ஆன்மிக களஞ்சியம்

சந்திரனுக்குரிய திருத்தலங்கள் இரண்டு

Published On 2024-03-28 11:57 GMT   |   Update On 2024-03-28 11:57 GMT
  • சைவத் திருப்பதிகளுள் தேவார பாடல் பெற்ற திருத்தலம் இத்திங்களூராகும்.
  • இது சந்திரன் பூஜித்து பெரும்பேறு பெற்ற ஸ்தலமாகும்.

1. திங்களூர்,

2. திருப்பதி.

திங்களூர்:

திங்கள் என்றால் சந்திரன்.

அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகிய அப்பூதியடிகளின் சொந்த ஊராகும். தமிழ்நாட்டிலுள்ள சைவத் திருப்பதிகளுள் தேவார பாடல் பெற்ற திருத்தலம் இத்திங்களூராகும்.

இது சந்திரனுக்கு உரிய ஸ்தலமாதலால் இப்பெயர் பெற்றது.

இத்தலம் திருவையாற்றிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

திருப்பதி:

இது சந்திரன் பூஜித்து பெரும்பேறு பெற்ற ஸ்தலமாகும். இது ஆந்திர மாநிலம் ரேணிகுண்ட ரயில் நிலையத்திலிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

மலையடிவாரத்திலிருந்து நடந்தும் பஸ் மூலமும் செல்லலாம்.

திருப்பதி சென்று வந்தாலே வாழ்வில் ஒரு திருப்புமுனை உண்டாகும். இக்கோவிலில் எம்பெருமான் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

Tags:    

Similar News