ஆஞ்சநேயருக்கு உதவிய கருடனையும் பல்லியையும் சபித்த கால பைரவர்
- அனுமனும், விரைவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதாலேயே அவரின் அனுமதி பெறாமல் சிவலிங்கம் எடுக்க முனைந்ததை கூறி மன்னிப்பு கேட்டார்.
- ஸ்ரீகால பைரவரும் மகிழ்ச்சி அடைந்து சிவலிங்கத்தை அனுமனுக்கு கொடுத்து அனுப்பினார்.
காசியின் காலபைரவராகிய தன்னிடம் அனுமதி ஏதும் பெறாமல் அனுமன் லிங்கத்தை எடுக்க முயல்வது கண்டு கோபம் அடைந்த ஸ்ரீகால பைரவர், என் அனுமதி இல்லாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம் என்று அனுமனை தடுத்தார்.
முதல் முறை சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு போகும் போதும் இந்த காலபைரவர் ஏதோ சூழ்ச்சி செய்து காளிங்க மடுவில் தடுத்துவிட்டார்.
இப்போது மறுபடியும் தன்னுடைய முயற்சிக்கு தடை செய்கிறார் என்று கோபம் அடைந்த அனுமன் கால பாரவரை தாக்கத் தொடங்கினார்.
ஆணவத்தால் செய்த போராகையால் அனுமனுக்கு தோல்வியே கிட்டுகிறது.
அந்த சமயத்தில் அங்கு வந்த முனிவர்கள் காலபைரவரை வணங்கி, "உலக நன்மைக்காகவும், ராமனின் பெருமைக்காகவும் இந்த சிவலிங்கம் தென்னாடு போக அனுமதிக்க வேண்டும்" என்று வேண்டினார்கள்.
அனுமனும், விரைவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதாலேயே அவரின் அனுமதி பெறாமல் சிவலிங்கம் எடுக்க முனைந்ததை கூறி மன்னிப்பு கேட்டார்.
ஸ்ரீகால பைரவரும் மகிழ்ச்சி அடைந்து சிவலிங்கத்தை அனுமனுக்கு கொடுத்து அனுப்பினார்.
தன் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்கு துணை புரிந்ததால் கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், சுயம்புலிங்கத்தை அனுமனுக்கு உறுதி செய்த பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக்கூடாது என்றும் ஸ்ரீகால பைரவர் சாபமிட்டார்.
அவரின் அந்த சாபப்படியே இன்றும் காசியின் நகர எல்லையில் கருடன் பறப்பதில்லை. அங்கே பல்லிகளும் ஒலிப்பதில்லை.