- திருமணம், குழந்தைபேறு வேண்டும் பெண்கள் மஞ்சள் கயிற்றை தாயாருக்கு சமர்பிக்கிறார்கள்.
- இப்படி ஆயிரக்கணக்கில் சேரும் சரடுகளை தாயாரை சுற்றி வைத்து அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.
திருமலை ஸ்ரீனிவாச பெருமாளை மணம்புரிய பூமியில் அவதரித்தவள் அலர்மேல் மங்கை என அழைக்கப்படும் பத்மாவதி தாயார்.
திருமாலின் வல மார்பில் உறைந்துள்ள பத்மாவதி தாயார் கீழ் திருப்பதியில் உள்ள அலர்மேல் மங்காபுரத்தில் (திருச்சானூர்) தனிக்கோவில் கொண்ட எழுந்தளியுள்ளார்.
திருமலைக்கு செல்பவர்கள் முதலில் தாயாரை வணங்கி அனுமதி பெற்றே ஏழுமலையானை தரிசனம் செய்ய மலையேற வேண்டும் என்பது ஐதீகம்.
திருமலை ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படுவது போல் இங்கும் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
மேலும் தாயாருக்கு தினமும் விதவிதமான பிரசாதங்கள் நைவேத்யமாக படைக்கப்படுகிறது.
அதில் தயிர் சாதம் முக்கியமாக இடம் பெறுகிறது.
தாயாருக்கு அதிகாலையில் நடக்கும் முதல் நைவேத்தியத்தில் தயிர்சாதம், புளியோதரை, வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் படைக்கப்படும். "மாத்ரா" என்றழைக்கப்படும் தாளிக்காத தயிரில் வெண்ணை கலந்த சாதம் இடம் பெறும்.
மேலும் லட்டு, வடை, கேசரி ஆகியவையும் படைக்கப்படுகிறது.
2-வது நைவேத்யம் காலை 9 மணிக்கு நடக்கிறது. அப்போது புளியோதரை, சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தயிர் சாதம் நைவேத்யம் செய்யப்படுகிறது.
3-வது நைவேத்யம் மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.
அப்போது தயிர் சாதம், புளியோதரை, சர்க்கரை பொங்கல், மிளகு பொங்கல் ஆகியவை படைக்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை தோறும் தயாருக்கு நடக்கும் திருமஞ்சனத்தின் போது வெண் பொங்கலும், பின்னர் நடக்கும் லட்சுமி பூஜையின் போது கேசரியும் நைவேத்யம் செய்யப்படுகிறது.
கல்யாண உற்சவத்தின் போது சர்க்கரை, பொங்கல், புளியோதரை, வெண்பொங்கல், அப்பம், காய்கறிகளால் தாயாரிக்கப்படும் கதம்ப சாதம், பாயாசம் படைக்கப் படுகிறது.
மதியம் நடக்கும் அபிஷேகத்தின் போது கார புளியோதரையும், வியாழக்கிழமை நடக்கும் திருப்பாவாடை சேவையின்போது லட்டு, வடை, சிலேபி, முறுக்கு, தோசை, அப்பம் ஆகியவையும் படைத்து வழிபாடு நடக்கிறது.
தனுர் மாதம் என்று அழைக்கப்படும் மார்கழி மாத பூஜையின் போது தாயாருக்கு வெண்பொங்கல், வெல்ல தோசை, சுசியம் நைவேத்யமாக படைக்கப்படுகிறது.
பிரமோற்சவ நாட்களில் வாகன சேவையின் போது தாயாருக்கு தோசை நைவேத்யம் கொடுக்கப்படுகிறது.
முக்கிய பண்டிகை நாட்களில் சித்தராண்ணம் பால் கோவா, வடை பருப்பு, சுண்டல், பானகம்,, மைசூர்பாகு, பாதுஷா ஆகியவை படைக்கப்படுகிறது.
தாயாருக்கு வெள்ளிக்கிழமை பூஜை விசேஷம். குறிப்பாக தை வெள்ளிக்கிழமை அதிவிசேஷமாக கருதப்படுகிறது.
திருமணம், குழந்தைபேறு வேண்டும் பெண்கள் மஞ்சள் கயிற்றை தாயாருக்கு சமர்பிக்கிறார்கள்.
இப்படி ஆயிரக்கணக்கில் சேரும் சரடுகளை தாயாரை சுற்றி வைத்து அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.
சரடு சமர்பிக்கும் பெண்களுக்கு அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுகின்றது என்பது பக்தர்களின் நம்பிக்கை.