16 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • 20 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்தது.
    • 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

    16 அணிகள் பங்கேற்கும் 8-வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கி நவம்பர் 13-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

    டி20 உலக கோப்பையின் முதல் சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இலங்கை மற்றும் நமிபியா அணிகள் மோதின. இந்த போட்டியில் நமிபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் பிற்பகலில் தொடங்கிய முதல் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம்-நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் தொடக்க வீரராக களமிறங்கிய சிராக் சுரி 12 ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான முகமது வாசீம் அதிரடியாக விளையாடி 41 ரன்கள் (2 சிக்சர்கள் 1 பவுண்டரி) எடுத்து அவுட்டானார்.

    அடுத்ததாக களமிறங்கிய காசிப் தாவுத் 15 ரன்களும் விரித்யா அரவிந்த் 18 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

    • தைவானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று பிற்பகல் 2.44 மணிக்கு 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • புஜியன், குவாங்டாங், ஜியாங்சு மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நில அதிர்வுகள் தெளிவாக உணரப்பட்டது.

    தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர நகரமான டைட்டங்கிற்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6. அலகாக பதிவாகியிருந்தது.

    நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டுமானங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட காயமோ பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் வெளியாகவில்லை.

    இந்நிலையில், தைவானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று பிற்பகல் 2.44 மணிக்கு 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைடுங் நகருக்கு வடக்கே 50 கி.மீ தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால் தைவான் அருகே உள்ள தொலைதூர தீவுகளுக்கு ஜப்பான் வானிலை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இன்று மாலை 4 மணியளவில் ஒரு மீட்டர் உயர அலைகள் எழும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலநடுக்கம், புஜியன், குவாங்டாங், ஜியாங்சு மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நில அதிர்வுகள் தெளிவாக உணரப்பட்டதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.

    • கடலோர நகரமான டைட்டங்கிற்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • ரிக்டர் அளவில் 7.0 மற்றும் அதற்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே சுனாமி எச்சரிக்கை வெளியிடப்படுகிறது

    தைபே:

    தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர நகரமான டைட்டங்கிற்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6. அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டுமானங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட காயமோ பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாகவோ தகவல் வெளியாகவில்லை.

    தைவானைப் பொருத்தவரை நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக இருந்தால் மட்டுமே சுனாமி எச்சரிக்கை வெளியிடும். எனவே, இன்றைய நிலநடுக்கம் 6.6 என கடுமையானதாக இருந்தபோதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

    6.0 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவுகளில் சில நிலநடுக்கங்கள் ஆபத்தானதாகவும், கடுமையான விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கலாம். எனினும், நிலநடுக்கம் எந்த பகுதியில் தாக்குகிறது மற்றும் எந்த ஆழத்தில் உள்ளது என்பதைப் பொருத்து பாதிப்பு இருக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தைவான் மீது படையெடுப்புக்கு தயாராக சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • தைவானை சுற்றி சீனா புதிதாக வான் மற்றும் கடல் பயிற்சிகளை தொடங்கி இருக்கிறது என்றார்.


    தைவான் நாட்டு வெளியுறவு துறை மந்திரி ஜோசப் வூ கூறும்போது, தைவான் மீது படையெடுப்புக்கு தயாராக சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தைவான் ஜலசக்தி மற்றும் முழு பிராந்தியத்திலும் உள்ள நிலையை மாற்றுவதே சீனாவின் உண்மையான நோக்கம். தைவானை சுற்றி சீனா புதிதாக வான் மற்றும் கடல் பயிற்சிகளை தொடங்கி இருக்கிறது என்றார்.

    மேலும் அவர் கூறும்போது, எங்கள் நாட்டுக்குள் யார் வர வேண்டும். யாரை வரவேற்க வேண்டும் என்று சீனா எங்களுக்கு உத்தரவிட முடியாது. தைவான் தனது சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க உறுதி பூண்டு நிற்கும். தைவானுக்கு எதிராக சீனா நிச்சயம் போர் தொடுக்கும். தற்போது அது எங்களை பயமுறுத்த முயற்சிக்கிறது. ஆனால் அதற்கு நாங்கள் பயப்பட மாட்டோம். எதையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.

    நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் எங்களிடம் இருந்து யாரும் பறிக்க முடியாது என்றார்.

    • நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை யாரும் பறிக்க முடியாது.
    • தங்கள் நாட்டிற்கு யார் வரவேண்டும் என, சீனா உத்தரவிட முடியாது.

    தைபே:

    தைவானை தங்களது நாட்டின் ஒரு அங்கம் என்று கூறி சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது.

    இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அண்மையில் தைவானுக்குச் சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, போர் விமானங்களை தைவான் வான் எல்லைக்குள் அனுப்பி மிரட்டல் விடுத்தது.

    இந்நிலையில், சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ அளித்துள்ள பேட்டியில், தங்கள் நாட்டிற்கு யார் வரவேண்டும், யாரை நாங்கள் வரவேற்க வேண்டும் என்று, சீனா தங்களுக்கு உத்தரவிட முடியாது என்று உறுதியுடன் கூறினார்.

    சீனா, தைவானை பல ஆண்டுகளாக அச்சுறுத்தி வருகிறது, கடந்த சில ஆண்டுகளில் இது மிகவும் தீவிரமடைந்து வருகிறது என்றும், ஆனால் தைவான் அதன் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க உறுதியுடன் நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    தைவானுக்கு எதிராக சீனா நிச்சயம் போர் தொடுக்கும், ஆனால் இப்போது அது தங்களை பயமுறுத்த முயற்சிக்கிறது என்றும் அவர் கூறினார். ஆனால் நாங்கள் பயப்படவில்லை, எதற்கும் நாங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் எங்களிடமிருந்து யாரும் பறிக்க முடியாது என்றும் தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

    • நான்சி பெலோசி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தைவான் எல்லை அருகே சீனா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது.
    • தைவானைச் சுற்றி 6 இடங்களில் சீனா தனது போர் பயிற்சிகளை தீவிரப்படுத்தியது.

    தைபே:

    தைவானை தங்களது நாட்டின் ஒரு அங்கம் என்று சீனா கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. தைவான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

    இதற்கிடையே, சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்குச் சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, போர் விமானங்களை தைவான் வான் எல்லைக்குள் அனுப்பி மிரட்டல் விடுத்தது.

    நான்சி பெலோசியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் எல்லை அருகே சீனா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தைவானின் எல்லைப்பகுதி அருகே சீன ராணுவம் அதிநவீன ஏவுகணைகளை வீசி போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில், தைவான் பிராந்தியத்தில் போர் பதற்ற நிலைமை அதிகரிப்பதைத் தடுக்க சர்வதேச ஆதரவை வழங்க வேண்டும் என தைவான் அதிபர் சாய் இங்-வென் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக, அதிபர் சாய் இங்-வென் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், தைவான் அரசும் ராணுவமும் சீனாவின் ராணுவ பயிற்சிகள் மற்றும் போர் நடவடிக்கைகளை, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. தேவையான பதிலடி நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளன. தைவான் பிராந்தியத்தில் போர் பதற்ற நிலைமை அதிகரிப்பதைத் தடுக்க சர்வதேச ஆதரவைகேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • சில இடங்களில் தைவான் நாட்டு கடற்கரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் போர் பயிற்சி மேற்கொண்டது.
    • தைவானை சுற்றி 6 இடங்களில் சீனா தனது போர் பயிற்சிகளை தீவிரப்படுத்தியது.

    தைவானை தங்களது நாட்டின் ஒரு அங்கம் என்று சீனா கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

    இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. தைவான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம் என்று சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

    இந்தநிலையில் சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, போர் விமானங்களை தைவான் வான் எல்லைக்குள் அனுப்பி மிரட்டல் விடுத்தது.

