- எனவே இந்த ஊர் சுப்பிரமணியபுரம் (புரம் ஊர்) என்று வழங்கப்படலாயிற்று.
- பிற்காலத்தில் அது ஆண்டவர் குப்பம் என்று மாறியது. தற்போது ஆண்டார்குப்பம் என்று வழங்கப்படுகிறது.
சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து சுமார் முப்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் தச்சூர் கூட்டுச் சாலையில் இருந்து, இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் ஆண்டார் குப்பம் எனும் ஊர் பச்சை பசேல் வயல்களுடன் அமைந்துள்ளது.
திருவள்ளூரிலிருந்து சுமார் ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலும், பெரியபாளையத்திலிருந்து சுமார் இருப்பது கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் உள்ளது.
ரெயிலில் சென்றால், சென்னையிலிருந்து பொன்னேரிக்குச் சென்று அங்கிருந்து பஸ் மூலம், தச்சூர் செல்லும் வழியாகச்சென்று ஆண்டார்குப்பத்தை அடையலாம்.
புராண காலத்தில் பாலசுப்பிரமணிய கடவுள், இத்தலத்தில் உரோம முனிவருக்கும், சம்வர்த்தனருக்கும் காட்சியளித்தார்.
எனவே இந்த ஊர் சுப்பிரமணியபுரம் (புரம் ஊர்) என்று வழங்கப்படலாயிற்று.
வணங்கும் அடியார்களை ஆண்டு கொண்டு அருள்புரியும் ஆண்டவன் கோவில் கொண்டுள்ள தலம் என்பதால் ஆண்டிகள் குப்பம் (குப்பம் ஊர்) என்று அழைக்கப்பட்டது.
பிற்காலத்தில் அது ஆண்டவர் குப்பம் என்று மாறியது. தற்போது ஆண்டார்குப்பம் என்று வழங்கப்படுகிறது.