- ஆழ்வாரின் பாடல்களை, இசையுடனும் அபிநயத்தோடும் செய்பவர்கள் அரையர்கள்.
- இவர்கள் பெருமாளின் முன்பாக பாடல்களைப் பாடி, ஆடுவார்கள்.
ஆழ்வாரின் பாடல்களை, இசையுடனும் அபிநயத்தோடும் செய்பவர்கள் அரையர்கள்.
அரசர் என்ற சொல்லின் திரிபு இது.
அரசர்கள் தலையில் மகுடம் கட்டிக் கொள்வதைப் போல், இவர்கள் தலையில் பட்டுக் குல்லாய் அணியும் உரிமை பெற்றிருந்தனர்.
இவர்கள் பெருமாளின் முன்பாக பாடல்களைப் பாடி, ஆடுவார்கள்.
தங்கள் கையில் தாளம் ஒன்றை ஏந்தி, பாசுரத்தின் பொருள் விளங்குமாறு அபிநயம் செய்தபடியே பாடுவார்கள்.
நடிப்பு, முத்திரைகள், இசை என்று நுணுக்கமாக அறிந்து, அவற்றோடு பொருந்தி, பார்ப்பவரைப் பிணிக்கும்படி அமைவது அரையர் சேவை.
இசையால் இறைத்தொண்டு புரியும் பாணியை அரையர் சேவை என்றும் சொல்லலாம்.
பகல் பத்து உற்சவத்தின் பெரும் சிறப்பு என்று இந்த அரையர் சேவையை நிச்சயமாகச் சொல்லலாம்.
இசை, நடனம், நடிப்பு என்று மூன்றும் பரிணமித்த தெய்வீகக் கலை விருந்தாக அமைந்த இந்த அரையர் சேவையின் ஆரம்பம் இந்தத் திருவரங்கம் தான்.
இன்றும் கூட அரையர் சேவையின் அழகைக் கண்டு ஆனந்திக்க வேண்டுமென்றால், பகல் பத்து உற்சவத்தில் பங்கேற்றால் புரியும்.
இந்தப் பத்து நாட்களிலும் தினமும் இரண்டு முறை நடைபெறும் அரையர் சேவை, ஒவ்வொரு முறையும் மூன்று மணி நேரத்துக்கு மேல் நடைபெறும்.
அர்ஜூன மண்டபத்தில் நடக்கும் இந்த அரையர் சேவையை தரிசித்துப் பார்த்தால் பாசுரம் புரியாதவருக்கும் புரியும்.
ஆழ்வார்களின் உள்ளம் எவ்வளவு தூரம் பெருமாளிடம் ஒன்றியிருந்தது என்பதை உணர முடியும்.