ஆன்மிக களஞ்சியம்

ஆஞ்சநேயர் வாலினால் சுற்றிய தழும்புகளுடன் காணப்படும் வாலீஸ்வரர் லிங்கம்

Published On 2024-05-29 11:29 GMT   |   Update On 2024-05-29 11:29 GMT
  • சிவலிங்கத்தில் வாலினால் சுற்றிய தழும்புகள் இருப்பதை இன்றும் காணலாம்.
  • மூலஸ்தான லிங்கத்தின் எதிரில் ஆஞ்சநேயர் இருக்கும் ஒரே சிவாலயம் இது என்பது ஒரு தனிச்சிறப்பு.

ஸ்ரீராமரின் பூஜை நிமித்தமாக ஆஞ்சநேயரால் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட சுயம்புலிங்கத்தை தந்திரமாக அவரிடமிருந்து வாங்கி, ஸ்ரீ காலபைரவர் இங்கு பிரதிஷ்டை செய்தார் அல்லவா?

அந்த லிங்கத்தை ஆஞ்சநேயர் தன் வாலினால் பற்றி, பெயர்த்தெடுக்க முயற்சித்ததனால் ஈஸ்வரருக்கு வாலீஸ்வரர் எனக் காரணப் பெயர் உண்டாயிற்று.

சிவலிங்கத்தில் வாலினால் சுற்றிய தழும்புகள் இருப்பதை இன்றும் காணலாம்.

அவருக்கு எதிரில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கை கூப்பியபடி வழிபடும் நிலையில் பக்த ஆஞ்சநேயராக விளங்குவதையும் நாம் காணலாம்.

மூலஸ்தான லிங்கத்தின் எதிரில் ஆஞ்சநேயர் இருக்கும் ஒரே சிவாலயம் இது என்பது ஒரு தனிச்சிறப்பு.

ஆஞ்சநேயர் தன் வாலினால் லிங்கத்தைச் சுற்றி இழுக்கும் தல வரலாற்றின் ஐதீக சிற்பம் ஆலய தூணிலும் செதுக்கப்பட்டு இருக்கிறது.

மகா சிவராத்திரி அன்று ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ வாலீஸ்வரருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

இரவு வாண வேடிக்கைகளுடன், திரு வீதி உலாவும் மிகச் சிறப்பாக நடைபெறும்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்று ஆலயத்திற்கு வந்து வழிபடுகிறார்கள்.

Tags:    

Similar News