ஆன்மிக களஞ்சியம்

அண்ணி வடிவில் வந்து ராமலிங்க வள்ளலார் அடிகளுக்கு சாதம் பரிமாறிய அன்னை

Published On 2023-09-02 13:15 GMT   |   Update On 2023-09-02 13:15 GMT
  • இந்த தலவிருட்ச மரமாகிய அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் புரிந்து சிவனருள் பெற்றார்.
  • அடியார் பசித்திருக்க அன்னை பொறுப்பாளோ?

அண்ணி வடிவில் வந்து ராமலிங்க வள்ளலார் அடிகளுக்கு சாதம் பரிமாறிய அன்னை

ராமலிங்க அடிகள் தனது 12வது வயதிலிருந்து 35வது வயது வரை 24 ஆண்டுகள் இடைவிடாமல் இந்த ஒற்றியூர் இறைவனை வந்து வணங்கினார்.

இந்த தலவிருட்ச மரமாகிய அத்தி மரத்தின் கீழ் அமர்ந்து தவம் புரிந்து சிவனருள் பெற்றார்.

அவர் அருளிச் செய்த 6 திருமுறைகளில் 3 திருமுறைகள் முற்றிலும் திருவொற்றியூரின் மேன்மையை உணர்த்துகின்றன.

ஆதிபுரிஸ்வரர் மீது எழுத்தறி பெருமான் மாலை என 31 பாடல்களையும், வடிவுடையம்மன் மீது ஸ்ரீ வடிவுடை மாணிக்க மாலை என 101 பாடல்களையும் பாடியுள்ளார்.

ஸ்ரீ தியாகராஜ பெருமானது பவனி பற்றியும் சிறப்பாக பாடியுள்ளார்.

திருவொற்றியூர் முருகன் கற்பூரம் ஏற்ற காசு இன்றி மிகவும் வருந்தி பாடியுள்ளார்.

"அருமருந்தே தணிகாசலம் மேவும் ஆருயிரே

திருமருங்கார் ஒற்றியூர் மேவிய நின் திருமுன்னதால்

ஒருமருங்கு ஏற்ற என் செய்வேன்

கற்பூர ஒளியினுக்கே" என்று வருந்தி பாடியுள்ளார்.

அடியார் பசித்திருக்க அன்னை பொறுப்பாளோ?

ஒருநாள் இரவு அன்னை ஸ்ரீ வடிவுடையாளை தரிசித்து கால்நோக நடந்து சென்று நள்ளிவு ஆனதால் வீட்டில் அண்ணியை எழுப்ப மனமின்றி பசியோடு வீட்டுத் திண்ணையில் ஸ்ரீ ராமலிங்க அடிகள் தூங்கச் சென்றார்.

அண்ணி வடிவில் அன்னை ஸ்ரீ வடிவுடையாளே அவருக்கு சாதம் தந்து அருள் செய்தாள்.

குழந்தையின் பசியை பொறுக்காது ஞானபால் தந்தவளாயிற்றே? அடியாரை பசிக்க விடுவாளோ? என்று ராமலிங்க அடிகளார் பாடுகிறார்.

Tags:    

Similar News