அர்த்தாநாரீஸ்வரர் அருள்பாலிக்கும் தலங்கள்
- உமையை அருகில் நிறுத்தி ஆட்கொண்டவர் உமையருபாகன்.
- திருமந்திரத்தில் குண்டலக்காதி என்று பாதி பெண் வடிவை இறைவன் ஏற்ற முறையைத் திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.
பாதித்திருமேனி பெண்ணுருவாக விளங்கும் அர்த்தநாரீஸ்வரருக்கும் பாதித்திருமேனிய பராசக்தியைக் கொண்டு அருள்புரிந்த உருவிற்கும் வேறுபாடுகள் உண்டு.
உமையை அருகில் நிறுத்தி ஆட்கொண்டவர் உமையருபாகன்.
பரப்பிரம்மாகத் தெரியும் அர்த்தநாரீஸ்வரக் கோலத்தின் திருஉருவங்கள் பக்தர்களது மனதில்
மெய்யான கடவுள் பற்றிய மெய்ஞானத்தையும், முழுமையான விஞ்ஞானத்தையும், ஆண், பெண் வேறுபாடு இல்லாத சீரிய சமுதாயத்தையும்
சிறந்த நாகரீகம் கொண்ட அரிய கலை உணர்வையும், மறுபடியும் வந்து பிறவாமல் கடவுளோடு சேர்ந்து வாழும் முதிர்ந்த முக்தி நிலையையும்
தெளிவுபடுத்தும் அற்புத வடிவமாக உள்ளன என்பது உண்மையே.
இத்திருமேனிகள் ஸ்ரீசைவம் மல்லிகார்ஜுனர் திருக்கோவில், திருக்கண்டியூர் வீரட்டேஸ்வரர் கோவில் திருவையாறு, திருவேதிக்குடி ஆகிய தலங்களில் உள்ளன.
திருமந்திரத்தில் குண்டலக்காதி என்று பாதி பெண் வடிவை இறைவன் ஏற்ற முறையைத் திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.