null
- இத்தலத்தில் மழை வேண்டி பிரார்த்தனை செய்தால் இன்று வரை பொய்ப்பதில்லை.
- இது சுக்கிர கிரகதோஷ நிவர்த்தி ஸ்தலம்.
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தில் தென் திருப்பேரை உள்ளது.
இங்கு மூலவர் மகர நெடுங்குழைக்காதர் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
உற்சவர் நிகரில் முகில் வண்ணன், தாயார் குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார்
ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
துர்வாசமுனிவரின் சாப விமோசனம் பெறுவதற்காக பூமாதேவி இத்தலம் வந்து
ஓம் நமோ நராயணாய என்ற மந்திரத்தை ஜெபம் செய்தார்.
பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும்போது
இரண்டு மகர குண்டலங்கள் கிடைக்க திருமாலுக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
அப்போது தேவர்கள் பூமாரி செரிய பூமா தேவியின் மேனி அழகானது.
லக்குமியின் உடலுடன் பூமாதேவி தவமிருந்ததால் இவ்வூர் ஸ்ரீபேரை என்றழைக்கப்பட்டது.
இத்தலத்தில் மழை வேண்டி பிரார்த்தனை செய்தால் இன்று வரை பொய்ப்பதில்லை.
இது சுக்கிர கிரகதோஷ நிவர்த்தி ஸ்தலம்.