ஆன்மிக களஞ்சியம்

ஸ்ரீ திரி நேத்திர தசபுஜ ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிகள் அவதார வரலாறு

Published On 2023-07-24 10:59 GMT   |   Update On 2023-07-24 10:59 GMT
  • தவம் பூர்த்தியானால் சக்தி மிகுந்த வரங்களை பெற்றுவிடுவார்கள்.
  • அன்பு ஆஞ்சநேயா இந்த சம்ஹாரம் உன்னால் நடக்கட்டும் என கூற அனுமார் தயாரானார்.

இலங்கை யுத்தம் முடிந்து ஸ்ரீ ராமர் அயோத்திக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். வழியில் ஸ்ரீபரத்வாஜ மகரிஷி வரவேற்று ஆசி கூற ஆஸ்ரமத்தில் ஸ்ரீ ராமர் சீதா பிராட்டி லட்சுமணன் ஆஞ்சநேயர் ஆகியோர் தங்கினர். அப்போது அங்கு திரிகால ஞானியான நாரதர் வந்து சேர்ந்தார். நாரதரை வணங்கி ஸ்ரீராமருக்கு ஆசி கூறிய நாரதர் ராமா முக்கியமான விஷயமாகவே உன்னை சந்திக்க வந்தேன். இலங்கை யுத்தம் முடிந்தாலும் அது இன்னமும் முற்றுப் பெறவில்லை. உனது வில்லுக்கு இன்னமும் வேலை உள்ளது என்று கூற திகைத்த ஸ்ரீராமர் 'நாரத மகரிஷியே தாங்கள் என்ன கூறுகிறீர்கள்? விளக்கமாக கூறுங்கள் என்று வேண்டினார்.

ராமா! ராவணன் அழிந்தாலும் அரக்கர்கள் வாரிசுகள் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். இலங்கை யுத்தத்துக்கு பழிக்கு பழி வாங்க சபதம் செய்துள்ளார்கள். இரக்த பிந்து இரக்த ராட்சகன் என்ற இரண்டு அசுரர்கள் கடலுக்கு அடியில் அமர்ந்து தவம் செய்கிறார்கள். இவர்கள் தவம் பூர்த்தியானால் சக்தி மிகுந்த வரங்களை பெற்றுவிடுவார்கள். பிறகு அவர்களால் உலகுக்கு பெரும் அழிவு ஏற்படும். எனவே இவர்களை நீ உடனே சம்ஹாரம் செய்ய வேண்டும்' என நாரதர் கூறினார்.

மகரிஷியே நீங்கள் கூறுவதை ஏற்கிறேன். ஆனால் இப்போது நான் அயோத்தி செல்வதில் தாமதிக்க இயலாது. குறிப்பிட்ட நாளில் நான் அயோத்தி செல்லாவிடில் தம்பி பரதன் தீக்குண்டம் இறங்கி உயிரை விட்டுவிடுவான் என ராமர் கூற 'அப்படியானால் சரி உனக்கு பதில் தம்பி லட்சுமணனை அனுப்பு என நாரதர் கூற அவன் என் நிழல் ஆயிற்றே என்னை விட்டு பிரியமாட்டான் என்று சபதம் செய்துள்ளானே என்ற ராமர் கண்களில் அனுமார் பட அனுமாரை அழைத்தார் 'அன்பு ஆஞ்சநேயா இந்த சம்ஹாரம் உன்னால் நடக்கட்டும் என கூற அனுமார் தயாரானார்.

