அமிர்தத்தை ஒளித்து வைத்த பிள்ளையார்
- அமிர்தம் வெளிப்பட்டபோது அமிர்தகலசத்தை எடுத்து பிள்ளையார் மறைத்து வைத்து விட்டார்.
- இங்கு பிள்ளையார் மறைத்து வைத்த அமிர்தகலசம் நாளடைவில் லிங்க வடிவாக மாறிவிட்டது.
நாகை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள பிள்ளையாரின் பெயர் கள்ளவாரணப் பிள்ளையார் என்பதாகும்.
தேவர்களும், அசுரர்களும் திருப்பாற் கடலை கடைவதற்கு முன் இந்த பிள்ளையாரை வழிபட மறந்து விட்டனர்.
பின்னர் அமிர்தம் வெளிப்பட்டபோது அமிர்தகலசத்தை எடுத்து பிள்ளையார் மறைத்து வைத்து விட்டார்.
இதனால் அவர் கள்ளவாரணப் பிள்ளையார் என அழைக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.
பொதுவாக சிவன் கோவில்களில் முன்புறம் பிள்ளையார் சன்னதி இருக்கும்.
ஆனால் திருக்கடையூரில் கள்ளவாரணப் பிள்ளையார் ஒளிந்து கொண்டு இருப்பதால் அவரை தேடி கண்டுபிடித்து தரிசனம் செய்ய வேண்டும்.
பின்னர் தேவர்கள் கள்ளவாரணப் பிள்ளையாரை வழிபட்டு அமிர்தகலசத்தை திரும்பப்பெற்றனர்.
இங்கு பிள்ளையார் மறைத்து வைத்த அமிர்தகலசம் நாளடைவில் லிங்க வடிவாக மாறிவிட்டது.
இதையே பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.