    மேலும், தைவானை சுற்றி கடலில் போர் பயிற்சிகளை தீவிரமாக நடத்தியது. சில இடங்களில் தைவான் நாட்டு கடற்கரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் போர் பயிற்சி மேற்கொண்டது. இதனால் தென்சீன கடல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    நான்சி பெலோசி, தைவானுக்கு சென்றதால் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடியை நிச்சயம் கொடுப்போம் என்று சீனா தெரிவித்துள்ளது. இதற்கிடையே தைவானின் கின்மென் தீவுகளில் சீன டிரோன்கள் பறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தைவான் ராணுவத்தின் கின்மென் பாதுகாப்பு கமாண்டர் சாங் சுங் கூறும்போது, 'சீன டிரோன்கள் (ஆளில்லா விமானம்) நேற்று இரவு கின்மென் பகுதிக்குள் பறந்தன.

    அவைகளை விரட்ட உடனடியாக நடவடிக்கைகளை எடுத்தோம். நெருப்புகளை வீசி எச்சரிக்கை விடுத்தோம். இதையடுத்து டிரோன்கள் திரும்பி சென்றன. தைவானின் வெளியுறவுத் தீவுகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறித்த உளவுத் தகவல்களை சேகரிக்க டிரோன்கள் பயன்படுத்தப் படுகின்றன' என்றார்.

    இந்தநிலையில் இன்று தைவானை சுற்றி 6 இடங்களில் சீனா தனது போர் பயிற்சிகளை தீவிரப்படுத்தியது. அங்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முன்பு இல்லாத வகையில் மிகப்பெரிய ராணுவ பயிற்சியை தொடங்கி உள்ளது.

    இன்றுமுதல் வருகிற 7-ந்தேதி வரை சீன ராணுவத்தின் முக்கியமான ராணுவ பயிற்சி நடைபெறும் என்று தைவானின் வரை படத்தில் போர் பயிற்சி நடைபெறும் இடங்களை சுட்டிக்காட்டி அப்புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக தைவான் ராணுவம் தரப்பில் கூறும்போது, 'தைவானை சுற்றியுள்ள நீரில் முன்னோடியில்லாத வகையில் நடைபெறும் சீனாவின் பயிற்சிகளை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். மோதலுக்கு தயாராக இருந்தாலும் அதை நாங்கள் விரும்பவில்லை என்றது.

    தைவான் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, 'போரை எதிர்நோக்காமல் இருக்கும்போது மோதலுக்கு தயாராகும் கொள்கையை எடுக்க சீனா நிலைநிறுத்த முயற்சிக்கிறது. மோதலை அதிகரிக்காமல், சச்சரவுகளை ஏற்படுத்தாத மனப்பான்மையுடன் இருக்கிறோம் என்றது.

    சீனா தனது ராணுவத்தின் போர் பயிற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளதால் தைவான் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் நிலவுகிறது. இதனால் தென்சீன கடல் பகுதியில் போர் பதற்றம் நிலவுகிறது.

    போர் பயிற்சி நடக்கும் பகுதிகளில் கப்பல்கள், விமானங்கள் குறிப்பிட்ட கடல்பகுதிகள், வான் வெளிக்குள் நுழையக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தைவான் விமானங்கள் செல்லும் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன. 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

    இந்தநிலையில் தைவானை சுற்றி போர் பயிற்சி நடத்துவதற்கு சீனாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறும்போது, 'சீனா செய்வது (போர் பயிற்சி) பொறுப்பற்றது என்று நாங்கள் நம்பு கிறோம்.

    ஏவுகணை சோதனை, துப்பாக்கி சூடு பயிற்சி, போர் விமானங்கள் பறந்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் நடக்கும்போது சில வகை யான சம்பவங்கள் (தாக்கு தல்) நிகழும் சாத்தியம் உள்ளது' என்றார்.

    இதேபோல் சீனாவுக்கு ஜி-7 நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை உயர் பிரதிநிதி ஜோசப் பொமுரல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    • தைவான் சென்றுள்ள நான்சி பெலோசி அந்நாட்டு அதிபரை சந்தித்தார்.
    • தைவானை அமெரிக்கா கைவிடாது என நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

    தைபே:

    அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி அரசுமுறை பயணமாக தைவான் சென்றார்.

