- சித்திரை, ஐப்பசி, ஆவணி மாத பரணி, வெள்ளி, செவ்வாய் கிழமைகள் யோக பைரவருக்கு சிறப்பான தினங்கள்.
- எழுதி வைத்து தேய்பிறை அஷ்டமி பவுர்ணமி தினங்களில் படித்தால் நல்ல முன்னேற்றம் காணலாம்.
ஓம் பயம் போக்குபவரே போற்றி
ஓம் குதிரை வாகனரே போற்றி
ஓம் யோகினி தேவதையே போற்றி
ஓம் கல்லாபினி தேவியே போற்றி
ஓம் அன்பு வடிவே போற்றி
ஓம் ஆனந்த உருவே போற்றி
ஓம் இனியதைச் செய்வாய் போற்றி
ஓம் பயம் போக்குபவரே போற்றி
ஓம் குதிரை வாகனரே போற்றி
ஓம் பொன்கோட்டை வசிப்போய் போற்றி
ஓம் மீன்கொடி மன்னவா போற்றி
ஓம் பெரும் செல்வ மகனே போற்றி
ஓம் மகர ஆலயத் தெய்வமே போற்றி
ஓம் பாக்யேஸ்வரி பதியே போற்றி
ஓம் ஆனந்தவல்லி மாக்பரே போற்றி
ஓம் உல்லாசினி யே போற்றி
ஓம் நிராகுலியே போற்றி
ஓம் யோகினி தேவதையே போற்றி
ஓம் கல்லாபினி தேவியே போற்றி
ஓம் இதேஸ்வரி தேவியே போற்றி
ஓம் விநோதினி சக்தியே போற்றி
ஓம் சட்குல தேவியரே போற்றி
ஓம் அட்ட பைரவரே போற்றி
ஓம் அசிதாங்க பைரவரே போற்றி
ஓம் குரு பைரவரே போற்றி
ஓம் சண்ட பைரவரே போற்றி
ஓம் குரோத பைரவரே போற்றி
ஓம் உன் மத்த பைரவரே போற்றி
ஓம் கபால பைரவரே போற்றி
ஓம் பீஷண பைரவரே போற்றி
ஓம் சம்மார பைரவரே போற்றி
ஓம் அதிஷ்டம் தரும் பைரவரே போற்றி
ஓம் சௌபாக்ய பைரவரே போற்றி
ஓம் ஐஸ்வர்யம் தரும் பைரவரே போற்றி
ஓம் பொன்மணி தனம் அருள்வாய் போற்றி
ஓம் யோகங்களைக் கொடுக்கும் யோக
பைரவ தேவனே போற்றி! போற்றி!
இந்த போற்றித் திருஉருவை வியாபாரம், நகைக்கடை வைத்திருப்பவர்கள் தங்கள் லாபக்கணக்கு நோட்டு புத்தகம் மற்றும் ரெக்கார்டுகளில் எழுதி வைத்து தேய்பிறை அஷ்டமி பவுர்ணமி தினங்களில் படித்தால் நல்ல முன்னேற்றம் காணலாம்.
சப்த முகீ என்கிற 7 முக ருத்ராட்சத்தை கல்லாப் பெட்டியில் வைத்து 3 முறை கூறிட யோக பைரவர் அருள் செய்து வியாபார வசியத்தை ஏற்படுத்திட மக்கள் வருவார்கள்.
சித்திரை, ஐப்பசி, ஆவணி மாத பரணி, வெள்ளி, செவ்வாய் கிழமைகள் யோக பைரவருக்கு சிறப்பான தினங்கள்.
எல்லா மாதங்களிலும் வரும் பவுர்ணமி அன்று அதிகாலை யோக பைரவரை செவ்வரளி, ரோஜா மலர்களால் அர்ச்சனை செய்து மார்பில் அத்தர்புணுகு, ஜவ்வாது மார்பில் சாற்றுவது நல்லது என்று பைரவ பூஜை செய்பவர்கள் சொல்வது வழக்கம்.