- ஆதி திருவரங்கத்தில் இருக்கும் பெருமாள் நினைத்தால்தான் இந்த தலத்துக்கு வர முடியும் என்பது ஐதீகமாகும்.
- ஆதி திருவரங்கம் ஆலயம் முதல் யுகத்தில் உருவான வைணவ தலம் என்ற சிறப்பை பெற்றது.
1. ஆதி திருவரங்கம் ஆலயம் முதல் யுகத்தில் உருவான வைணவ தலம் என்ற சிறப்பை பெற்றது.
2. ஆதி திருவரங்கத்தில் இருக்கும் பெருமாள் நினைத்தால்தான் இந்த தலத்துக்கு வர முடியும் என்பது ஐதீகமாகும்.
3. ஆலய வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்களிடம் இந்த ஆலயத்தின் சிறப்புகளை அர்ச்சகர்கள் சொல்லிக்கொண்டே இருப்பது சிறப்பாகும்.
4. ஆதிதிருவரங்கம் ஆலயம் திராவிட கட்டிட கலை பாணியில் கட்டப்பட்டு உள்ளது. இங்குள்ள சிற்பங்கள் திராவிட கலையின் சிறப்புகளை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
5. ஆதி திருவரங்கம் ஆலயத்தை மிகப்பெரிய ஆலயம் என்றும் சொல்ல முடியாது. மிகச்சிறிய ஆலயம் என்றும் குறித்துவிடமுடியாது.
2 பிரகாரங்களுடன் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
6. ஆதி திருவரங்கத்தின் ஆலய சுற்றுச்சுவர்கள் மிக மிக உயரமானவை. வைணவ தலங்களில் சில ஆலயங்களில் மட்டுமே இத்தகைய உயரமான சுற்றுச்சுவரை காண முடியும்.
7. இந்த ஆலயத்தில் பலிபீடம், கொடிமரம் ஆகிய இரண்டும் மகா மண்டபத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
8. இந்த ஆலயம் முதல் யுகத்தில் திருமாலின் முதல் அவதாரத்தை குறிக்கும் வகையில் உள்ளது. எனவேதான் இந்த ஆலயத்தை ஆதி திருவரங்கம் என்று சொல்லுகிறார்கள்.
9. சிறப்பான வைணவ தலங்கள் 108 திவ்ய தேசம் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த தலம் திவ்ய தேச பட்டியலில் இல்லாமல் தனித்துவமாக திகழ்கிறது.
10. ஆதி திருவரங்கம் ஆலயம் மிகச்சிறந்த பிரார்த்தனை தலமாகும்.