ஆன்மிக களஞ்சியம்

அனுசம் நட்சத்திரத்துக்காரர்களுக்கு பரிகார தலம்

Published On 2024-01-25 12:20 GMT   |   Update On 2024-01-25 12:20 GMT
  • அர்ச்சுனம் என்னும் வடசொல்லுக்கு மருதமரம் என்று பொருள்.
  • அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம்.

வடக்கே வடுகநாட்டிலுள்ள மல்லிகார்ச்சுனத்திற்கும் ஸ்ரீ சைலம் , தெற்கே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருப்புடைமருதூர்க்கும் (புடார்ச்சுனம்)இடையில் இத்தலம் இருப்பதால் இதற்கு இடைமருது (மத்தியார்ச்சுனம்) எனும் பெயர் அமைந்தது.

அர்ச்சுனம் என்னும் வடசொல்லுக்கு மருதமரம் என்று பொருள்.

இம்மூன்று தலங்களிலும் தலவிருட்சம் மருத மரமே. சனிபகவான், சந்திரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

காசிப முனிவர்க்கு இடைமருதீசனாகிய மருதவாணர் பால கண்ணனாகக் காட்சி தந்துள்ளார்.

பட்டினத்தாரின் சீடர் பத்திரகிரியாருக்கும் அவரது சீடருக்கும் முக்தி கிடைத்த தலம்.

பட்டினத்தார் இத்தலம் குறித்து பல பாடல்கள் பாடியுள்ளார். அப்பர், சுந்தரர்,ஞானசம்பந்தர்,மாணிக்கவாசகர் என்று நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்.

அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம்.

அனுஷ நட்சத்திரத்திற்கு இது பரிகார தலம்.

Tags:    

Similar News