    தைவானை தங்கள் நாட்டின் ஓர் அங்கம் எனக்கூறி வரும் சீனா, நான்சியின் இந்தப் பயணத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நான்சியின் இந்த பயணத்திற்கு அமெரிக்கா மிகப்பெரிய விலையை கொடுக்கும் என்று சீனா எச்சரிக்கை விடுத்தது.

    இந்நிலையில், நான்சி பெலோசி தைவான் அதிபர் டிசைங்க் வென்னை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

    அதன்பின் நான்சி பெலோசி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    உலகம் தற்போது ஜனநாயகம், சர்வாதிகாரம் ஆகிய இரண்டில் எதேனும் ஒன்றை தேர்தெடுக்கும் சூழ்நிலையில் உள்ளது. தைவானிலும், உலகின் பிற நாடுகளிலும் ஜனநாயகத்தை அமெரிக்கா இரும்புக்கரம் கொண்டு பாதுகாக்க உறுதியாக உள்ளது. தைவானை அமெரிக்கா கைவிட்டுவிடாது. என்னுடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்த வருகை தைவானை அமெரிக்கா கைவிடாது என்பதை வெளிப்படுத்தும் செயல்.

    வளர்ந்து வரும் ஜனநாயகம் கொண்டது தைவான். சவால்களை சந்தித்தபோதிலும் அமைதி மற்றும் வளமிக்க எதிர்காலம் ஆகியவற்றை நம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியான தீர்மானம் ஆகியவை கட்டியெழுப்பும் என உலகிற்கு நிரூபித்து உள்ளது.

    இதுவரை இல்லாத வகையில் தைவானுடன் அமெரிக்கா நல்லிணக்கத்துடன் இருப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த செய்தியையே நாங்கள் இன்று உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

    ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தைவான் வந்து அந்நாட்டு அதிபரை சந்தித்துப் பேசியபின் நான்சி பெலோசி தனியாக அமெரிக்க விமானம் ஒன்றில் தைபே நகரில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

    • அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்றுள்ளார்.
    • அவரது இந்த பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

    தைபே சிட்டி:

    தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிறுவ தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தைவானை சீனாவின் ஒரு அங்கமாகவும், அது தனி பிராந்தியம் இல்லை என்ற நிலைப்பாட்டையும் சீனா தொடர்ந்து உலக அரங்கில் அறிவுறுத்தியுள்ளது.

    அதேவேளை, தைவான் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை அமெரிக்கா துணை நின்று பாதுகாக்கும் என அமெரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

    சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடிய சீன அதிபர் ஜி ஜிங்பிங், தைவான் விவகாரம் குறித்து சீனாவின் நிலைப்பாட்டை திட்டவட்டமாகக் கூறியுள்ளார். சீனாவின் ஓர் அங்கம் தான் தைவான், எனவே சீனாவின் இறையாண்மையைச் சீண்டும் செயல்களில் அமெரிக்கா ஈடுபடக் கூடாது என கேட்டு கொண்டார். தைவான் விவகாரத்தில் அமெரிக்கா நுழைவது நெருப்புடன் விளையாடுவதற்குச் சமம் என அவர் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

    ஏற்கனவே உக்ரைன் மீது ரஷியா ராணுவ நடவடிக்கை எடுத்து போர் தொடுத்துள்ள நிலையில், இதேபோன்ற ராணுவ நடவடிக்கையை தைவான் மீது சீனா எடுக்குமோ என்ற அச்சம் சர்வதேச அரங்கில் நிலவி வருகிறது.

    இதற்கிடையே, அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார். தனது ஆசிய பயணத்தில் தைவான் நாட்டிற்கும் நான்சி செல்வார் என தெரிவிக்கப்பட்டது. நான்சி பெலோசியின் இந்த பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி நான்சி பெலோசி தற்போது தைவானுக்குச் சென்றுள்ளார். இதையடுத்து, தைவானில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    ×