T20 உலகக் கோப்பை திருவிழா 2024

பாகிஸ்தான் தந்தை.. இந்திய மாமனார்.. டி20 லீக் ஆட்டத்தில் சுவாரஸ்யம் - வைரல் வீடியோ

Published On 2024-06-12 05:52 GMT   |   Update On 2024-06-12 05:52 GMT
  • நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19-வது லீக் போட்டி நடைபெற்றது
  • ஈகோ கிளாஸை எளிதாக விளக்கும் வகையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை இந்த போட்டிக்கு வந்த நபர் ஒருவர் அரங்கேற்றியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை 2024 போட்டிகள் அமெரிக்காவில் நடந்து வரும் நிலையில் நியூயார்க்கில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 19-வது லீக் போட்டி நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியை காண வந்த பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ஷாத் அகமத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கிரிக்கெட்டை விளையாட்டு என்று கருதுவதையும் தாண்டி இரண்டு நாடுகளுக்குமாக ஈகோ கிளாசாக ரசிகர்கள் மாற்றத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த ஈகோ கிளாஸை எளிதாக விளக்கும் வகையில் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை இந்த போட்டிக்கு வந்த நபர் ஒருவர் அரங்கேற்றியுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த ரேசா கான் என்ற அந்த கன்டன்ட் கிரியேட்டர், தனது பாகிஸ்தானிய தந்தையையும், இந்திய மாமனாரையும் போட்டிக்கு அழைத்து வந்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடும்போது அவர்களின் ரியாக்சன்களைப் படம்பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து வீடியோ வைரலாகி வருகிறது.

Full View

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் வெளிவந்த உயிரே படத்தில் இருவேறு சித்தாந்தங்களைக் கொண்ட தகப்பன்கள் மும்பையில் நடக்கும் மதக் கலவரத்தின்போது தங்களுக்குள் உள்ள வித்தியாசங்களையும் பிரிவினையையும் எதிர்கொள்ளும் தருணத்தை சந்திப்பர். இந்த வீடியோ அதை நினைவுபடுத்துவதாக உள்ளது.   

Full View

Tags:    

Similar News