- ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும்.
- 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று.
ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடப்படும்.
இந்த நாளில் நதிகளில் நீர்ப் பெருக்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
அந்த நாளில், நதிக்கரை மற்றும் கடற்கரைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து இரவு உணவு உண்பதும் மரபாக இருந்து வந்துள்ளது.
புதிதாக திருமணமான புதுமணத் தம்பதிகள் நதிக்கரையில் நிலாச் சோறு சாப்பிடுவார்கள்.
அன்றைய தினம் தாலி மாற்றிப் புதுத் தாலி அணிவதும் வழக்கம்.
திருமணமாகாத பெண்கள், விரைவில் திருமணமாக வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொள்வார்கள்.
ஆடி மாதம் என்பது விவசாயிகளுக்கும் உகந்த மாதமாகும்.
விவசாயிகள் தங்கள் பணிகளை இந்த மாதத்தில்தான் துவக்குவார்கள்.
'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழியும் இதனால்தான் உருவாயிற்று.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயில் தபசு விழா இந்த மாதத்தின் சிறப்புகளுக்கு சிறப்பு சேர்க்கும் விழாவாகும்.