ஆன்மிக களஞ்சியம்

4. பெருங்குளம்

Published On 2023-12-06 11:57 GMT   |   Update On 2023-12-06 11:57 GMT
  • குமுதவல்லியை அரக்கனிடமிருந்து பெருமாள் மீட்டுவந்தார்.
  • இது சனி கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

திருப்புளியங்குடியில் இருந்து அதே சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் பெருங்குளத்தில் மூலவர்

வேங்கடவாணனாகவும், உற்சவர் மாயக்கூத்தன் தாயர் அலமேலுமங்கை, குளந்தைவல்லி தாயாருடன்

அருள் பாலிக்கிறார்.

பெருங்குளத்தில் வசித்து வந்த வேதசாரண் குமுதவல்லி தம்பதியினரின் மகள் கமலாவதி,

தான் திருமணம் செய்தால் பெருமாளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி,

பெருமாளை நோக்கி கடும் தவம்புரிந்தார்.

பெருமாளும் நேரில் தோன்றி தன்னுடைய மார்பில் கமலாவதியை ஏற்றுக்கொண்டார்.

ஒரு சமயம் வேதாசாரண் மனைவி குமுதவல்லியை அச்மசாரன் என்னும் அரக்கன் கவர்ந்து சென்றான்.

குமுதவல்லியை அரக்கனிடமிருந்து பெருமாள் மீட்டுவந்தார்.

பெருமாளுடன் அரக்கன் போரிட்டான்.

அரக்கனை நர்த்தனம் செய்து அவனை வதம் செய்ததால், மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெருமாளுக்கு ஏற்பட்டது.

இது சனி கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

Tags:    

Similar News