அதிகாரத் தோரணையுடன் முருகன் அருள்பாலிக்கும் ஒரே தலம்
- பிறகு பிரம்மனை முருகன் சிறையில் அடைந்தார். இந்த நிகழ்வு நடந்த தலமாக ஆண்டார்குப்பம் கருதப்படுகிறது.
- இந்த தலத்தில் உள்ள மூலவர் பாலசுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார்.
சென்னை செங்குன்றம் அருகில் உள்ள ஆண்டார் குப்பம் முருகன் தலமும் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் பெருமைகளைக் கொண்டது.
படைப்புத் தொழில் செய்து வரும் பிரம்மனின் ஆணவத்தை அடக்க, பிரணவ மந்திரம் சொல்ல சொல்லி அவர் தலையில் முருகன் கொட்டினார்.
பிறகு பிரம்மனை முருகன் சிறையில் அடைந்தார். இந்த நிகழ்வு நடந்த தலமாக ஆண்டார்குப்பம் கருதப்படுகிறது.
இந்த தலத்தில் உள்ள மூலவர் பாலசுப்பிரமணியர் என்று அழைக்கப்படுகிறார்.
இவர் தன் தொடை மீது இரு கைகளையும் வைத்தப்படி அதிகாரத் தோரணையுடன் பிரம்மனை கேள்வி கேட்பது போல சிலை அமைப்பு உள்ளது.
இந்த மூலவர், சுயம்புவாக தோன்றிய மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
முருகன் அதிகார தோரணையுடன் இருப்பது, தமிழ்நாட்டில் இந்த தலத்தில் மட்டுமே.
அந்த வகையில் ஆண்டார்குப்பம் தலம் ஒரு அபூர்வ தலம்.
இங்கு வழிபாடு மற்றும் பரிகார பூஜைகள் செய்வது நிறைந்த பலன்களைத் தரும்.