ஆன்மிக களஞ்சியம்
- உலக உயிர்களை தன் கடைக்கண்ணால் காத்து கரையேற்றுகின்றாள்.
- ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு வடிவழகு கொண்டு விளங்குகிறாள்.
அம்பிகை ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு வடிவழகு கொண்டு வெவ்வேறு திருநாமங்களில் வழங்கப்படுகிறாள்.
மகாசக்தி உமையவளே,
மாரியாக,
காளியாக,
சங்கரியாக,
துர்க்கையாக,
முத்தாரம்மனாக,
இசக்கியம்மையாக
கொலு வீற்றிருந்து உலக உயிர்களை தன் கடைக்கண்ணால் காத்து கரையேற்றுகின்றாள்.
அவளை வணங்கும் போது,
"தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!''
என்று ஆடிசெவ்வாய், ஆடி வெள்ளிகளில் பாடி மகிழ்வோமே!