ஆன்மிக களஞ்சியம்

108 சிவாலயம் 108 முறை வலம்

Published On 2024-06-20 10:57 GMT   |   Update On 2024-06-20 10:57 GMT
  • தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் “108 சிவாலயம்” என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது.
  • சாபம், பாவம் மற்றும் தோஷங்களை நீக்கவல்ல இத்தலத்தில் ராமபிரான் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க பூஜை செய்தார்.

தஞ்சையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் "108 சிவாலயம்" என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது.

சாபம், பாவம் மற்றும் தோஷங்களை நீக்கவல்ல இத்தலத்தில் ராமபிரான் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க பூஜை செய்தார்.

அப்போது சீதாதேவி 106 சிவலிங்கங்களை உருவாக்கினார். 107வது லிங்கமாக ராமலிங்க சுவாமி காட்சி கொடுத்தார்.

இதற்கிடையே காசியில் இருந்து அனுமன் கொண்டு வந்த லிங்கம் "அனுமந்தலிங்கம்" என்ற பெயரில் 108வது லிங்கமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இத்தகைய சிறப்பு மிக்க பாபநாசம் தலத்தில் வருடம் தோறும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி, பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட உள்ளது.

அன்றைய தினத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 108 சிவலிங்கங்களையும் 108 முறை வலம் வரும் நிகழ்ச்சியும் வெகு பக்திப்பரவசத்துடன் நடைபெறும்.

மேலும் 108 சிவலிங்கங்களுக்கும் நான்கு பால பூஜையும் அபிஷேக ஆராதனைகளும் விமரிசையாக நடைபெற உள்ளன.

இந்த ஆலயத்தை ஒரு முறை தரிசித்தால் 108 சிவாலயங்களை தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.

Tags:    

Similar News