ஆன்மிக களஞ்சியம்

அனைத்து விக்கிரகங்களும் மரகதப்பச்சை கல்லினால் செய்யப்பட்டுள்ள அதிசயம்

Published On 2024-05-13 11:54 GMT   |   Update On 2024-05-13 11:54 GMT
  • அருணகிரிநாதர் நான்கு திருப்புகழ்களினால் இந்த தலத்தைப் பாடியுள்ளார்.
  • அருணகிரிநாதர் பாடிய 10000 திருப்புகழ்களில் நம் கைக்கு கிடைத்து இருப்பவை 1330 திருப்புகழ்தான்.

இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை.

முருகன் சிலை கூட முன்பு மரகதபச்சை கல்லில் இருந்து காலப்போக்கில் பின் நிறுவப்பட்டபோது கருங்கல்லில் செய்யப்பட்டிருக்கலாம்.

இதுபோல் எல்லா விக்கிரகங்களும் மரகதப்பச்சை கல்லில் உள்ளது போல் வேறு எந்தக் கோவிலிலும் இல்லை.

அருணகிரிநாதர் நான்கு திருப்புகழ்களினால் இந்த தலத்தைப் பாடியுள்ளார்.

அருணகிரிநாதர் பாடிய 10000 திருப்புகழ்களில் நம் கைக்கு கிடைத்து இருப்பவை 1330 திருப்புகழ்தாம்.

அவற்றுள் 224 ஸ்தலங்களை பாடியுள்ளார். திருப்புகழ் பாடல் பெற்ற தலங்களில் 9 இடங்கள் இதுவரை கண்டறியப்படாமல் இருக்கின்றன.

கண்டறியப்பட்ட 215 தலங்களில் 35 தலங்களை சிறப்பாக பாடியுள்ளார்.

8 தலங்களில் 4 திருப்புகழ் பாடி இருக்கிறார். 6 தலங்களுக்கு அர்ச்சனை திருப்புகழ் பாடியுள்ளார்.

திருப்புகழில் பாடப்படும் நாயகனாக முருகன் இல்லாமல் 6 பாடல்களில் பாடும் நாயகனாக விநாயகப் பெருமானை பாடியுள்ளார்.

மேற்கண்ட திருப்புகழ் ஆய்வின்படி 6 அர்ச்சனைத் திருப்புகழில் ஒன்றாக சிறுவைக்கு 'சீதளவாரிஜ பாதா நமோ நம:' என ஒரு பாடலுடன் நான்கு திருப்புகழ் பாடிய 8 தலங்களில் ஒன்றாக சிறுவாபுரியும், அமைந்து இருப்பது சிறப்பு.

Tags:    

Similar News