- ஆதிசங்கரர் இயற்றிய கராவலம்பனத் துதியையும் பஞ்சரத்தினத்தையும் நரசிம்மர் வழிபாட்டில் மிக முக்கியமாகக் கருதுகின்றனர்.
- சீடரான பத்மபாதரின் மூலம், சங்கரரைக் காப்பாற்றியது நரசிம்ம மூர்த்தியே.
இல்லற வாழ்வு பற்றியும் வாதிடும் நிலையைப் பெறுதற்காக ஆதிசங்கரர், தன் உடலை ஒரு காட்டு மரத்தில் மறைத்து விட்டு, இறந்துவிட்ட அமரசன் என்பவனின் உடலில் புகுந்து, சிலகாலம் கழித்து, அறிய வேண்டியது நிறைவானவுடன், தம் பழைய உடலைத் தேடிச் செல்கிறார்.
அப்போது, உடல் பாதி எரிந்து கொண்டிருந்தாலும் சங்கரர் அதனுள் புகுந்தவுடன் ஏற்பட்ட தாங்க முடியாத உஷ்ணத்தைத் தணிக்க, சுவர்ண நரசிம்மரைத் துதித்த பின்னரே முன்பிருந்த தேகப் பொலிவை மீளப் பெறுகிறார்.
பின்னொரு சமயம், காபாலிகர்கள் சங்கரரைக் கொல்ல முற்பட்டபோது, அவரின் சீடரான பத்மபாதரின் மூலம், சங்கரரைக் காப்பாற்றியது நரசிம்ம மூர்த்தியே. இதனால் தான், கொலை செய்யப்படுவோமோ என பயப்படுபவரும், தீக்காயத்தால் அவதிப்படுபவர்களும், ஆதிசங்கரர் இயற்றிய கராவலம்பனத் துதியையும் பஞ்சரத்தினத்தையும் நரசிம்மர் வழிபாட்டில் மிக முக்கியமாகக் கருதுகின்றனர்.