ஆன்மிக களஞ்சியம்

ஆலயத்தின் சிறப்புகள்

Published On 2024-02-03 12:08 GMT   |   Update On 2024-02-03 12:08 GMT
  • தாத்ரீ என்றால் நெல்லி என்று பொருள்.
  • இந்த சிவாலயத்தில் அருள்புரியும் தாத்ரீஸ்வரர் இருந்த இடம் நெல்லி மரங்கள் இருந்த இடம்.

தாத்ரீ என்றால் நெல்லி என்று பொருள்.

இந்த சிவாலயத்தில் அருள்புரியும் தாத்ரீஸ்வரர் இருந்த இடம் நெல்லி மரங்கள் இருந்த இடம்.

ஒரு நெல்லி மரத்தினடியில் இச்சிவனார் அமர்ந்திருந்ததால் இவருக்கு நெல்லி அப்பர் என்ற பெயர் வழங்கலாயிற்று.

பூவைப் போன்ற மென்மையான கூந்தலை உடையவளாய் அன்னை காணப்பட்டதால் அன்னையின் பெயர் வடமொழியில் பிரசூன குந்தளாம்பிகை என்றும், தமிழில் பூங்குழலி அம்மை எனவும் வழங்கலாயிற்று.

மற்றொரு சிறப்பு என்னவெனில் இந்த சித்துகாடு, சித்தர்காடு, திருமணம் கிராமம் என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

தாத்ரீஸ்வரருக்கு நெல்லிச் சாறால் அபிஷேகம் செய்தும், அன்னை பிரசூன குந்தளாம்பிகைக்கு கண்ணாடி வளையல்கள் அணிவித்து, மங்கலப் பொருட்களுடன் இறைவனுக்கும், இறைவிக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டால் கால தாமதமான திருமணங்கள், தடைபட்ட திருமணங்கள் வெகு விரைவில் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.

இவ்வாறு தடைபட்ட, நாட்கள் கடந்த திருமணங்களை வழிபாடு செய்து நிறைவேற்றக் கோரும் பக்தர்கள் சுவாதி நட்சத்திரத்திலோ, அல்லது அவரவர்களது பிறந்த நட்சத்திர நாட்களிலோ செய்து கொள்வது நல்லது.

Tags:    

Similar News