ஆன்மிக களஞ்சியம்

4 கால பூஜையில் கலந்து கொள்ளுங்கள் தான-தர்மங்களை தவறாமல் செய்யுங்கள்

Published On 2024-06-19 11:05 GMT   |   Update On 2024-06-19 11:05 GMT
  • சிவம் என்ற சொல்லுக்கு “மங்களமானது” என்று பொருள்.
  • சிவன்முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார்.

சிவம் என்ற சொல்லுக்கு "மங்களமானது" என்று பொருள்.

சிவன்முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார்.

சிவபெருமானை காலையில் தரிசிக்க - நோய்கள் நீங்கும். நண்பகலில் தரிசிக்க - தனம் பெருகும். மாலையில் தரிசிக்க - பாவம் அகலும். அர்த்த சாமத்தில் தரிசிக்க - வீடுபேறு கிடைக்கும்.

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்தும் சிவனின் தொழில் எனப்படுகிறது.

அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்றுவகையான சிவ வழிபாட்டு முறையில் உருவ வழிபாடும் சைவர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

சிவனை மூலமூர்த்தியாகக் கொண்டு இந்தியா, இலங்கை, நேபாளம் உட்பட பல நாடுகளில் கோவில்கள் பல உண்டு.

ஜோதி லிங்கங்கள் உள்ள சிவத்தலங்கள், பஞ்சபூத சிவத்தலங்கள், ஐந்து தாண்டவங்களுக்கான சிவத்தலங்கள், ஐந்து மன்றங்களுக்கான சிவத்தலங்கள்,சப்த விடங்க சிவத்தலங்கள், முக்தி தரவல்ல சிவத்தலங்கள், தமிழகத்தின் நவ கைலாயங்கள் (சிவதலங்கள்), தேவாரப் பாடல் பெற்ற சிவதலங்கள், அட்டவீரட்டானக் கோவில்கள் என பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

மகாசிவராத்திரி, யோகசிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ஷிய சிவராத்திரி, மாத சிவராத்திரி என ஐந்து வகைகளாக கொண்டாடப்படும் சிவராத்திரி திருவிழா சைவர்களின் முக்கிய விழாவாகும்.

மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் சதுர்த்தசி நாளை மகா சிவராத்திரி என்று அழைக்கின்றார்கள்.

Tags:    

Similar News