search icon
என் மலர்tooltip icon
    • ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் அரசு கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • பணிக்கு வரவேண்டாம் என்று கல்லூரி நிர்வாகம் கூறியதால் போராட்டம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக ஒப்பந்த அடிப்படையில் ஜெயலட்சுமி உள்பட 4 பேர் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களை 1-ந் தேதி முதல் பணிக்கு வர வேண்டாம் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துவிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் ஜெயலட்சுமி தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கல்லூரி கல்வி இயக்ககம் துப்புரவு பணியாளர்களை அவுட் சோர்சிங் மூலமாக நிரப்ப உத்தரவு பிறப்பித்ததை கைவிடக்கோரியும், தங்களை பல்கலைக்கழக ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்த வலியுறுத்தியும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை முதல் மதியம் வரை இந்த போராட்டம் நடைபெற்றது.

    • 1634 லிட்டர் மதுபான பாட்டில்கள் பறிமுதல்
    • பெரம்பலூர் போலீசார் அதிரடி நடவடிக்கை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி அறிவுரையின்பேரில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் மேற்பார்வையில், பெரம்பலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனிச்சாமி (பெரம்பலூர்), சீராளன் (மங்களமேடு), போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களை கொண்டு போலீஸ் குழுவினர் மாவட்டம் முழுவதும் மதுவேட்டை நடத்தினர்.இதில் மது விற்ற 38 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து சுமார் 1,634 லிட்டர் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சாராயம் விற்றதாக ஒருவர் மற்றும் மது விற்றதாக 6 பேரை போலீசார் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மாவட்டத்தில் மொத்தம் 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் ரூ.58 ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் தயாரித்தால் அல்லது விற்பனை செய்தால் மாவட்ட போலீஸ் அலுவலக செல்போன் எண் 94981 00690-ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • தகாத வார்த்தையால் திட்டி பெண்ணை தாக்க முயன்றவர் கைது செய்யப்ப்பட்டார்
    • உடையார்பாளையம் போலீசார் நடவடிக்கை

    பெரம்பலூர்,

    உடையார்பாளையம் தெருவை சேர்ந்த பரமேஸ்வரனின் மனைவி இசபெல்லா (வயது 38). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ரெங்கநாதனின் மகன் மணிகண்டனுக்கும்(29) இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் இசபெல்லாவை மணிகண்டன் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் இசபெல்லா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நாளை காலை 9.30 மணிமுதல் மாலை வரை மின்விநியோகம் இருக்காது
    • மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதாக உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பெரம்பலூர் நகர பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், வெங்கடேசபுரம், அபிராமபுரம், துறைமங்கலம், கே.கே.நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அரியலூர் மெயின்ரோடு, மின்நகர், நான்குரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, மாவட்ட அரசு மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணாநகர், இந்திராநகர், சிட்கோ, அருமடல் ரோடு, அருமடல், ஆத்தூர் ரோடு மற்றும் கிராமிய பகுதிகளான செங்குணம், போலீஸ் குடியிருப்பு, எளம்பலூர், இந்திராநகர், சமத்துவபுரம், வடக்குமாதவி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.30 மணி முதல் மாலை வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • தகவலின் உண்மை தன்னை கண்டறிந்து சிறப்பு பரிசு வழங்க முடிவு
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி அறிவிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக போலி மதுபானங்களை விற்பனை செய்தல், மணல் திருடுதல், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்தல் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள், லாட்டரி மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள், மேலும் உங்கள் பகுதியில் நடைபெறும் திருட்டு, திருட்டில் ஈடுபட்ட நபர்கள் பற்றிய தகவல்கள், உங்கள் பகுதியில் யாரேனும் சந்தேகப்படும் வகையில் புதியதாக இருக்கும் நபர்கள் குறித்து, பொதுமக்கள் தகவல் அளிக்கலாம். இந்த தகவலை தெரிவிக்க 9498100690 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தங்களது இரகசியம் காக்கப்படும். உண்மையான தகவலை அதிகப்படியான முறை கொடுக்கும் நபர்களுக்கு, தாங்கள் சொன்ன தகவலின் உண்மை தன்மை அறிந்து சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.

