500 வருடங்கள் பழமையான ஈரோடு மயிலாடி கிருஷ்ண பெருமாள் ஆலயம்
- இந்த தலத்தில் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர் மிகவும் விசேஷமானவர்.
- எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும்,
சென்னிமலையில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது கிருஷ்ண பெருமாள் ஆலயம்.
சுமார் 500 வருடங்கள் பழமை மிக்க திருக்கோவில் இது.
ஸ்ரீ கிருஷ்ணரின் விக்கிரக மூர்த்தமானது, பன்னெடுங்காலத்துக்கு முன்பு சுயம்புவாக தோன்றியதாகும்.
இவருக்கு அவல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
திருமண வரம் கைகூடும். நஷ்டத்தில் இயங்கி வந்த வியாபாரம் லாபம் கொழிக்கும்.
இந்த தலத்தில் உள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர் மிகவும் விசேஷமானவர்.
இவருக்கு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை சாத்தி பிரார்த்தித்தால் மனக்கிலேசங்கள் அனைத்தும் விலகிவிடும்.
எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும்.
ஸ்ரீகிருஷ்ணபெருமாளுக்கு சர்க்கரை பொங்கல், பால், வெண்ணெய் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து,
வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் விரைவில் நடந்தேறும்.
ஸ்ரீ கிருஷ்ணபெருமானை வணங்கிவிட்டு தொழிலை தொடங்கினால் வியாபாரம் சீரும் சிறப்புமாக நடைபெறும்.