ஆன்மிக களஞ்சியம்

பூலோக கைலாயம்

Published On 2024-02-10 10:44 GMT   |   Update On 2024-02-10 10:44 GMT
  • நேராக சிவனை தரிசித்து, அம்பாளை தரிசித்து விட்டு வெளியேறுதல் முழுமையான தல தரிசனம் ஆகாது.
  • இத்தல நாயகன் நடராஜன் ஆடல் வல்லானாய் இருப்பதால் கூத்தன் கோவில் என்ற திருநாமமும் உண்டு.

கோவில்களில் உள்ள அனைத்துச் சன்னதிகளையும் தரிசித்து, பின்னர் அம்பாளை தரிசித்து, கடைசியாகத்தான் மூலவர் சிவனை தரிசிக்க வேண்டும்.

நேராக சிவனை தரிசித்து, அம்பாளை தரிசித்து விட்டு வெளியேறுதல் முழுமையான தல தரிசனம் ஆகாது.

எனவே இத்திரு கோவில்களில் உள்ள நவகிரக சன்னதி, பதஞ்சலி சன்னதி, கம்பத்து இளையனார் சன்னதி ஆகிய சன்னதிகளை வணங்க வேண்டும்.

திருக்கோவில் சிறப்பு தங்களது பக்தியால் அறுபத்து மூவர் என்று சிறப்பு பெற்றவர்களுள், முக்கியமானவர்கள் நால்வர்.

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோரே அந்நால்வர்-என்பது சிவனடியார்களுக்குத் தெரிந்ததுதான்.

இவர்கள் நால்வரும் இத்திருத்தல நாயகன் திருமூல நாதர் மீதும், உமையாம்பிகை மீதும் தேவாரப் பாடல்கள் பாடியுள்ளனர்.

இத்தல நாயகன் நடராஜன் ஆடல் வல்லானாய் இருப்பதால் கூத்தன் கோவில் என்ற திருநாமமும் உண்டு.

தில்லை மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் தில்லை கூத்தன் கோவில் என்றும் அழைக்கப்படும்.

சித் என்ற ஞானத்தையும், அம்பரம் என்ற ஆகாயத்தையும் குறிப்பதால் சிதம்பரம்.

அதனால் சிதம்பரம் தில்லை கூத்தன் கோவில் என்றே அழைக்கப்படுகிறது.

சிதம்பரம் என்ற பெயரே வழக்கில் இருந்தாலும் புலிக்கால் முனிவர் வியாக்கிரபாதர் பூசை செய்த காலத்தில் புலியூர் என்றும் இதுவே பூலோகக் கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

Tags:    

Similar News