ஆன்மிக களஞ்சியம்

அழகிய சொரூபிணி தேவி கருமாரி

Published On 2023-12-02 12:37 GMT   |   Update On 2023-12-02 12:37 GMT
  • புற்று இருந்த இடத்தில் அம்மனின் திருவடிவச் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
  • புற்று, ஆலயத்தின் ஈசானமூலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.

இன்றைக்கு கருமாரியம்மன் ஆலயத்துக்கு நேர் எதிரே தீர்த்தக்குளம் அமைந்து இருக்கிறது.

புற்று இருந்த இடத்தில் அம்மனின் திருவடிவச் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

புற்று, ஆலயத்தின் ஈசானமூலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது.

மஞ்சளும் குங்குமமும் துலங்கக் காட்சியளிக்கும் புற்றில் ஒரு திரிசூலம் எழுந்து நின்று,

அன்னையை அடி பணிவோருக்கு அபயம் அளிக்கிறது.

புற்றில் பாலையும் முட்டைக் கருவையும் இடைவிடாது சமர்ப்பிக்கிறார்கள் பக்தர்கள்.

அன்னை காட்சி தரும் கர்ப்பக்கிருகத்தில் பதிவிளக்கு என்னும் அணையா விளக்கு, அது ஏற்றப்பட்ட நாளில்

இருந்து எரிந்து கொண்டே இருக்கிறது.

நெய் உண்டு எரியும் இந்த விளக்கின் சுடரொளியில், அன்னையின் இரு வடிவங்களும் அற்புதமாகக் காட்சியளிக்கின்றன.

சிரசு மட்டும் காட்டும் உக்கிர நாரணியின் கண்கள் அல்லவரை அச்சப்படுத்துகின்றன.

நல்லவருக்கு அபயமளிக்கின்றன.

சிவை வடிவமான கருமாரி காண்போர் கருத்தைக் கவரும் விதத்தில் அழகுற காட்சி தருகிறாள்.

மேல் வலதுகரத்தில் உடுக்கையும் பாம்பும். மேல் இடது கரத்தில் திருசூலம்.

கீழ் வலது கரத்தில் கத்தி கீழ் இடதுகரத்தில் அமுத கலசம்!

ஒரு காலத்தில் மண்டையோட்டு மாலை தவழ்ந்த அன்னையின் மார்பில், இப்போது எலுமிச்சை மாலை.

உதட்டில் சிறு புன்னகை. கிழக்கு நோக்கும் கருமாரி! கண் மூடி வணங்கி நின்றால் உடலில் சிலிர்ப்பு ஓடுகிறது.

மனதில் அமைதி நிலவுகிறது.

Tags:    

Similar News