- தமிழ்க்கடவுள் அல்லது தமிழர்களின் தெய்வமாகக் கருதப்படுபவர் முருகப் பெருமான்.
- உலகம் உய்வதற்காக பரம்பொருளான சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட அவதாரமே ஆறுமுகக் கடவுளாகும்.
தமிழ்க்கடவுள் அல்லது தமிழர்களின் தெய்வமாகக் கருதப்படுபவர் முருகப் பெருமான்.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகள் ஒன்றிணைந்து ஆறுமுகனாய் உருவானதாக புராண வரலாற்றுச் செய்திகள் மூலம் அறிகிறோம்.
ஆறுமுகன் அவதரித்தல் :
உலகம் உய்வதற்காக பரம்பொருளான சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட அவதாரமே ஆறுமுகக் கடவுளாகும்.
கருணையே வடிவான ஆறு திருமுகங்களையும், பன்னிரெண்டு கரங்களையும் தாங்கி அருள் பாலித்து அடியவர்களை காக்கும் கலியுகக் கடவுள் அவர்.
முருகு எனும் சொல் அழகு, இளமை, தெய்வ நலம், மணம் ஆகிய பொருள்களைக் குறிக்கும். "முருகு" என்னும் திருப்பெயரோடு "அன்" விகுதி சேர்த்து முருகன் என்னும் திருப்பெயர் சூட்டிப் போற்றி வழிபடுகின்றனர்.
அப்பேற்பட்ட முருகப் பெருமானின் அவதாரப் பெருமையையும், ஆறுபடை வீடுகளின் தலச் சிறப்பையும் வாசகர்களுக்கு அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.