ஆன்மிக களஞ்சியம்
null

அருள்மிகு மகிஷாசுர மர்த்தினி

Published On 2023-10-11 12:49 GMT   |   Update On 2023-10-17 07:02 GMT
  • நவராத்திரி ஒன்பது நாளும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு வரப்படுகிறது.
  • மகாகாளி இச்சன்னதியில் சாந்தமாக, பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்.

அருள்மிகு அணி அண்ணாமலையார் சன்னதியில் இடது புறம் மகிஷனை சம்ஹாரம் செய்த மகா காளி,

இத்திருத்தலத்தில் சாந்தஸ்வருபியாக தெற்கு முகமாக நின்ற கோலத்தில் காட்சியளித்து,

தன்னை வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளித்து அருள்பாளித்து வருகிறார்.

பொதுவாக உக்கிரமான கோர ஸ்வருபத்தில் இருக்கும் மகாகாளி இச்சன்னதியில் சாந்தமாக,

மகிஷாசுரமர்த்தினியாக பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்.

சென்னையில் வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத அளவிற்கு நம் அம்பாள் வீற்றிருந்து, அருளை அளித்து, சங்கடங்களை தீர்த்துவருகிறார்.

ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் அம்பாளுக்கு வெண்ணெய் சாற்றி, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால்,

தீராத வியாதியும் நீங்கி, மனநிறைவும் காரியத்தில் வெற்றியும், சுபச்செய்தியும் கிடைக்கும் என்பது

பக்தர்களின் ஏகோபித்த நம்பிக்கையாகும்.

நவராத்திரி ஒன்பது நாளும் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் பக்தர்களால் செய்யப்பட்டு வரப்படுகிறது.

வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய் கிழமைகளில் பெருவாரியான பக்தர்கள் தரிசித்துச் செல்கின்றனர்.

Tags:    

Similar News