ஆன்மிக களஞ்சியம்

பாம்புகளை அனுப்பி அற்புதம் நிகழ்த்திய இருக்கன்குடியாள்

Published On 2023-08-13 06:44 GMT   |   Update On 2023-08-13 06:44 GMT
  • மூர்த்திகளை தொடுவதோ அல்லது மூர்த்திகளின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவதோ கூடாது.
  • காலை சுத்தம் செய்யாமல் கோவிலுக்கு செல்லக் கூடாது.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு கலவரம் காரணமாக இருக்கன்குடி மாரியம்மனை வழிபட வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்தது. இது பற்றி பரம்பரை பூசாரி வருத்தப்பட்டு அம்பாளிடம் கேட்டார். அப்போது அம்மன் குரல் அசரீரியாக ஒலித்தது.

குழந்தாய்! நீ வருந்தாதே. நாளை என்னிடம் இருந்து 2 நல்ல பாம்புகள் வரும். அவற்றிடம் நீ அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

இதை கேட்டதும் பூசாரி உற்சாகமானார். மறுநாள் அம்மனுக்கு நைவேத்தியம் செய்து பூஜைகள் நடத்தினார்.

பூஜை நடத்தி முடித்ததும் அம்மன் சொன்ன மாதிரியே 2 நல்ல பாம்புகள் அம்மன் சிலை பின்னால் இருந்து வந்தன. அவற்றை பார்த்ததும் பூசாரி, வாருங்கள், வாருங்கள், இதோ உணவு சாப்பிடுங்கள் என்று கூறி தான் தயாராக வைத்திருந்த முட்டையை எடுத்து வைத்தார்.

முட்டையை குடித்த 2 பாம்புகளும் பிறகு மீண்டும் அம்மன் சிலை பின்னே சென்று மறைந்தன. பிறகு அந்த இரண்டு பாம்புகளும் அடிக்கடி பூசாரியிடம் வந்து சென்றன.

பூசாரியும் அந்த பாம்புகளை வரவேற்று உணவு கொடுப்பது வழக்கமானது. நாளடைவில் அந்த பாம்புகள் பூசாரியிடம் செல்லப்பிராணிகள் போல மாறி பழகின.

சில நாட்கள் கழித்து பூசாரி தன் மனைவி முத்து லட்சுமியிடம், இனி நான் இரவில் கோவிலில் தான் தூங்கப்போகிறேன் என்றார். அதன்படி இரவில் கோவில் சன்னதியில் தங்கி வந்தார்.

அப்போது இரண்டு பாம்புகளும், பூசாரியுடன் படுத்துக்கொண்டன. இதை நிறைய பேர் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

அந்த காலத்தில் இந்த சம்பவம் இருக்கன்குடி மாரியம்மன் நிகழ்த்திய அற்புதமாக தென் மாவட்ட மக்களிடம் பேசப்பட்டது.

* அவசர அவசரமாகவோ, கோபமாகவோ பூஜை செய்வதோ, ஆலயம் செல்வதோ கூடாது.

* காலை சுத்தம் செய்யாமல் கோவிலுக்குச் செல்லக் கூடாது.

* கோவிலுக்குள் வலம் வரும்போது வேக வேகமாக வலம் வரக்கூடாது. நிறைமாத கர்ப்பிணிப் பெண் தலையில் எண்ணை குடத்துடன் நடந்தால் எப்படி நடப்பாளோ அப்படியே நடக்க வேண்டும்.

* மூர்த்திகளைத் தொடுவதோ அல்லது மூர்த்திகளின் திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவதோ கூடாது.

* கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ, தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது.

* இறைவனுக்கு நைவேத்தியம் ஆகும்போது பார்க்கக் கூடாது.

* விபூதி, சந்தனம், அபிஷேகம் தவிர சாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்கக் கூடாது.

* சாமிக்கும் நந்திக்கும் குறுக்கே போதல், சிவ நிர்மால்யங்களைத் தூண்டுதல், மிதித்தல் கூடாது.

* ஸ்தூபி, கொடிமரம், பலிபீடம், விக்கிரகம் ஆகியவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.

* பிறர் வீட்டில் அன்னம் புசித்த அன்று கோவிலுக்குச் செல்வது தவறு.

* கோவிலுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு கொண்டு செல்ல வேண்டும். பிறர் பொருளைக் கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்யக் கூடாது.

* வீட்டில் தினமும் செய்யும் வழிபாட்டை செய்யாமல் நிறுத்தி விட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது.

* மரணத்தீட்டு உள்ளவர்களையோ தீட்டு உள்ளவர்களோ அல்லது அத்தீட்டு உடையவரைத் தொட்டபின் குளிக்காமலோ கோவிலுக்குச் செல்லக் கூடாது.

* கருப்பு வண்ண உடை அணிந்து கோவிலுக்குச் செல்லக்கூடாது.

Tags:    

Similar News