    • 50 ஆண்டுகளாக வசிக்கும் நிலத்தை கையகப்படுத்த அரசு முயற்சி
    • கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்த பொதுமக்கள்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது அகரம்சீகூர் கிராம மக்களில் சிலர் வந்து கலெக்டரை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.அதில், நாங்கள் 50 ஆண்டுகளாக அரசு நிலத்தில் வசித்து வரும் வீட்டிற்கு முறையாக வீட்டு வரி உள்ளிட்டவை கட்டி வருகிறோம். தற்போது அந்த நிலத்தை அரசு கையகப்படுத்துவதாக தெரிகிறது. இதனால் எங்களை வீட்டை காலி செய்யுமாறு அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். வீட்டை காலி செய்தால் நாங்கள் எங்கு செல்வது என்று தெரியவில்லை. எனவே நாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

    மரத்தில் தூக்கில் தொங்கிய பிணம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் எழில் நகரை சேர்ந்தவர் அண்ணாதுரை(வயது 48). சென்ட்ரிங் தொழிலாளி. இவருக்கு அன்னக்கிளி என்ற மனைவியும், பழனியாண்டி, பாஸ்கர் என 2 மகன்களும் உள்ளனர். அண்ணாதுரைக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதேபோல் நேற்று காலையும் அண்ணாதுரைக்கும், குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அண்ணாதுரை வீட்டை விட்டு வெளியேறி மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.இந்த நிலையில் அன்னக்கிளி மதியம் அருகே உள்ள ஒரு காட்டிற்கு மாடு மேய்க்க சென்றார். அப்போது காட்டில் அண்ணாதுரையின் மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்ததை கண்டார். பின்னர் அன்னக்கிளி தனது கணவரை சுற்றும், முற்றும் தேடினார். அப்போது அண்ணாதுரை இலவம் பஞ்சு மரத்தில் கேபிள் டி.வி. ஒயரில் தூக்கில் தொங்கினார். அவரது வலது கால் மரத்தில் சிக்கியவாறு இருந்தது. இதனை கண்ட அன்னக்கிளி கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூா் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அண்ணாதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாராய பாக்கெட் விற்பனைக்காக வைத்திருந்த பெண்கள் கைது செய்யப்பட்டனர்
    • 11 லிட்டர் 300 மில்லி சாராயத்தை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்ச்செல்வி தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, காரியானூரில் அரசால் தடை செய்யப்பட்ட சாராயத்தை பாக்கெட் போட்டு விற்பனைக்காக வைத்திருந்த 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, வைத்தியநாதபுரத்தை சேர்ந்த அருள்பாண்டியனின் மனைவி தனம் என்ற தனலெட்சுமி (வயது 32), காரியானூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமியின் மனைவி பவுனாம்பாள் (56) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 11 லிட்டர் 300 மில்லி சாராயத்தை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி
    • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே கோனேரிபாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் ரெஜி என்ற ரகுநாத் (வயது 31). இவர் நேற்று முன்தினம் இரவு அம்மாபாளையத்தில் உள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் லாடபுரம் பிரிவு சாலை அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த ரகுநாத்தை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரகுநாத் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த ரகுநாத் ரவுடி என்றும், அவர் மீது பல்வேறு வழக்குகள் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    • திருச்சி முக்கொம்பு சுற்றுலாதலத்தில் இடையூறு
    • 3 வாலிபர்களை கைது செய்து போலீசார் விசாரணை

    திருச்சி,

    கோவை கே.கே.புதூர் மணியன் மருதகுட்டி வீதி பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் ராஜ். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 35). இவர் தனது உறவினர்களுடன் திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு வந்துள்ளார். பின்னர் அணைக்கட்டு பகுதி, பூங்கா உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 வாலிபர்கள் அவரிடம் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட முத்துலட்சுமியின் உறவினர்களிடமும் தகராறு செய்தனர். மேலும் முத்துலட்சுமியை கைகளால் தாக்கி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஜீயபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து மூன்று வாலிபர்களையும் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் திருச்சி எலமனூர் பகுதியைச் சேர்ந்த சங்கிலி என்கிற தேவா (19), முனீஸ்வரா (19), வினித் (19) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • திருச்சி தனியார் மேல்நிலைப்பள்ளியில் நெகிழ்ச்சி சந்திப்பு
    • இனிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்