அரக்கர்களின் ஆணிவேரை அழிக்கும் யுத்தமல்லவா? தேவர்கள் வாழ்த்தினர். திருமால் சங்கு சக்கரத்வீயும தனது அவதாரமான ஸ்ரீஹயக்கிரீவா ஸ்ரீநரசிம்மா ஸ்ரீவராஹர் ஸ்ரீகருடன் ஆகிய அவதாரத்தையும் வழங்க பிரம்மா பிரம்மா கபாலத்தை வழங்க தேவர்கள் ஒவ்வொருவரும் ஆயுதம் தந்திட ஆஞ்சநேயர் 10 கரங்களுடன் காட்சி தந்தார். விரைவாக செல்ல கருடன் தனது சிறகுகளை தந்தான். அனுமார் புறப்படும் நேரம் சிவபெருமான் வந்து சேர்ந்தார். 10 கரங்கள் 10 கரத்திலும் ஆயுதங்கள். எதை தருவது? பார்த்தார் சிவன் தன் நெற்றிக்கண்ணையே தந்துவிட்டார். மூன்று கண்கள் 10 கரங்களுடன் புறப்பட்ட வீர தீரம் நிறைந்த ஸ்ரீதிரிநேத்திர தசபுஜ ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கினால் வாழ்வில் வளங்கள் பல பெற்று வாழலாம்.

1. ஹயக்ரீவர் - எல்லா வித்தைகளுக்கும் ஞானத்திற்கும் அதிபதி ஹயக்ரீவர். அவருடைய அம்சமாக சகல விதமான ஞானத்தையும் பெற்ற அறிவாளி ஹனுமான். அவருடைய சிறந்த ஞானத்தை ராமனே வியந்து பாராட்டுகிறான். இவன் ருக்வேதம். யஜுர் வேதம்; சாம வேதம் இவற்றைப் பரிபூரணமாக அறிந்தவன். இலக்கணங்களை நன்றாகக் கற்றவன். இவன் பேச்சில் குறைபாடு ஒன்றுமே இல்லை. மிக விஸ்தாரமாகவும் மிகவும் சுருக்கமாகப் பேசி அளவோடு நிதானமாக மதுரமான குரலில் வார்த்தைகளை பேசும் ஆற்றல் அனுமானிடம் உள்ளது.

2. வராஹர் - மஹாவிஷ்ணுவின் வாராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று பூமி தேவியைக் கண்டுபிடித்து இரண்யாஷணியிடமிருந்து தேவியை மீட்டார். ஹனுமானும் யாரும் செல்ல முடியாத இலங்கைக்குச் சென்று சீதையை கண்டுபிடித்து ராவணனிடமிருந்து மீட்பதற்கு உதவினார்.

3. நரசிம்மர் - தம்முடைய பக்தனான பிரகலாதனுக்கு தீங்கு விளைவித்த இரண்யனை ஆக்ரோஷத்துடன் சம்ஹாரம் செய்தார். இங்கே தம்முடைய தெய்வமான சீதாதேவிக்கு தீங்கு விளைந்ததற்காக மாருதி ராவணனுடைய சேனை சேனாதிபதிகளை மந்திரிக்குமாரர்கள் முதலானோரை வதம் செய்து இலங்கையையும் எரியச் செய்தார்.

4. கருடன் - பஷிகளுக்கெல்லாம் தலைவனாக கருடன் போற்றப்படுகிறார். பஷிராஜன் என்றே அவருக்குப் பெயர். ஆகாயத்தில் எல்லா உலகங்களாலும் எங்கும் பறக்கும்; வல்லமை படைத்தவர். அவருடைய அம்சமாக அவருடைய சக்தியால்தான் அனுமான் பெருங்கடலைக் கடந்து இலங்கையை அடைந்தார். மீண்டும் கருடனைப் போலவே ஆகாய மார்க்கமாக கடலைக் கடந்து ராமனிடம் வந்து சேர்ந்தார்.

இப்படி நால்வருடைய அம்சமும் சக்தியும் கொண்டவர் ஹனுமான். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் இந்த நால்வரோடு ஹனுமானையும் சேர்த்து பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று விசேசமாக கொண்டாடுகிறோம.; ஈரேழுலோகங்கள் தோன்றி அழிந்து போனாலும் நீ மட்டும் இன்று போல் என்றும் சிரஞ்சீவியாக இருப்பாய் என்று பன்முறை வாக்கு சாதுர்யம் பெற்றவர்.

Tags:    

Similar News