- பட்டுபாவாடை உடுத்தி பூமாலை சூட்டி அழகுபடுத்துவர்.
- அம்மனுக்கு பிடித்தது வேப்பிலை மாலை அதை அழகுற அணிவித்து அழகாக்குவர்.
"ஆடி" என்பது புராணங்களில் குறிப்பிடப்படும் ஓர் அசுரனின் பெயர்.
நினைத்த மாத்திரத்தில் விரும்பிய உருவத்தைப் பெறும் ஆற்றல் கொண்டவன்.
சிவபெருமான், தம் நெற்றிக் கண்ணைத் திறந்து அவனை அழித்தார்.
சிவனையடையும் பக்தி ஞானம் அவனுக்கிருந்த காரணத்தால் அன்னை உமாதேவி மனமிரங்கி அவன் நினைவாக மாதங்களில் ஒன்றை "ஆடி" என்று அழைத்தாள்.
அதுவே அன்னைக்கு ஆராதனை செய்யும் மாதமாக அமைந்தது.
வழிபடுவது எப்படி?
உலகிற்கெல்லாம் தாயான அன்னை பராசக்திக்கு எம்மைக் காத்திட வேண்டி அவள் அருள் பெற,
ஆடி மாதம் பிறந்ததும் கூழ் காய்ச்சி கொழுக்கட்டை பிடித்து அவித்து அம்மனுக்கு படைப்பார்கள்.
அம்மன் கோவில்கள் எங்கும் கூழ்காய்ச்சி ஊற்றுவார்கள்.
காற்றாலும் வெப்பத்தாலும் ஏற்படும் நோய்களை குணப்படுத்த அந்த முத்துமாரி அம்மன் மனது வைக்க வேண்டும் என்று வேண்டுதல் பண்ணுவர்.
வேப்பிலைமாலை சாற்றுதலும் எலுமிச்சைக்கனி மாலை சாற்றி வெப்பு நோய் தீர்க்க வழிபடுவதும் காலகாலமாய் நடைபெற்று வரும் வழக்கமாகும்.
எலுமிச்சைசாறு, கரும்பு, இளநீர், பால், தயிர், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து அம்மனை குளிரச்செய்வர்.
பட்டுபாவாடை உடுத்தி பூமாலை சூட்டி அழகுபடுத்துவர்.
அம்மனுக்கு பிடித்தது வேப்பிலை மாலை அதை அழகுற அணிவித்து அழகாக்குவர்.
தயிர்சாதம், எலுமிச்சைசாதம், கூழ் கஞ்சி போன்றவைகள படையல் இட்டு அன்னபூரணி எமக்கு என்றும் குறைவில்லாத வாழ்வை வளமுடன் தந்திட நிவேதனம் செய்து,
பழங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றையும் சேர்த்து படைத்து தூபம் தீபம் காட்டி பூச்சொரிந்து பூமலர்களால் அர்ச்சித்து வழிபாடாற்றுவர்.