    திருச்சி,

    திருச்சி டவுன் ரெயில் நிலையம்அருகே யு.டி.வி. மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 1996-98ம் ஆண்டில் முதல் முதலாக, 11 மற்றும் 12-ம் வகுப்பில் இருபாலர் பயிலும் பள்ளியாக மாற்றப்பட்டது. அப்போது படித்த மாணவ, மாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக கூடுகின்ற அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் விழாவில் பங்கேற்றனர். இவ்விழாவில், தலைமை ஆசிரியர்கள் ராமர், பிச்சை, சேவியர், சந்தானம், தமிழாசிரியர் மு.வைத்தியநாதன், ஆசிரியர்கள் திருஞானசம்பந்தம், ராஜேந்திரன், கிருஷ்ணன், பிரகாசம், அசோக் குமார், சந்திர ரவி, வெங்கடேசன், தமிழ்வாணன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர்.பள்ளி மாணவர்களாக மாறிய பெரியவர்கள், தங்களது வகுப்பு ஆசிரியர்கள் குறித்தும், பள்ளியில் படித்த இனிய அனுபவங்கள் குறித்தும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டனர். விழாவின் ஆரம்பம், ஆசிரியர்களை போற்றுவதாகவும், அவர்களது அறிவுரைகளை ஏற்பதாகவும் அமைந்திருந்தது. அதனைத்தொடர்ந்:து முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளி அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவ, மாணவிகள், அவர்களின் குழந்தைகளின் உற்சாக நடன நிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் சதுருதீன், டோமினிக், கிருஷ்ணமூர்த்தி, சந்திரமோகன், ஜான்சன், சரவண முரளி உள்ளிட்டோர் செய்திருந்தனர். இப்பள்ளி தொடங்கிய நாளில் இருந்து, முன்னாள் மாணவர் சந்திப்பு என்ற நிகழ்வு நடைபெறுவது என்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • துறையூர் அருகே கார் விபத்தில் சிக்கியது
    • அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்

    துறையூர்,

    கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 39). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தொழிற் சங்க அமைப்பாளராக இருந்து வருகிறார். இவருடன் அக்கட்சியை சேர்ந்த அறவக்குறிச்சி தொழிற்சங்க செயலாளர் சுரேந்தர் (42), பொருளாளர் சதீஷ் (48), மாவட்ட துணை செயலாளர் கதிரேசன் (40), கரூர் ஒன்றிய செயலாளர் பிச்சைமணி (48), ஆகாஷ் (25) ஆகிய ஆறு பேரும் இன்று காலை வாடகை கார் ஒன்றில் கரூரிலிருந்து புறப்பட்டு கட்சி நிகழ்ச்சி சம்பந்தமாக பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.காரினை கரூர் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (59) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கார் துறையூர்-முசிறி பிரிவு சாலை அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்பொழுது சாலையை கடப்பதற்காக சாலையோரம் நின்றிருந்த மேலகுன்னுபட்டியை சேர்ந்த கணேசன் (52), கார்த்திக் (30), சோபனபுரம் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (54) ஆகிய இருவரது இருசக்கர வாகனங்களின் மீது பயங்கரமாக மோதியது.இந்தவிபத்தில் கணேசன், ராமமூர்த்தி ஆகிய இருவரும் சுமார் 20 அடி தூரத்திற்கு தூக்கி இழுத்து செல்லப்பட்டனர். பின்னர் அந்த கார் சாலையோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மின்கம்பத்தின் மீது மோதி நின்றது. இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் விபத்தில் படுகாயங்களுடன் போராடிக் கொண்டிருந்த நபர்களை, மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தில் காரில் வந்த ஆகாஷ் என்பவரை தவிர மற்ற ஐந்து நபர்களுக்கு கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு முறிவுடன் படுகாயம் அடைந்து துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட கணேசன் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இது தொடர்பாக துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கார் டிரைவர் குடிபோதையில் இருந்தாரா? அல்லது தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து நடந்ததா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூரில் காலை நேரத்தில் கார் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×