ஆன்மிக களஞ்சியம்
null

அருள்மிகு துர்க்கை சன்னதி

Published On 2023-10-11 12:44 GMT   |   Update On 2023-10-17 07:03 GMT
  • செவ்வாய் மற்றம் வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சை பழ விளக்கேற்றினால் விவாகம் கைகூடும்.
  • சனிக்கிழமைகளில் தொடர்ந்து சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், சகலவிதமான தொல்லைகளும் நீங்கும்.

பிரதான திருக்கோவிலின் உள்பிரகாரத்தில் வடக்குப் பக்கத்தில் எழுந்தருளியருக்கும் இந்த அம்பாளை,

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய தினத்தில், ராகு காலத்தில், எலுமிச்சை மற்றும் நெய்யினால் விளக்கும்

எலுமிச்சை மாலை அணிவித்து வழிபட, மன நிம்மதியும் இல்லத்தில் அமைதியும், வசீகரத்தன்மையும்

கைகூடி வருவதாக பக்தர்கள் வாயிலாக கண்ட உண்மையாகும்.

துர்க்கை சன்னதியில் ராகு காலத்தில் செவ்வாய் மற்றம் வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சை பழம் விளக்கேற்றினால்

விவாகம் கைகூடும் என்பது நம்பிக்கையாகும்.

நவக்கிரகம்

இத்திருத்தலத்தில் அமைந்துள்ள நவக்கிரகத்தில் சனிக்கிழமைகளில் தொடர்ந்து சனீஸ்வரனுக்கு எள்தீபம் ஏற்றி

வழிபட்டு வந்தால், சகலவிதமான தொல்லைகளும் நீங்கி வாழ்வில் அனைத்து விதமான பலன்களையும் பெறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

Tags:    

Similar News