ஆன்மிக களஞ்சியம்

பைரவரை வணங்க உகந்த மாத அஷ்டமி

Published On 2024-06-05 10:39 GMT   |   Update On 2024-06-05 10:39 GMT
  • ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம்.
  • எனவே அன்று பைரவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

பைரவருடைய உடலின் அங்கங்களாக 12 ராசிகள் அமைந்துள்ளன.

அவை மேஷம் சிரசு, ரிஷபம் வாய், மிதுனம் இரு கைகள், கடகம் மார்பு, சிம்மம் வயிறு, கன்னி இடை, துலாம் புட்டங்கள், விருச்சிகம் மர்ம ஸ்தானங்கள், தனுசு தொடை, மகரம் முழங்கால்கள், கும்பம் காலின் கீழ் பகுதி, மீனம் கால்களின் அடிப்பாகம் என 12 ராசிகளும் நிறைந்துள்ளன.

பைரவரின் சேவகர்களாக நவக்கிரகங்களும் இருப்பதால் தன்னை வணங்கக் கூடிய பக்தர்கள் எந்த ராசியைச் சேர்ந்தவராயினும் நவக்கோள்களில் எந்தக் கோளின் தாக்கத்தால் பாதிப்பு வந்தாலும் கெடுதல்கள் அனைத்தில் இருந்தும் விடுவிப்பார்.

பைரவரை வழிபட ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஜென்மச்சனி, அர்த் தாஷ்டமச்சனி போன்ற சனி தோஷங்கள் விலகி விடும்.

பைரவப்பெருமானை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச் சிறந்த நாளாகும்.

ஏனெனில் அன்றைய நாளில் அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம்.

எனவே அன்று பைரவரை வணங்கிட மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

பைரவ உருவங்களில் பல உண்டு என்றாலும் பிரதானமானவராகக் கருதப்படுபவர் கால பைரவர்.

காசி கோவிலில் கால பைரவர்தான் பிரதானமாக வணங்கப்படுகிறார்.

சிவன் கோவில்களில் கால பைரவர்தான் காவல் தெய்வமாக விளங்குகிறார்.

காலனாகிய எமனையே சம்காரம் செய்து மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த மூர்த்தி இவர்.

எனவே இவரை கால சம்கார மூர்த்தி என்றும் அழைக்கின்றனர்.

Tags:    

Similar News