- பெரிய வேப்ப மரத்திலிருந்து சுவைமிக்க பால் வடிய ஆரம்பித்தது.
- உலகில் சிறந்தது தாயன்பு. ஒருவனை மற்றவர்கள் எப்படி நேசித்தாலும் தாயின் அன்பிற்கு ஈடு இணை கிடையாது.
மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி 'சுயம்புவாய்' தோன்றி இருக்கிறாள். சென்னையில் இருந்து 92 கிலோ மீட்டரில் இத்தலம் உள்ளது. இங்கு இருபத்தொன்று சித்தர்கள் ஜீவ சமாதியுடன் ஆதிபராசக்தியின் கோவில் அமைந்துள்ளது. இதனால் இதனை சித்தர் பீடம் என்று கூறுகிறார்கள்.
சித்தர்கள் சாதி, சமயம் என்ற எல்லையினைக் கடந்தவர்கள். ஆதலால் மருவத்தூரில் சாதி, சமயம், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் அன்னையை வழிபடலாம். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைந்துள்ள இடத்தில் ஒரு பெரிய வேப்பமரம் கொப்பும் கிளையுமாக வளர்ந்திருந்தது. அதன் அடியில் பிரம்மாண்டமான புற்று ஒன்றும் இருந்தது. ஒருநாள் அந்தப் பெரிய வேப்ப மரத்திலிருந்து சுவைமிக்க பால் வடிய ஆரம்பித்தது. தொடர்ந்து பல நாட்கள் வழிந்து கொண்டேயிருந்த அந்தப் பாலை குடித்து பல பேர் பயன் பெற்றார்கள்.
1966-ம் ஆண்டு ஒருநாள் அடைமழையும் காற்றும் புயலுமாகி தமிழகத்தையே உலுக்கியது. அப்பொழுது அந்தப் பால் வடியும் வேப்ப மரமும் வேரோடு பெயர்ந்து விழுந்தது. வீழ்ந்த அந்த வேப்பமரத்தின் வேர்களுக்கு அடியிலிருந்து இந்த மானுடத்தையே ஈன்றெடுத்த அன்னை ஆதிபராசக்தி சுயம்புவாக எழுந்தருளினாள். அந்த இடம் தான் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவிலின் இன்றைய கருவறையாகும்.
கருவறைக்குச் சென்று கண்குளிர அம்மனை தரிசிக்கும் பேறு எல்லோருக்கும் கிடைக்கிறது. பங்காரு அடிகளாரை மேல்மருவத்தூர் சித்தர் பீட ஆன்மீக குருவான இவரை 'அம்மா' என்று அன்போடு அழைக்கிறார்கள். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, மலேசியா உள்பட பல நாடுகளில் கூட செவ்வாடை பக்தர்கள் இருக்கிறார்கள்.
அனைத்து உயிரினங்களின் ரத்தம் சிவப்பு. இந்த ரத்தம் மன ஓட்டத்திற்கு எழுச்சி தரும். இந்த ரத்த பாதிப்புதான் செவ்வாடை ஆதிபராசக்தி பக்தர்கள் சிவப்பு ஆடை உடுத்துவதன் ரகசியம் இதுதான்.
உலகில் சிறந்தது தாயன்பு. ஒருவனை மற்றவர்கள் எப்படி நேசித்தாலும் தாயின் அன்பிற்கு ஈடு இணை கிடையாது.
உலகின் பொதுவார்த்தை அம்மா அவள் இயக்குகிறாள். நாம் இயங்குகிறோம். அவ்வகை அம்மா தான் மேல்மருவத்தூரில் உள்ளாள்.
ஆடி மாதம் முழுவதும் குறிப்பாக ஆடிப்பூரத்தன்று இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.