ஆன்மிக களஞ்சியம்

பக்தர்களுக்கு, யோக அழைப்பு விடுக்கும் 'அண்ணாமலையார்'

Published On 2023-11-24 12:22 GMT   |   Update On 2023-11-24 12:22 GMT
  • பெரும்பாலான பக்தர்களை அவரே ‘வா’ என்று அழைத்து விடுவார்.
  • பக்தர்கள் கிரிவலம் வரும் போது சுற்றியுள்ள லிங்கங்களை தவறாது வழிபட வேண்டும்.

திருப்பதிக்கும், திருவண்ணாமலைக்கும் லட்சக்கணக்கில் கூட்டம் திரண்டு வரக்காரணம் இரண்டு தெய்வங்களுமே

அதிசயிக்கத்தக்க வகையில் பக்தர்களுக்கு ஒரு நாள் 'விசேஷ அழைப்பு விடுப்பார்கள்' என்பது தான்!

திருப்பதிக்கோ, திருவண்ணாமலைக்கோ உடனே புறப்பட்டு சென்று, வரம் வாங்கித் திரும்ப வேண்டும்

என்று நினைக்கிற எல்லோருக்குமே அந்த பாக்யம் கிடைத்து விடாது

பெரும்பாலான பக்தர்களை அவரே 'வா' என்று அழைத்து விடுவார்.

14 கி.மீ கிரிவலப்பாதையை எளிதாக நடக்க வைத்து விடுவார்.

இந்த முதல் பயணத்திலேயே உங்கள் உள்ளத்தில் புதிய உணர்வுகளை காண்பீர்கள்.

"இனி எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்று நினைக்க ஆரம்பிப்பீர்கள்.

உற்சாகமான பல விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும்.

உங்களையும் அறியாமல் தினமும் 'ஓம் நமச்சிவாயா' என்று உச்சரிக்க தொடங்குவீர்கள்.

அடுத்து, இரண்டாவது பவுர்ணமிக்கு நம்மால் போக முடியுமா?

என்ற சிந்தனை உங்கள் சூழ்நிலை நிமித்தமாக தலை தூக்க ஆரம்பிக்கும்.

ஆனால் என்ன ஆச்சரியம்! மிகச் சரியாக அடுத்த பவுர்ணமி தினத்தன்று நீங்கள் அங்கு இருப்பீர்கள்.

இது அண்ணாமலையார் நடத்தும் அற்புதம் தான்!

இந்த இரண்டாவது பயணத்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் நடக்கத் துவங்கும்.

நீங்கள் எதை நினைத்தீர்களோ அது நிறைவேறும்.

பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். மனச்சஞ்சலங்களில் இருந்து முற்றிலுமாக விடுபடத் தொடங்கி இருப்பீர்கள்!

மூன்றாவது பவுர்ணமிக்கு அண்ணாமலையார் சில பக்தர்களை சோதிப்பார்,

" இவன் தானாக முயற்சி எடுத்து வருகிறானா? பார்ப்போம்' என்று வேடிக்கை பார்ப்பார்.

மிகுந்த இறை பக்தி கொண்டு பக்தர்கள் இந்த சோதனையை கடக்க வேண்டும்.

பெரும் முயற்சி எடுத்து செல்ல வேண்டியது இருக்கும்.

சோதனைகளை கடந்து மூன்றாவது பவுர்ணமிக்கு போய் விட்டு திரும்புபவர்களுக்கு அருணாச்சலேஸ்வரர்

அருள் மள, மளவென வரிசையாகத் தேடி வரும்.

இரண்டாண்டு காலமாக மனதுக்குள் அழுது புழுங்கி, புலம்பிக் கொண்டிருந்த விஷயங்கள் மகிழ்ச்சி தரும் படியாக மாறும்.

சில பக்தர்கள் சோதனையை கடக்க முடியாமல் மூன்றாவது பவுர்ணமியை கோட்டை விட்டு விடுவார்கள்.

அவர்கள் அண்ணாமலையாரை தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க, நாலாவது பவுர்ணமிக்கு

அவரே வரும்படி செய்து அருள் பாலித்து விடுவார்.

பக்தர்கள் கிரிவலம் வரும் போது சுற்றியுள்ள லிங்கங்களை தவறாது வழிபட வேண்டும்.

அவ்வப்போது மலைப்பகுதியை பார்த்து 'ஓம் நமச்சிவாயா நமஹ' ஓம் அருணாச்சலேஸ்வரா நமஹா'

என்ற மந்திரத்தை உச்சரித்தபடி செல்ல வேண்டும்.

முழுமையான பக்தி உணர்வுடன் வலம் வருபவர்களுக்கு நினைத்தது கை கூடும்.

இதை தொடர்ந்து ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் சென்று வருபவர்கள் மிகவும் யோகம் உடையவர்கள்.

அவர்களின் வாழ்க்கை அமைதியான நீரோடை போல அமையும்.

மிகுந்த மனவலிமை பெறுவார்கள். எதையும் எளிதாக வெல்வார்கள்.

அவர்களது 'சொல்வாக்கு' பலிக்கும் அளவுக்கு உயர்வார்கள்.

அண்ணாமலையாரை இன்றே நினையுங்கள். நினைத்த காரியம் யாவும் நிறைவேறக் காண்பீர்கள்.

Tags:    

Similar News